https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 5 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 257 * எண்ணங்களால் தாங்கப்படுதல் *


ஶ்ரீ:



பதிவு : 257 / 344 / தேதி :- 04 டிசம்பர் 2017

* எண்ணங்களால் தாங்கப்படுதல் *


“ ஆளுமையின் நிழல்   ” - 03
கருதுகோளின் கோட்டோவியம் -03




அரசியல், பலரின் விழைவுகளிலிலிருந்தே துவங்குகிறது , எனவே அடுத்து நிகழ இருப்பதை ஒருவருடைய தனித்த சிந்தனையால் புரிந்து கொள்வதென்பது நடவாது . அவர் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பும் அதன் வழியாக நடத்தும் சலியாத உரையாடல்களுமாக , அவர்களின்  சிந்தனைகளூடாக தமக்குள் பல்லாயிரம் வாயில்களாக அவை திறந்துகொள்கின்றன. அதில் அடுத்து என்ன என்பதற்கான பதில் பொதிந்திருக்கும் .திறனுள்ள சிலர் அதன் வழியாகவே நடக்கவிருப்பதை கண்டுவிடுகிறார்கள் . எளிமையான குடிமை சமூகமே எப்போதும் தன் நல்எண்ணங்களினாலே, தலவர்களை தாங்கி பிறிதொரு காலத்திற்குள் நகர்த்த வல்லவர்கள்

நாராயணசாமியின் மீது எனக்கிருந்த வருத்தம் , அவர் சாமான்யர்களை சந்திக்கும் வாய்ப்பை  உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதால் . தனக்கான பிரமாண்டமான பாதையை காண இயலாததால் ,  அதன்  பெருமை அறியாது ஒதுக்கி தள்ளினார் என்பதற்காகவும்   இருக்கலாம் என நினைக்கிறேன். அவருக்கு அமைந்திருந்த சூழலை பொறுத்தவரை, அவர்  அடைந்ததை விட அடையாதது அதனிலும் மிகப்பெரியது என்பதே என் கணிப்பாக இருந்தது. “புற வாசல்வழியாகவே நுழைபவர்களை  சமூகம் மாறுபடும் கண்களால் மட்டுமே பார்க்கும் . புரிந்து கொள்ளும் . எட்டி நிற்கும் . ஒருநாளும் அனுக்கமாக நின்று வரவேற்காது . என்பதும் , அரசியலில்சூழ்தல்ஒரு வழிமுறை மட்டுமே,அது அதனாலேயே ஆனதல்ல . அரசியலில் நின்று ஒளிரும் வாய்ப்பை அவர் தவற விட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

இங்கு என்னால், தலைவரையும் அவரின் பிரதான சீடரான நாராயணசாமியையும் ஒப்பிடாது கடக்க இயலவில்லை . தலைவரும் தென்னக பெருந்தலைவர்களுக்குள் ஒருவராக எழவிருந்த வாய்ப்பை அறிந்திருந்தும் , அதை கடந்து சென்று தனக்கென விழைந்த சிறு கூட்டை தேர்ந்தெடுத்து அதில் நிறைவுடன்தான் இருந்தார் என நினைக்கிறேன் . ஆந்திராவின்  நரசிம்ம ராவ் .சென்னாரெட்டி , கேரளாவின்  கருணாகரன், .எம்.எஸ் நம்பூதிரிபாடு , கர்நாடகாவின் நிஜலிங்கப்பா , குண்டுராவ் , பங்காரப்பா , தமிழகத்தின்  மூப்பனார் ,கருணாநிதி போல தலைவர்களுக்கு இணையான இடத்தை அடைந்திருக்க வேண்டியவர். அதை இழந்ததற்கு , அவர் தன்னை அறிந்துகொண்டதே காரணம், என்பதே இங்கு இருவருக்கும் இடையேயான  முரண் என்பது ஒரு ஆச்சர்யம்  . தனது கல்வி, மொழியாளுமை போண்றவற்றில் இருந்த தடைகளை கருதியே ;கிடைத்த வாய்ப்புகளை கைவிட்டார் . ஆனால் நாராயணசாமிக்கு அனைத்துமிருந்தும் , தனக்கான  சிறப்பான வாய்ப்புகளிருந்தும் அதை தவறவிட்டார். இருவழிகளினாலும் அது புதுவைக்கு நஷ்டம் என்றே கூறுவேன் . எப்படியும்  ஒன்றுக்கொன்று முரண்படுகிறது . அதுதான் விண்ணகத்து தெய்வங்களின் விழைவின் ஆடல் போலும் .

ராஜ்யசபா தேர்தலின் வாக்காளர்கள் முப்பது சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே என்பதால், 16 வாக்குகளே வெற்றிக்கான இலக்கு . காங்கிரஸ் அதிமுக சேர்த்து 12 தேவை 4 மட்டுமே . சுயேச்சை 1 ஜனதாதளம் 1 சிபிஐ யின் 2 உறுப்பினர்களிடையே முரண் வலுப்பட்டிருந்து . பாமாக 1 , தமகா 5 . அதில் மனோகர் தவிர மற்ற மூவர்  காங்கிரசின் சீட் கிடைக்காததால் வெளியேறியவர்கள், அதில் எஞ்சிய தேனி ஜெயகுமார் கண்ணனை மிஞ்சிய ஆளுமையாக பார்க்கப்பட்டவர். ஏழு வாக்காளர்கள் தங்கள் நிலையை சொல்லாது இருந்தனர் . ஆளும் அமைப்பின் ஒரு சிறு சமன்குலைவு நாராயணசாமியை வெற்றிபெற வைத்துவிடும்.

