https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 284 * நிழலைத் தொடுதல் *

ஶ்ரீ:பதிவு : 284 / 371  / தேதி :- 31 டிசம்பர் 2017*  நிழலைத் தொடுதல்   *
ஆளுமையின் நிழல்   ” - 30
கருதுகோளின் கோட்டோவியம் -03

சோனியா காந்தி தலைமை பெறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் முழு நிர்வாக அமைப்பும் மாற்றி அமைக்கப்பட்டுவிடும் , ராஜீவ் காந்தி தலைமை பொறுப்பில் இருந்தபோது தலைவருக்கு சாதகமாக இருந்த அமைப்பு இந்த பத்து வருட காலத்தில் பலவிதமான மாறுதல்களை அடைந்திருந்ததுராஜீவ் காந்திக்கு  அடுத்து வந்த நரசிம்ம ராவ் மற்றும் சீத்தாராம் கேசரி போன்றவர்கள் , பழம்பெரும் தலைவர்களானபடியால் நிர்வாக ரீதியாக தலைவருடன் நல்ல புரிதல் உடையவர்கள் . அகில இந்திய அரசியல் போக்கையும் மாநில தலைவர்களை பற்றியும் அவர்களின்  விசுவாசம் தலைமைப்பண்பு அவருக்கு எதிர்நிற்பவர்கள் யார் என்பதை அனுபவபூர்வமாக அறிந்திருப்பவர்கள் , தங்களின் முடிவுகளுக்கு அறிக்கைகளையோ பிறிதொருவரின் வழிகாட்டலையோ எதிர்நோக்கி நிற்பவர்கள் அல்லர்

மேலும் அவரிடம் தவறான தகவல்களை அளிக்க அவரது நிர்வாகத்தின் கீழ் உள்ள நிர்வாகிகளும் அஞ்சுவர் . அலங்கார வார்த்தைகளுக்கு  மயங்காதவர்களாக பெரும்பாலும் இருப்பதனால் தங்களை சுற்றி துதி கோஷ்டிகளையோ , குறுங்குழு அமைவதையோ அனுமதிப்பதில்லை . அதே போன்ற மனநிலையில் உருவாகி வந்த தலைமுறையை  சேர்ந்தவர் தலைவர் சண்முகம் . அதனால் அணுகுமுறைகளும் முடிவுகளும் பெரும் மாற்றமடைந்துவிடுவதில்லை . ஆனால் சோனியா காந்தி போன்ற பெரும் ஆளுமைகள் தலைமை பொறுப்பிற்கு வருகிற போது அதிரடியான மாற்றங்கள் என்கிற புதிய முயற்சிகள் துவங்கும்போது புதிதாக பொறுப்பிற்கு வருபவர்கள் நிர்வாகத்தை கையிலெடுக்க முயல்வார்கள் . முற்றும் புதியவர்கள் வேகமிக்கவர்களாக , பெரும் மாற்றத்திறகு அறைகூவுபவர்களாக தங்களை முன்னிறுத்திக் கொள்ள முயல்பவர்கள்  . அனுபவங்களின் அடிப்படையில் பதவிக்கு வராததால்  கட்சியின் பழைய நடவடிக்கைகளும் அதிலிருந்த விளைந்த நன்மை தீமைகள் போன்றவற்றை பற்றிய அனுபவம் இல்லாதவர்களாக இருப்பார்கள்  , அவர்களின் அணுகுமுறை அதை ஒட்டி இருக்கும் . அவர்களுக்கு நுட்பங்களை எளிதல் புரியவைத்துவிட முடியாது . அவர்களுக்கு அது புரியும் போது கட்சி அனைவரின் கையிலிருந்து நழுவி இருப்பதை மிக தாமதமாக புரிந்து கொள்வார்கள் 

காந்திய வழியிலான போராட்டத்தின் இயல்பு என்பது மக்களை மீண்டும் மீண்டும் ஒன்று திரட்டுவதுதான். அப்போது அவர்கள் நடுவே உள்ள முரண்பாடுகள்தான் மேலெழுந்து வரும். அம்முரண்பாடுகள் நடுவே ஒய்யாமல் சமரசம் செய்துகொண்டே இருக்கும் அது. அந்தச் சமரசம் வழியாக ஒரு பொதுத்திட்டத்தை ஒரு பொதுக்கனவை அம்மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யும். அதுவே அந்தப் போராட்டத்தின் அடிப்படை வலிமையாகவும் இருக்கும் இது நீண்டகால அளவில் நிகழும் ஒரு செயல்பாடாகும். ஆகவேதான் காந்திய இயக்கம் மிக நிதானமான சீரான படிப்படியான போராட்டத்தை முன்வைக்கிறது

காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஆங்கில அரசை வேருடன்வேரடி மண்ணுடன் ஒழித்துக்கட்டுவதற்கான ஒன்றாக இருக்கவில்லை. அது பிரிட்டிஷ் ஆதிக்கத்துடனான ஒரு நீண்ட உரையாடலாகவே இருந்தது என்பது இன்று வியப்பளிக்கிறது. எப்போதும் அவர் பிரிட்டிஷாருடன் பேச தயாராக இருந்தார். தன் தரப்பை அவர்களுக்கு முன்வைத்துக் கொண்டே இருந்தார். அடைந்தார்அடைந்தவற்றை தக்கவைத்துக் கொண்டு மேலும் பேசினார். பிரிட்டிஷார் தன் எதிரிகள் என அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களை அசுரர்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிக்கவில்லை. அவர்களுக்காகவும் சேர்த்தே தான் போராடுவதாக அவர் சொன்னார். அதனால்தான் பிரிட்டிஷாரை இந்திய அதிகாரத்திலிருந்து அகற்ற அவரால் முடிந்தபோதும் பிரிட்டிஷ் ஜனநாயகத்தையும் பிரிட்டிஷ் நீதிநிர்வாகத்தையும் பிரிட்டிஷ் இதழியலையும் அவரால் வைத்துக்கொள்ள முடிந்தது. இன்றும் இந்திய நாகரீகத்தின் செல்வங்களாக அவை நீடிக்கின்றன. யாருக்கு எதிராக அவர் போராடினாரோ அவர்களுக்கும் அவர் தலைவராக இருந்தார்”.

இந்தியாவைச் சுற்றியிருக்கும் எந்தநாட்டிலும் இல்லாத வலுவான ஜனநாயகம் இந்தியாவில் இருக்கிறது. அதன் குறைகளும் போதாமைகளும் எத்தகையதாயினும் அதை சாதாரணமாகக் கூட நாம் பிறநாடுகளுடன் ஒப்பிட முடிவதில்லை. இந்த ஜனநாயக விழுமியங்கள் சுதந்திரப் போராட்டம் மூலமே இங்கே உருவாகியது. அது காந்தியப் போராட்டமாக இருந்ததே ஒரே காரணம்”. எனகிறார் ஜெயமோகன் தனது இன்றைய காந்தி என்கிற கட்டுரைத்தொகுப்பில்.

இந்த பகுதிகளை நான் மேற்கோள் காட்ட விழைகிறேன் . எந்த ஒரு நிர்வாகமும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவைகள் அல்ல , செயல்பாடுகளால் அடையும் தவறுகளிலிருந்தும் வெற்றிகளிலிருந்தும் தனது அணுகுமுறையை வடிமைத்துக்கொள்கிறது . அந்த அனுபவங்கள் கட்சிக்குள் கொள்கைகளாக கோட்பாடுகளாக சேமித்துவைக்கப்படுகிறது . தலைமை தனது புதிய முடிவுகளுக்கு பாதையை அந்த அனுபவத்திலிருந்து கண்டடைகிறபோது , அதில் தவறுகள் மிக சிறிய அளவில் இருப்பவை அதை அந்த பயணத்தில் சரிசெய்கிற வாய்ப்பு எபோதும் திறந்து வைக்கும்  . 

தலைவருக்கு தில்லியில் இருந்த நெருக்கமான தொடர்புகள் இந்த பத்துவருட இடைவெளி சிதைத்திருந்தது . மேலும் நாராயணசாமி இந்த காலத்தில் தன்னை மிகச்சரியாக வளர்த்தெடுத்திருந்தார். இப்போது தலைவருக்கு தில்லியில் அவரே ஒரு சவால். தன்னை மீளவும் நிறுவிக்கொள்ள வேண்டிய சூழலில் விபரீதமான அரசியலை கையிலெடுத்திப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவருக்கு வேறு வாய்ப்பல்லை. எனக்கும் அப்படித்தான் . நான் எனது கனவுகளை என் நிழலை போல துரத்திப்பிடிக்கும் முயற்சியை துவக்கினேன். 

