https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 12 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 264 * முரணில் கிளைக்கும் தலைமை *


ஶ்ரீ:



பதிவு : 264 / 351 / தேதி :- 11 டிசம்பர் 2017

* முரணில் கிளைக்கும் தலைமை *


“ ஆளுமையின் நிழல்   ” - 10
கருதுகோளின் கோட்டோவியம் -03





பழையவற்றை விலக்கி புதிய சமன்பாடுகளை முன்வைத்து அடுத்த தலைமுறை எழுந்து வந்தது . அதனாலேயே முரண்களின் தொகையாக இருப்பது இயல்பானது  . அவை எப்போதும் ஒன்றிலிருந்து பிறிதொன்றென கிளைப்பதால் , வரலாற்றில் தவிற்க இயலாததாக இருந்து வருது  . அதன் அடுக்குகளாக வைத்திலிங்கம், நாராயணசாமி, வல்சராஜ் அதில் முக்கியத்தும் வாய்ந்தவர்களானார்கள் . அடுக்குகள் வெற்றி தோல்விகளை அடிப்படையாக கொண்டு எப்போதும் மேல் கீழ் என மாறியபடி இருக்கும்  .  வைத்திலிங்கம் தலைமையில் ஆட்சி மாற்ற வேலைகள் முன்னெடுக்கப்பட்டதாக  எங்கும் பேசப்பட்டது  நாராயணசாமியும் வல்சராஜும் தங்களின் தொடர்புகளையும் செல்வாக்கையும் கொண்டு மாநில கட்சித் தலைமையை தாண்டி தில்லியை தொட்ட அந்த அமைப்பு வெளித்  தெரியாது செயல்பட்டிருக்க  வேண்டும் . தில்லியிலிருந்து அதற்கான சமிக்ஞைகள் வந்தபோதுதான் தலைவருக்கு அதுபற்றி  தெரிந்திருக்கும் . சில விஷயங்களை தில்லிக்கு புரியவைப்பது ஆயாசமளிக்கும் வேலையாக மாறிவிடுவதுண்டு. முழு திட்டத்தில்  வல்சராஜ் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும் . நாராயணசாமியின்  ஆதரவினால் மாநில அரசியலில் வல்சராஜ் நாராயணசாமியின் முகமாக இருந்தார் அதனால் யார் யாரால் பயனடைந்தார் என சொல்லுவது தனி அரசியாலகிப்போகும் .

தாமாகா வில் அதிருப்தியடைந்த சிலர் கந்தசாமியை முன்னிறுத்தி ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்க, திட்டமிட்டபடி அனத்தும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே ஒரு முடிவிற்கு வந்திருக்க வேண்டும் . ஆனால் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கபட அது ஆளும் தரப்பால் தீவிரமாக முறியடிக்கப்பட்டது . புதுவையில் முதன்முதலாக ஆட்சிக்கவிழப்பு முயற்சி  முறிக்கப்பட்டதற்கு  , எங்கோ நிகழ்ந்த ஒரு பிறழ்வு , பெரிய சிக்கலாக உருவெடுத்தது . சர்ச்சை மிக்க 9.5 லட்சம் லஞ்ச ஊழல் வழக்காகி சிபிஐ யிடம் சென்றது . அரசியல் நகர்வாக இருக்கவேண்டியதுவழக்காக உருவெடுத்தது . வைத்தியலிங்கம் முதன்மை நபராக சிக்கி அந்த வழக்கால் நீண்ட நாட்கள் அவர் பெயருக்கு கலங்கம் விளைவித்து , அரசியல் பயணத்தில் ஒரு தடைகல்லாக கிடந்தது.

நீண்ட நாள் வதந்தி என்பதால் , ஆளும் அமைப்பு அதற்கான எதிர் நகர்வை திட்டமிட்டு செய்திருந்தது . 3 புதிய நியமன சட்டமன்ற உறுப்பினரைகளை  நியமனம் செய்து பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ளும் தற்காப்பும் , சிபிஐ வழக்கு என அவர்களின் எதிர்தாக்குதலுமாக அவை இருந்தன . எந்த சின்ன விஷயமும் விடுபடாது பார்த்துக் கொள்ளப்பட்டது . இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பலவாறு மிரட்டப்படனர் . போஸ்டர் ஒட்டிய விஷயத்திற்காக  எனது இரண்டு அலுவலகங்களும் , ஆறு புராஜெக்ட் சைட்டுகளிலும் வனிகவரித்துறையால் ரைடு நடத்தப்பட்டு அங்கிருந்தஅனைத்து ஆவனங்களையும் அள்ளிச் சென்றனர் . நான் ஆணையரிடம்  முறையிட்டும் ஒருமாத இழுத்தடிப்பிறகு  , அவை என்னிடம் மீண்டும் வழங்கப்பட்டது .

சீதாராம் கேசரி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த நேரம் . தலைவருக்கு தில்லியின் காங்கிரஸ் தலைமையகத்தில் பொறுப்பில்  முன்பிருந்த அவரது  சகாக்கள் பலர் பொறுப்பில் இல்லாதாயினர் . கட்சிக்குள் அமைப்பு ரீதியாக தேர்தல் நடக்க போவதாக அறிவிக்கப்பட்டது . அறிவிப்பு வெளியானதும் , அதற்கான வேலைகள் எங்கும் தொடங்கின . சோனியாகாந்தி தலைமை பொறுப்பேற்க வசதியாக , உட்கட்சி தேர்தல் , முறையாக நடக்க இருப்பதாக தோன்றியது , நரசிம்ம ராவின் தலைமையிலான பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து சீத்தாராம் கேசரி தலைவரானார் . இந்திரா காந்தி குடுப்பதின் நெக்கமானவராக அறியப்பட்டவர் . கட்சியின் பொருளாளராக நீண்ட நாள் பதவி வகித்திருந்தார் . உட்கட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற பல்வேறு காரணம் சொல்லப்பட்டது , சீதாராம் கேசரி தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள என்றும் , இல்லை சோனியாகாந்தி தலைவராக வருவதற்காண முன்னெடுப்புகள் என பேசப்பட்டன எப்படி இருப்பினும் இந்தமுறை உட்கட்சி தேர்தல் நடக்கப்போவது உறுதி எனப்பட்டது .

நான் காத்திருந்த சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று என புரிந்து போனது , இது நான் முற்றிலும் எதிர்நோக்காத வாய்ப்பு  .முறையான  உட்கட்சி தேர்தலென்பது , நான் பிறப்பதற்கு முன்பாக கட்சியில் நடந்ததது . இந்த உட்கட்சி தேர்தல் இப்போது வருவது எனது அரசியல் திட்டத்திற்கு பல   விஷயங்களுக்கு உகந்ததாக தோன்றியது . உறுப்பினர் சேர்க்கையை பாலனுக்காக பலமுறை செய்தது , இப்பொது தலைவருக்காக  . நான் அனைத்து தொகுதிகளிலிருந்தும் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து இதை சொன்னேன் . வழமைபோல இல்லை இந்தமுறை தேறுதல் உறுதி, தலைவருக்கு போட்டி இருக்காது ஆகவே ஏகமனதாக தேர்தெடுக்கும் வாய்ப்புகள்  உண்டு , ஆகவே ஏமாந்துவிடாதீர்கள் என்றேன்

அவர்கள் யாருக்கும் இது முதலில் புரியவில்லை . தொகுதி தலைவர்களும் மாநில கமிட்டி உறுப்பினர்களும் மாறும் வாய்ப்பாக இதை பாருங்கள் என்றதும் , அரைகுறை மனதுடன் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்று சென்றார்கள். நான் அதை ஒட்டி அடுத்து  நடக்கவேண்டியதை பற்றிய சிந்தனையிலிருந்தேன் . சில சமயங்களில் மட்டும் மனம் நிலைகொள்ளாது பறக்கும் . இதுமாதிரி ஒரு உற்சாகம் வந்துவிட்டால் பிறகு எதையும் பார்க்காமல் அதை செய்து முடித்துவிட்தான் ஓய்வது என்றிருப்பேன் . தருக்கத்திற்கு உடன்படாத சில பகுதிகளில் இவையும் ஒன்று . வீடு திரும்பிய பிறகும் சந்தித்த அனைவரையும் தொலைபேசியில் மீளவும் முடுக்கிக்கொண்டிருந்தேன்.

அன்று இரவே நிலைமை மாறிவிட்டிருந்தன . தொகுதிகளின் தலைவர்களிடமிருந்து சிலரால் மட்டுமே உறுப்பினர் படிவம் பெற முடிந்ததும், பலருக்கு ஏதேதோ காரணம் சொல்லி மறுக்கப்பட்டதும், பிறிதொரு பூசல் கிளம்புவது போல  இருந்தது . அது கொதிநிலையை அடையும் முன்னமே அதை தடுத்து நிறுத்தியாக வேண்டும் . பல தொகுதி தலைவர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு   இது போல செய்கிறார்கள்  இல்லையென்றால்குரங்கு குல்லாவை கழற்றி எறிந்ததுபோல ஒரே மாதிரியான பதிலை சொல்லியிருக்க முடியாது . நான் அவர்கள் ஆவேசப்படுவதற்கு முன்னோராக , அவர்களிடம் ,  "இது ஒருவகையில் நமக்கு சாதகமானது , மறுக்கப்பட்டால்தான் அதை பதிவேண்டும் என்கிற ஆவேசம் எழும் , வழமையான உறுப்பினர் சேர்க்கை மேளா என் தவறாக கணிக்கிறார்கள், இல்லை இந்தமுறை அது நடந்தே தீரும் என்பது , இப்போது சொல்லாமலேயே அனைவருக்கும் புரிந்துபோனது. இதே குழப்பம் எல்லாரிடமும் இருக்கப்போவதால் , கொடுக்கப்பட்ட படிவங்களின் பெறுபகுதி கட்சி அலுவலகத்திற்கு பதிவு செய்யப்பட்டு திரும்போவதில்லை . சிறய அளவிலா பதிந்தாலும் நமக்கு இது சிறப்பான வாசலை திறக்கும்" என்றேன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்