https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 255 * யானையின் பாகன் *

ஶ்ரீ:




பதிவு : 255 / 342 / தேதி :- 02 டிசம்பர் 2017

* யானையின்  பாகன்  *


ஆளுமையின் நிழல்   ” - 01
கருதுகோளின் கோட்டோவியம் -03






அரசியல்; சூழலிலிருந்து நிகழ்வுகளாக எழுந்து வருபவை . பலர் பலமுனைகளில் அவற்றிற்கு வினையும், எதிர்வினையுமாக ஏதாவது ஒன்றை நிகழ்த்திக் கொண்டே இருப்பதை தவிற இயலாது என்பதால் , முற்றாதரவு நிலை எடுத்தவனை அது கூர்கொண்டு , என்றாவது ஒருநாள் தன் முனையால்  தொட்டே தீரும். அப்போது அவன் ஒரு பலி மிருகம்  மட்டுமே . அவை யாரையும் யார் அருகிலும் நீண்ட நாட்கள் வைத்திருப்பதில்லை . இது மாறா இப்புடவியின் நெறி போலும்  . அன்று கலங்காதிருக்க, இன்று செய்யக்கூடுவது ஆளும் மனதை வென்று நிலைநிறுத்திக்கொள்ள , கண்களில் தெரியும் வாய்ப்புகளில்  தனக்கு சரி என தெரிந்தவைகளை செய்து, தன்னை நிருவிக்கொள்வது மட்டுமே.

பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பலகாலமாக நாராயணசாமி பாமக வை விமர்சித்ததற்கு தன் வருத்தம் தெரிவித்தது , கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது . அருகிலிருந்த வல்சராஜ் அதற்கு எந்த உணர்வையும் வெளிக்காட்டாது மௌனமாக அமர்ந்திருந்தார் , இதற்கு அவர் உடன்பட்டாரா? இல்லையா ? எனத்தெரியவில்லை . ஆனால் என்னை நாராயணசாமியின் பேட்டி குன்றிப்போக வைத்துடன், அவர் மீது எனக்கு முன்பிருந்த  வருத்தத்தை  அது மேலும் அதிகப்படுத்தியது . வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்லலாம் என்கிற கோட்பாட்டினால் நிகர்செய்யக் கூடியதல்ல இது . அரசியலில் மனங்களை வெல்ல இன்றும் அது நெறிகளையே மறைமைகளாக கொண்டிருக்கிறது என்பதை , பலரின் தனிப்பட்ட குமுறலை கண்டபோது புரிந்தது .

வல்சராஜ் எனக்கு ஒருங்கிய தேர்தல் வேலைகளை நான் குறையற செய்து கொண்டிருந்தேன் . எனக்கு உடன்பாடு இல்லாதவைகளுக்கு என் மறுப்பை அவரிடம் அவ்வப்போது பதிவு செய்து வந்தாலும் , அவர் விழைவதை செய்து கொடுத்துக்  கொண்டிருந்தேன் . அந்த தேர்தலை ஒட்டி எல்லா பத்திரிகையாளர்களுக்கும் ஒரு உண்டாட்டு ஆனந்த இன்னில் ஒருங்கியிருந்தது . அது அந்த சூழலில்  அவசியமற்றமாக நான் நினைத்தேன். பத்திரிக்கை அவருக்கு ஆதரவாக இல்லை என்பதை நான் எனக்கு கிடைத்த தகவல்களைக் கொண்டு யூகித்திருந்தேன்.

நான் அறிந்தவரை நாராயணசாமியிடம் ஒரு பதட்டம் எப்போதும் ஒட்டியிருப்பதை அறிகிறேன்அவர் புதுவையிலிருந்து முளைத்து தில்லியில் கிளை பரப்பி செழித்து வளர்ந்திருந்தாலும் அவருக்கு இங்கு வேர்களில்லை . தில்லியின் தொடர்பும் அகில இந்திய  கட்சி பொறுப்பும் அவருக்கு மாநில அரசியலில் உள்ள அடிப்படை முறைமைகளையும் அதை சார்ந்த  நம்பிக்கைகளையும் முற்றாக அழித்து விட்டிருந்தது . அனைத்தையும் அடைந்தவராக , அரசியல் தன்நிறைவு கொண்டவராக, அனைவரால் அவர் பார்க்கப்பட்டாலும் , அவருக்குள் தளும்பியபடி இருந்த நிறைவின்மை அவரை ஆணவமிக்கவரென  , பிழையாக வெளிக்காட்டிக்கொண்டிருந்தது . ஆனால் அவரோ எப்போதும் நிறைவின்மையின் மத்திலிருந்தார்

அதன் பாதிப்பால் அவர் தன்னைப்பற்றிய சிறிய விஷயங்களும் உடனுக்குடன் விளம்பரப்பட வேண்டும் என்கிற விழைவே திரண்டு கூர்மை கொண்டு அவர் அடையாளத்தை சிறுமைப்படுத்தியபடி இருந்தது . தில்லியில் இருந்தபடி மாநில அரசியலில் ஈடுபடும் யாரும் இதற்கு விதி விலக்கில்லை என்பதை மூப்பனாரை பார்த்தபோது தெரிந்து கொண்டேன் . அவரின் அதே சிறு சலனமென்றிருந்த  நிறைவின்மை அலையென  நாராயணசாமியிடமும் இருந்தது . ஆனால் மூப்பனாருக்கும் இவருக்குமான வேறுபாடு அவருக்கு மாநிலத்தில் வலுவான அமைப்பும் , அது எப்போது நல்ல நிர்வாகத்தில் இருந்துகொண்டிருந்ததும் காரணம் . நாராயணசாமிக்கு அதை போல தன்னால் நிர்வகிக்க முடியாது என் அறிந்திருக்கவில்லை , திறம்பட நிர்வகிப்பவர்களை நெருக்கமாக வைத்துக்கொள்ளவும் இல்லை