சனி, 30 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 283 * ஊழின் பிறிதொரு கணக்கு *

ஶ்ரீ:பதிவு : 283 / 370 / தேதி :- 30 டிசம்பர் 2017


* ஊழின் பிறிதொரு கணக்கு *

ஆளுமையின் நிழல்   ” - 29
கருதுகோளின் கோட்டோவியம் -03


விரைவில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக தலைவர் தில்லி செல்லவிருப்பதை எனக்கு முதலில் சூரயநாராயணன் தான் சொன்னார். அது தனக்கு சீட்டு கேட்டா? என்கிற சந்தேகத்தில் நான் இருந்தேன். 1991 நடந்த சட்டமன்ற தேர்தலில் உட்கட்சி சிக்கலின் காரணமாக அவர் தோற்கடிக்கப்பட்டு , முதல்வராகும் வாய்ப்பை இழந்த பிறகு ,நடைபெற்ற அனைத்து சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பலர் வற்புறுத்தி சொன்னபோதும் உறுதியாக மறுத்துவிட்டார் . இப்போது என்ன மனநிலையில் இருக்கிறார் என்கிற ஆவலே நான் அவருடன் தனிமையில் பேசும்  வாய்பை காத்திருந்தேன்

நான் அவர் வீட்டிற்குள் நுழைந்த போது , அனைத்து மட்ட தலைவர்களும் அவருடன் அவர் நீண்ட ஆலோசனையில் இருந்தார் . வந்திருந்த அனைவரும் அவரிடம் பேசிய  பின்னர் ஒருவர் பின் ஒருவராக கிளம்பி சென்றனர் . நான் தலைவரிடம் பேச அருகணைந்த  போது நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது . அவருடைய அன்றைய நாள் முழுவதுமாக பலருடன் பேச்சுவார்த்தையில்  கழிந்திருந்தது  அவரை மிகவும் சோர்வாக கண்டதும்  , அவர் மீது இரக்கம் ஏற்பட்டு எனக்குள்  சட்டென ஒரு தயக்கம் சூழ்ந்தது , பேசவந்ததை தவிர்த்து அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்தேன்

அவர் மேல்சட்டை கழற்றி கதவில் மாட்டியபடி ரவியிடம் இரவு உணவு கொண்டுவரச் சொல்லிவிட்டு , என்னை கூர்ந்து நோக்கிகாலையிலிருந்து பலர் பேசியாகி விட்டது, நீயும் ஏதோ சொல்ல விழைகிறாய் என்று தெரியும் , சொல்லுஎன்றதும் . நான் அடைந்திருந்த அந்த தயக்கத்தை கடந்து சொல்லவந்ததை தொகுத்துக்கொண்டேன் . அவை தனித்தனியான முடிவுகளாக பிரிந்து கிடக்கின்றன . அனைத்தையும் இப்போது நேர்கோட்டில் கொண்டு வர என்னால் முடியுமானால் , அவருக்கு நான் சொல்ல விழைந்தது நிறைவு பெறும்.

தலைவரின் இயல்பு , அவர் எவ்வளவு தளர்ந்திருந்தாலும் முறையாக தொகுக்கப்பட்ட சொற்களிலிருந்து அவர் தன் களைப்பை கடந்து உத்வேகம் அடைவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன் . சிறிது நேரம் எடுத்துக்கொண்டு சொல்ல நினைத்ததை மிக சுருக்கமாக தொகுத்துக்கொண்டேன் . பின் மெல்ல அவரிடம்எந்த சமன்பாட்டிற்காகவும் , இந்தமுறை சீட்டை இழக்காதீர்கள்என்றேன் . அவர் தனது இருக்கையில் தன்னை நன்றாக அமைந்து கொண்டார். பின் என்னை அருகில் உட்காரச் சொன்னதை நான், மறுத்து நின்று கொண்டே இருந்தேன் . நீண்ட பேச்சை நான் விழையவில்லை என்பதை குறிப்பால் உணர்த்துவதாக அதை அவர் புரிந்து கொண்டார்

