https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 23 பிப்ரவரி, 2023

 23.02.2023


மனங்களின் துளி இன்னொரு அகம்





யோகம் அகவயமான நெறிப்படுத்தலை முன்வைப்பது. அந்த அகவய நெறிப்படுத்தலை கட்டுப்பாடுகள்’ வழியாக எய்த முடியாது. ஏனென்றால் அகத்தை கட்டுப்படுத்துவது இன்னொரு அகம். கட்டுப்படுத்த முயன்றால் அகம் இரண்டாகப் பிளந்து அகமோதல்தான் உருவாகும். அது மனஆற்றலை வீணாக்கி அழிக்கும்.


-ஜெயமோகன்-



ஒருவித திகைப்பை கொடுத்த வரிகள். நினவில் சட்டென பதிந்து விடும் நேர் அல்லது எதிர்மறையான ஒன்று சில நாட்கள் அல்லது வாழ்நாளெல்லாம் தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறது . எவ்வளவு வேகமாக அதை தடுக்க முயன்றாலும் அது அவற்றை தள்ளிக் கொண்டு முன்பிலும் வேகமாக வந்து முழு சித்தத்தையும் மூடிவிடுவதை பார்த்திருக்கிறேன். மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் இன்னும் துல்லியமாக அவை நினைவில் எழுந்தபடி இருக்கின்றது. ஒரு வித பதறும் எண்ணத்துடன் அதை எதிர் கொள்கிறோம்வேண்டாம் என ஒதுக்கும் ஒன்று ஆழ்மனதில் இருந்து எழுந்து வந்தாலும் நினைவை மூடி முன் நிற்கும் அது எவ்வளவு விலக்க நினைத்தாலும் இயல்வதில்லை . நான் அதை இப்படித் தொகுத்துக் கொளவேன் . மனம் என்பது பல்வேறு பிறவிகளின் வழியாக ஆத்மாவுடன் கலந்து வெளிவருகிறது . இன்றைய மனம் என்பதே கூட பல பிறவியில் இருந்த மனம் என்பதில் ஒரு துளி எடுத்து தொகுத்தது என்பதால் அதை எவ்விதத்திலும் அறுதியிட முடிவதில்லை. மரபான நம்பிக்கை கொண்டு அதிலிருந்து மெல்ல வெளிவந்திருக்கிறேன். ஆனால் அது நிகழும் வரை கொள்ளும் அலைக்கழிப்பு ஒரு போராட்டம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக