https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 21 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 273 * இறுதி முயற்சி *

ஶ்ரீ:



பதிவு : 273 / 369  / தேதி :- 20 டிசம்பர் 2017


*  இறுதி  முயற்சி  *


ஆளுமையின் நிழல்   ” - 19
கருதுகோளின் கோட்டோவியம் -03




அரசியலாளர்களின்  ஆதலின் அடிப்படை விதி , தன் நிலை முன்னெடுத்தலும் , பிறரெடுப்பதை தடுப்பதுமாக , தங்கள் தங்கள் ஸ்தானத்தை தக்கவைத்துக்கொள்வது . அதிலும் முதன்மை  பிறிதொருவருடைய செயல்பாடுகளை முடக்கிக்கொண்டிருப்பது . களத்தில் மூத்த தலைவர்களைத் தவிர , பிரித்தெல்லோரும் அவர்களின் ஆடலில் களம்பட காத்திருக்கும் சிறு காய்கள் மட்டுமே . தலைவர் சண்முகத்தின்  முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்துவது எந்த பலன் கருதி ? என எங்களுக்கு தெரிந்ததை விட சற்று கூடுதலாக பாலனும் தெரிந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன் . காரணம் அது எங்கள் நேரடி அரசியல் அல்ல , பெரிய தலைவர்களின் நகர்த்தலுக்கு உட்பட்டு நகர்ந்து செல்வது  மட்டுமே எங்களால் செய்யக் கூடுவது .

தலைவர் , சில பகுதிகளுக்கு புதிய தலைவர்களை குடிமை சமூகத்திலிருந்து உருவாக்கி எடுக்கும்  முக்கியமான முயற்சிகளைசிதைத்த பல அமைப்புகளில்  பாலன் தலைமையிலிருந்த எங்கள்  அமைப்பு ஒன்றுபின்னாளில் நான் தலைவரின் கீழ் பணியாற்றி  ,புதுவை முழுவதும் நிகழ்த்திய சிறு சிறு கூடுகைகளில் அந்த பழைய நிகழ்வுகள் விரிவாக  பேசப்பட்டன. அதன் முழு பரிமாணமும் எனக்கு புரிந்தது அங்கேதான் . அது முறியடிக்கப்பட்டிருக்க கூடாது என நினைத்தேன் . ஆனால் ஊழ் அதை திருத்தி சரிசெய்கிற வாய்ப்பு எனக்கே கிடைக்கும் என அப்போது நான் அறிந்திருக்கவில்லை . அதற்கான சந்தர்ப்பம் எழுந்து வந்தபோதும் , அதை சரிசெய்து விடக்கூடிய சூழல் இது என்கிற புரிதலையும் நான் சேர்ந்தே அடைந்தேன்

எந்த நம்பிக்கை என்னை அந்த முனைவரை செலுத்தியது என்றும், அப்போது அதை சரிசெய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையும்நான் எங்கிருந்து அடைந்தேன் என்று தெரியவில்லை . இப்போது நினைக்கையில் அதை  கையிலெடுத்தது போல ஒரு மடமை பிறிதொன்றில்லை என நினைக்கிறேன் . தலைவர் தோற்ற களத்தை நான் எப்படி வென்றெடுக்க முடியும் . ஆனால்முடியும்என்கிற நம்பிக்கையும், அதை செய்வதால் எழுந்து வரவிருக்கும்  பிறருடைய எதிர்வினை  பற்றிய என் அறியாமையே எனது பலமாக அன்று இருந்திருக்க வேண்டும் . பின்னாளில் என்னால் சரிசெய்து கொள்ளவே இயலாத பலருடைய எதிர்ப்பை , முழுமையாக நான் சம்பாதித்து இங்குதான் என நினைக்கிறேன். அடுத்தடுத்த காலகட்டத்தில் நிகழ இருந்த பெறிய மாற்றத்திற்கு முன்பாக இது நிகழ்ந்த  போது அதுதான் முயற்சிக்கான  கடைசி வாய்ப்பென்பதையும் , அதன் பிறகு எழுந்தவந்த மாற்று அரசியலுக்கு அதுவே காரணமென இருக்கப்போவதை  அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

இதில் என்ன வேடிக்கை என்றால் முழு திட்டமும் தலைவர் சொல்லி நான் முன்னெடுத்ததாகவே அனைவரும் உறுதியாக நம்பினார்கள் . பிறர் என்னை அந்த கோணத்தில் வைத்தே பார்த்ததால், அவருக்கு அதை செய்து கொடுக்கும் ஒரு கருவியாகவே நான் பார்க்கப்பட்டது வியப்பதற்கு ஒன்றில்லை . அவருடைய அரசியில் ஆளுமை அப்படிப்பட்டது. ஆனால் நான் நிகழ்த்திய அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கு பின்புலமாக இருந்தது, எனது கடந்த கால கட்சி அரசியல்  அனுபவமும் , பிறர் ஆற்றத் தயங்கும் புதிய முயற்சிகளை நான் முன்னெடுத்தது மட்டுமே , என என்னால் அவர்களுக்கு மத்தியில் கட்டக்கடைசி வரை நிறுவ முடியாது போனதால் , நான் எதிர்நோக்கிய அரசியலில், எனக்கான இடம் எழுந்து வரவே இல்லை . என்னை பற்றி யாருக்கும் எந்தவிதமான அவதானிப்பும் இல்லாமையால் என்னைப்பற்றிய அவர்களின் புரியாமையால் நான் சூழப்பட்டிருந்தேன் .அதனால்   நான் அவர்களால் மதிப்பிடப்படவே இல்லை  . 