அப்போது காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் சிறு குழப்பம் இருந்ததால் , கடைசி நேரம் வரை அதிமுக நடுநிலையில் எதுவும் முடிவும்செய்யாமல் மௌனமாக இருந்தது .வாக்கு சேகரிப்பென்பது , நிலவிய உறுப்பினர்களுக்கும் கட்சிகளுக்கும் இடையே நிலவிய சமன் குலைவை பயன்படுத்துவது . அது நுண்மையான தொடுதலாக மட்டுமே இருந்தது . ஆளும் அமைப்புடன் அதன் சகல கட்சி உறுப்பினர்களிடையே  இயல்பில் எழும் கருத்து முரண்களினால் அவர்களை நமக்கான வாக்காக கவருவதற்கு அவர்களின் நம்பிக்கையை பெறுவது இன்றியமையாதது .  

ராஜ்யசபா தேர்தல் செயல்பாடுகள் இரு பகுதிகளாக இருந்தன . ஒன்று வாக்கு சேகரிப்பு ; ரகசியம் கருதி வாக்காளர் சிலரை  நாராயணசாமி மட்டும் தனித்தும் , சிலரை வல்சராஜூடன் இனணந்தும் சந்தித்தார் . சிலரை வலசராஜ் தனித்தும் சந்தித்து பேசுவது , வாக்காளர்களுக்கு நாராயணசாமி மீது நம்பிக்கையை அதிகரிக்க செய்தது . அது சம்பந்தமான வெளிவேலைகளை வல்சராஜ் ஒருங்கினார். அவர் பொருட்டு அதை நான் செய்துகொண்டிருந்தேன் . அவை பலதரப்பட்ட நுண்மையான வேலைகள் . அதில் ஒன்றென அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு . அது உண்டாட்டாக மட்டுமே ஒருங்கியிருந்தது  . காங்கிரஸ் கட்சி சார்ந்து பெரிய அளவில் பத்திரிக்கியாளர்கள் உண்டாட்டு அதற்கு முன்பாக நிகழ்தப்பட்டதில்லை.

இந்தியாவின் முக்கிய பத்திரிக்கைகளின் தில்லி நிருபர்கள் அனைவரும்  பிரத்யேகமாக அழைக்கப்பட்டிருந்தனர். தில்லி நிருபர்களின் வருகையால் , செய்திகள் அகில இந்திய அளவிலானதாக முக்கியத்துவம் பெற்றுவிடும் . ஆனால் இது இப்போது தேவையா என்கிற குழப்பம் முதலிருந்து . பத்திரிக்கை செய்தி எந்த நுட்பத்துடன் சொல்லப்படவேண்டும் என்கிற கணக்கில் நிறைய வேலைகள் செய்யப்பட்டிருந்தன . அவற்றை ஒப்பு நோக்க நான் என் பத்திரிக்கை தொடர்பை தொடும்போதுதான் , இளம் பத்திரிக்கையாளர்கள் நாராயணசாமிக்கு எதிராக இருப்பதை உணர முடிந்தது. அவர்களுக்கு நாராயணசாமி மீது இன்னதென ஒரு காரணமும் இல்லாத அசூயை . அது இயல்பாக எங்கும் பரவியிருந்தது.

உள்ளூர் இளம் பத்திரிக்கையாளர்களின் நிலைப்பாட்டை நான் அதை வல்சராஜிடம் தெரிவித்தேன் . ஆனால் அது நாராயணசாமியின் முடிவு அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்  எனக் கூறிவிட்டார் . நான் அவரிடம் நான் இதை தவிர்க்க சொல்லவில்லை . வல்சராஜிக்கு இளம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இருக்கும் நல்ல நடப்பை இதில் பயன்படுத்த சொன்னேன் . அவர் அதற்கான முயற்சியில் இருந்தார்.

பத்திரிக்கையாளர் உண்டாட்டை வல்சராஜும் நானும் கவனித்துக்கொண்டோம் . விருந்து துவக்கத்திலிருந்து , எதிர் நோக்கியது போல உள்ளூர் மற்றும் இளம் பத்திரிக்கையார்களிடம் நாராயணசாமிக்கு எதிரான போக்கை என்னால் காணமுடிந்தது . வல்சராஜிடம் இதை சொல்லி நாராயணசாமி இங்கு வருவதாகா இருந்தால் வேண்டாம் என் சொல்லிவிடும்படி சொன்னேன் . வல்சராஜ்இது அவர் ஏற்பாடு செய்தது அவரை எப்படி வரவேண்டாமென்பது மேலும் அவர் இங்கு வருவதற்கு வாய்ப்பில்லைஎன்றார்

நான் அவரை புரிந்துகொண்டவரையில் நிச்சயம் இதில் கலந்து கொள்வர் என நினைத்தேன் . நிகழ்வின் மத்தியில் நாராயணசாமி வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன . நான் மறுபடியும் வல்சராஜிடம் நினைவு  படுத்தினேன் . அங்கு நிலவும் சூழல் சரியில்லை என அவருக்குச் சொன்னேன். அவரும் அதை உணர்ந்திருந்தார் . என்னிடம் நாராயணசாமியை அலைபேசியில் அழைக்க சொன்னார் . நான் அவரை தொடர்பு கொள்வதற்குள் லிப்ட்டின் கதவு திறக்க நாராயணசாமி சிலருடன் அந்த விருந்து நடைபெறும் ஹாலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் . நான் வல்சராஜை பார்த்தேன் அவர் அதிருப்தியை  வெளிக்காட்டிகொளாது சென்று அவரை வரவேற்று அவருடன் இணைந்து கொண்டார் . நான் எதிர்வரும் சிக்கலை சமாளிக்க அதிருப்தியாளர்களை பிரத்யேகமாக கவனிக்க தொடங்கினேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்