பின் மெல்ல சிரித்தபடி , “அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சோனியா காந்தி வரும் வாய்ப்பு மிக சமீபத்தில் இருக்கிறது . இந்த முறை புதுவை பாராளுமன்ற தேர்தலுக்கு நமக்கு கூட்டணி இல்லை என்பது அனேகமாக உறுதியாகிவிட்டது . நாம் தனித்தே இம்முறை களம் காணப்போகிறோம் . புதிதாக வரவிருக்கும் அகில இந்திய தலைமைக்கு தென்னிந்திய பகுதியில் காங்கிரஸ் கட்சி இன்று பலமாக இருப்பது நமது புதுவையில் மட்டுமே. என்பதை இந்த சந்தரப்பத்தில் உணர்த்தியாக வேண்டும். புதுவை தமிழக பகுதிகளால் சூழப்பட்ட ஒரு மாநிலமாக இருந்தாலும் , தமிழக திராவிட கட்சிகளின் மாபெரும் ஆளுமைகளை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி புதுவையில் ஆட்சியில் அமரும் இடத்தில் தான் இன்றும் இருக்கிறது என்பதும்நாம் எந்த சூழலிலும் கட்சியை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம் என அவர்களுக்கு தெளிவாக காட்டியதாகிறது” . 

புதுவையில் கட்சியின் பலம் தமிழகத்திற்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் ஓட்டு சதவிகித கணக்குதான் அடங்கியுள்ளது . தமிழகத்தில்  நமது கட்சிக்கு ஆறிலிருந்து ஒன்பது சதவிகித ஓட்டு மட்டுமே , அது கூட்டணி அமைக்கவும் , அந்த கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்த மட்டுமே உபயோகப்படும் . ஒரு நாளும் தமிழக காங்கிரஸ் ஆட்சியமைக்கப் போவதில்லை   . ஆனால் நமக்கு இங்கு புதுவையில் இருபத்தி எட்டிலிருந்து முப்பத்தி மூன்று சதவிகித ஓட்டு உள்ளது  . நாம் எதிர்நோக்குவது ஐந்திலிருந்து ஏழு சதவிகிதம் அதிகப்படியான ஓட்டுகள் . அதை அடைவதற்கு முயற்ச்சித்தால் நமது வெற்றி உறுதிப்பட்டுவிடும். கடந்த காலங்களில் இங்கு நாம் ஆளுங்கட்சியாகவும் எதிர்கட்சியுமாக மாறி மாறி வந்துள்ளோம் இன்றும் புதுவையில் காங்கிரஸ்தான் தனிப்பெரும் கட்சியாக இருந்து கொண்டிருக்கிறதுஎன்றார்.

நாம் இதுவரை பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றதில்லை. ஆனால் இந்த முறை அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானது . இருப்பினும் இந்த சூழலில் யார் நின்றாலும் இருபத்தி ஆறு சதவிகிதம் நமக்கு கிடைக்கும் என்பது உறுதி . அது பலகாலம் எனது நிரவாகம் மூலம் நான் உழைத்து சேர்த்தது  . மத்தியில் தலைமை மாறும்போது , தமிழக புதுவை ஓட்டு சதவிகிதம் வித்தியாசம் நமது தனித்த பலத்தை சொல்லுவது . வேட்பாளர் சீட்டை இந்த முறை பிறிதொருவருக்கு விட்டு தருவதன் மூலம் அது அவரது செல்வாக்கென மேலிடத்தால் பிழையாக புரிந்து கொள்ளப்பட்டுவிடும்  , நம்மை யார் என்று அவர்களுக்கு அடையாளப்படுத்தும் வாய்ப்பையும் நாம் இழந்து விடுவோம்”.

சோனியா காந்தி தலைமை பெறுப்பேற்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் அதை நிரூபிக்காதே போனால் இதுநாள்வரை, தில்லிக்கு நம் சொல்லிலிருந்த மரியாதை போய்விடும். சோனியகாந்தி பெரிய ஆளுமை , முதல் நிலையிலேயே நமது பலத்தை நிரூபிக்கும் வாய்பபை இழந்து போனால் , அதற்கு பிறிதொரு சந்தர்ப்பம் கிடைக்காமலேயே போகலாம் . அதனால் இம்முறை நான் அதை பிறிதொருவருக்கு விட்டு தருவதாக இல்லை , நீ கவலைப்படாதே  அடுத்து ஆகவேண்டியதை துவங்கி வைஎன்றார் . தனது நுட்பமான கணக்கிடுகையின் வெற்றிகளை இதுநாள் வரை கண்ட உற்சாகத்தில் அவர் சொல்லிக்கொண்டு இருக்கையில் , ஊழ்  அது தனக்கென தனித்த கணக்கொன்றை வைத்திருப்பதை தலைவர் அன்று அறிந்திருக்கவில்லை போலும்.