எனக்கு அணுக்கமான மூத்தவர்கள்  சிலர் தனிப்பட்ட முறையில் என்னிடம் தலைவரை நம்பி இப்படி செய்வது எனது அரசியலுக்கு நல்லதல்ல என எச்சரித்தனர் . அவர்களிடமும் ,  நான் காணும் அரசியல் மாற்றத்தை புரியவைக்க முடியவில்லை .நான் என்ன செய்கிறேன் என்பதை பிறிதெவரையும் விடவும்  அறிந்திருக்கிறேன் என்றும், அவற்றை நான் என் பொருட்டே ஆற்றிக்கொண்டிருப்பதாக, நான் சொன்ன  நிதர்சனங்கள் அவர்களுக்கு வேடிக்கை கதையாகவும் , அரசியலில் நம்பி மோசம் போகக்கூடியவர்களின் இளிவரல் கொள்ளத்தக்க கூற்றாக  பார்க்கப்பட்டது  . காரணம் தலைவரின் ஆளுமையை மிஞ்சி நான் தனி ஒருவனாகஇதை அவரும் அறியாது செய்து முடித்தேன் என்பது , எனக்கும் அன்று எனக்கு அணுக்கர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது .

ஏற்கனவே நங்கள் முடிவெடுத்தபடி  ஏழு ஏழு தொகுதிகளில் எங்களின் கவனத்தை குவித்திருந்தோம் . அதில் சில தொகுதிகளுக்கு  தலைவரால்   வட்டாரத்திற்கும்மாநில கமிட்டிக்கும் கொண்டுவர விழையப்பட்டவர்கள் இருந்தார்கள் . கடந்த காலத்தில் நடந்த உறுப்பினர் சேர்கை ஒரு கண்துடைப்பை போலவே தொகுதிகளில் செய்யப்பட்டிருந்தது . முறையான தேர்தலை நோக்கி எல்லாம் அது செல்லவேயில்லை . தேர்தல் என்ற ஒன்று நடைபெறாத காரணத்தால் அவர்களால் தங்கள வெற்றியை உறுதிசெய்யும் ஆற்றலில்லாதவர்களாகி போனார்கள்  . அதனால் கட்சி அரசியலில் முற்றாக நம்பிக்கை இழந்திருந்தனர் .

அவர்கள் அனைவரும் நெடுநாள் கட்சியின் விசுவாசிகள். நேர்மையாளர்கள் . அரசியல் உள்விளையாட்டு ஒருவரை கீழிருந்து மேலாக கொண்டுவருவதற்கு , சில அடைப்படை தேவைகளையும் இடர்பாடுகளை களைந்து மேலெழுந்து வரும் ஆற்றல் ஒருவருக்கிருந்தாலே அன்றி , அவர் தன்னை காப்பாற்றிக் கொண்டு மேலெழ முடியாது . மாநில கட்சி தலைமையின் விழைவு மட்டுமே அத்தகையவர்களை பிறரைத்தாண்டி மேலெடுக்க இயலாதுஅரசியலில் லாப நோக்குள்ளவர்கள் அதை திறம்பட செய்து தங்களின் முதல் நகர்வை துவங்கிவிடுவார்கள் . சமூக கண்ணோட்டமுடைய எவர்க்கும்  அதன் உட்சிக்களில் உழன்று அதன்மீது ஆர்வமிழந்தோ , வெறுப்புற்றோ விலகிவிட நேர்ந்துவிடும்

நான் இதைத்தான் சரிசெய்ய நினைத்தேன் . மேலிடத்திலிருந்து அவர்களுக்கு உதவவே நான் வந்திருப்பதை புரியவைத்ததும் . முதல் நிலை சிக்கலை அவர்கள் தாண்டி மேலுழுந்து வந்தார்கள். அவர்களுக்கு துணையாக இளைஞர் அமைப்பினரை நான் நிறுத்தியிருந்ததால் , அவர்கள்கள் மேலும்   நம்பிக்கை அடைவதற்கு அது காரணமென்று அமைந்தது  , அதன் பிறகு நிகழ்ந்த தொகுதி கூடுகையில் ஆரோக்கிராமண நிகழ்வுகளை அவர்கள் பார்க்க நேர்ந்து , அது அவர்களை தங்கள் நிலைகளில் மேல் இன்னும் அழுத்தம் கொள்ள வைத்தது . அவர்கள் உற்சாகத்தில் இருந்தத்தால் நான் செய்ய நினைத்தது எனக்கு சாத்யமானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்