மாநில அரசியலில் தன் இடத்தையும் அடையாளத்தையும் வென்றெடுக்க ராஜ்ய சபா தேர்தலை முற்றாக பயன் படுத்திக்கொள்ள விழைந்தார் என நினைக்கிறேன் . இந்த முயற்சி 1991 ல் நிகழ்ந்த அரசியல் சமன்பாடு மாற்றத்தை ஒத்த விளைவுகளை உருவாக்க வல்லது என அவர் நினைத்திருக்கலாம் என்றால் . அது மிக சரியான கணிப்பே . அவருக்கு இந்தத் தேர்தலில் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமானதாக இருக்கிறது , வென்றால் அது தன் வெற்றியோடு நிற்கப்போவதில்லை . ஆட்சி மாற்றம் அதனுடன் ஒட்டி பிறிதொரு இலவச இணைப்பை போல தொடர்வது . இதை தனக்கான தருணமாக நினைத்தார். அது மிக சரியான கணிப்பாகவே பார்க்கப்பட்டது . தலைவருக்கும் அவருக்கும் இடையான பூசல் வெளித்தெரியாத காலம் . ஆனால் தன்னுடைய மாநிலத் தலைமையை மீறிய ஆளுமையைப் பற்றிய செய்தியாக அதை வெளியாக்குவதில் உள்ள பிழைகள், அவருக்கு  தலைவருடனான உறவில் பிற்கால சிக்கலுக்கு அழுத்தமான காரணமாக அவை எழுந்ததன . யானையின்  பாகன் அதை  வழிநடத்தினாலும், அதன் மீது அமர்ந்தலும் அதனின் ஒப்புதலோடு மட்டுமே  நிகழ்வது . யானையும் பாகனும் வெவேறானவர்கள் . தலைவருக்கு யானை என செல்லப்பெயர் உண்டு  
ஊடக செய்திகள் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டு மறையும் விட்டில் பூச்சிகளைப்போல , துவங்கிய தடம் தெரியாமல் மறைந்து போவது , ஆனால் தொண்டர் அமைப்பின் வாய்வழியாக பேசப்படுபவைகள் ஊரில் புலி வந்துபோனதைப் போல. யாரோ ஒருவர் பார்த்ததாக சொன்னாலே  அனைவருக்கும்  நினைக்கும்போதெல்லாம் உடலில் நலுங்கல்களை ஏற்படுத்துவது . தனது செயல்பாடுகள் உடனுக்குடன் பொதுவில் சொல்லப்பட வேண்டும் என்பது அவரது விழைவாக இருக்கலாம் . நான் இதை சொல்வதற்கு முக்கிய காரணி 1996 துவக்கத்தில் நிகழ்ந்த ஒன்றை பற்றியது . காங்கிரஸ் ஆட்சியை இழந்து நான்கு மாதங்களுக்குள்ளாக ஒரு மழைக்காலத்தில் வெள்ள சேதம் பாரவையிடும் பணியை நாங்கள் ஒருங்கி இருந்தோம் . அது பாண்டியன்  நாராயணசாமியை எனக்கு நெருக்கமாக கொண்டுவர முயற்சித்துக்கொண்டிருந்த நேரம் . தலைவர் சார்பாக நாராயணசாமி சென்று வருவதாக திட்டம் , முன்னாள் முதல்வர் என்கிற முறையில் வைத்திலிங்கமும் உடன் வருவதாக ஏற்பாடாகி இருந்தது

காலை ஒன்பது மணிக்கு உருளையன்பேஅட்டையில் துவமாகிய வெள்ள பாதிப்பு பார்வையிடல் மதியம் மூன்று மணிக்கு லாஸ்பேட்டையில் முடிவுற்றது  . துவக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நாராயணசாமி முன்னின்று குறைகளை கேட்பதும் நிவாரண பணி செயல்பாடுகளை பற்றியும் அதீத சுறுசுறுப்புடன் விசாரித்தபடி இருந்தார் . பொதுமக்களுக்கு அவரை யார் என தெரியவில்லை என்பதை முதலில் நான் அவதானித்து பாண்டியனிடம் சொன்னேன் , முதலில் என்னுடன் முரணபட்டவன் விரைவில் நான் சொன்னதை கண்டுகொண்டான்ஆனால் இதை அவருக்கு புரியவைப்பதில் உள்ள சிக்கலின் காரணமாக  அமைதியாக இருந்துவிட்டான்கூடும் கூட்டம் வைத்தியலிங்கத்தை கண்டதும் நாராயணசாமியை விலக்கி வைத்திலிங்கம் நோக்கி நகர்வதும், அவருக்கு அந்த மக்கள் மத்தியிலிருந்து மதிப்பும் சிறுது நேரம் தாழ்த்தியே நாராயணசாமி புரிந்து கொண்டார் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்