https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 22 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 274 * எதிர்நோக்கா பொறுப்பும் , விபரீதமும்*

ஶ்ரீ:



பதிவு : 275 / 361  / தேதி :- 21 டிசம்பர் 2017


* எதிர்நோக்கா பொறுப்பும் , விபரீதமும்*



ஆளுமையின் நிழல்   ” - 20
கருதுகோளின் கோட்டோவியம் -03






கட்சியின் விசுவாசிகளுக்கு ; நேர்மையாளர்கள் , ஒழுக்கவியளாலர்கள் போன்ற அடையாளங்கள் அரசியலில் அவர்கள் மேலெழுந்துவ வர உதவும் சாதனமல்ல என்பது வருத்தம் தரும் யதார்த்தம்.  நடைமுறை பொதுத்தளத்தில் அவர்களை போன்றவர்களை தடுக்க விழையும் எதிர்மறை ஆளுமைகளை , எதிர்த்தும் தாண்டியும் வளர்ந்து வந்தாலேயன்றி, அவர்களால்  தலைமை பொறுப்பிற்குள் நுழைய முடியாது . காரணம் அவர்களை நோக்கிய அறைகூவல் அது என்பதுதான்

அதில் மனசோர்வடைபவர்கள் அதன் உட்சிக்களில் உழன்று அதன்மீது ஆர்வமிழந்தோ , வெறுப்புற்றோ பின்  விலகி விடுவதே எப்போதும் நிகழ்வது  . அவர்களை களத்திலிருந்து விலக்க நினைப்பவர்கள் அவர்களை நகர்த்துவதே அதை நோக்கித்தான். அந்த நிலையிலிருந்து அவர்கள் வெளிவர முயலும் போது ஒருமுறை உதவினால் , தங்களை அதில் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களால் முடியும் என்கிற நம்பிக்கைதான் , எல்லாவற்றிற்குமான ஆசக்தியாக  இருந்தது .

பலமுறை என்னை கைவிட்ட "நம்பிக்கை"  இது . ஆனால்ஊழ்” ,இம்முறை அது என்னை கைவிடவில்லை ; காரணம் அதன் பிரத்யேக எதிர்கால திட்டம் ஒன்றில் நுழைவாயில் இது என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. எனது அடிப்படை ஆதரவு திட்டம் மிக ஜாக்கிரதையாக முன்னெடுக்கப்பட்டு , இளைஞர் அமைப்பினரின் ஆதரவும் , அவர்களுக்கு சொல்லப்பட்டதை அவர்கள் திறம்பட செயலாற்றியதனாலேயே இது சாத்தியமாயிற்று . ஊர் பெரியவர்களிடமிருந்த கடந்த காலத்திய கசப்பையும் அவநம்பிக்கையும் போக்கினாலே , இதை செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கை பொய்க்கவில்லை . அதில் உள்ள நடைமுறை தடைகளைத்தான்  முதலில்  சரிசெய்ய முயன்றோம் . அதற்கு உறுதுணையாக இருந்தது அந்த  சிறு கூடுகைகள்.

கூடுகை நிகழ்வதற்கு , முன்பின் நடைபெற்ற அறிமுக உரையாடல்கள்தான் எனக்கு எல்லாவற்றிற்குமான ஒரு திறப்பை கொடுத்தது . அதுவரை எண்ணமாக இருந்தது திட்டமானது அதன் பிறகுதான் . பின்னர் எனது அனைத்து  ,முயற்சிகளுக்கும் அதுவே துவக்கமாக இருந்தது . நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது  என்கட்சி பதவியை  சொல்லாது விலக்கி, என் தனிப்பட்ட குடும்ப அடையாளத்தை சொல்லியே என்னை அறிமுகபடுத்திக் கொள்வது வழமை

எனது பாட்டனாரை பல துறைகளில்  அனைவருக்கும் நல்ல அறிமுகம் உண்டு என்பதால் , அவரை சொன்னதும் அனைவருக்கும் என்னிடம் சட்டென ஒரு அணுக்கம் தோன்றிவிடுவதை பார்த்திருக்கிறேன். அதுவே அவர்களுக்கு என்னை பிற அரசியலாளரிடமிருந்து, வேறு படுத்தி காட்டி விடுகிறது. மேலும் கட்சி பொறுப்பை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது , அது அணுக்கம் ஏற்படுத்தாது , ஒருவித மன விலக்கத்தை கொடுப்பதை பார்த்த பிறகே , எனது அனுகுமுறையை மாற்றிக் கொண்டேன் 

அணுக்கம் அதிகமானதும் தடைகள் விலகி அரோக்கியமான உரையாடல்களாக  , அவர்களின்மலரும் நினைவுகளாக” அவை விரிந்து விடுகிறது  . அவை எப்போதும்  அவர்களை , தாங்கள் கைவிடப்பட்ட கடந்தகால நிகழ்வுகளை நோக்கியே செலுத்தியது . அங்கு கூடி இருந்த ஊர் பெரியவர்கள் யாரும் தலைவரின் ஆதரவாளர்கள் அல்லர்  , ஒருகாலத்தில் அவர்கள் அனைவரும் தீவிர தலைவரின் எதிர்ப்பாளர்கள் என்பதை , நான் அறிந்து கொள்ள நேர்ந்தது . அவர்களில் பலர்  சண்முகம் தலைமை பொறுப்பில் வருவதை தடுக்க தீவிரமாக இயன்றதை முயற்சித்தவர்  . 

கட்சி ரீதியில் காந்தியாலும் , காமராஜராலும்  ஈர்ககப்பட்டு  உள்நுழைந்தவர்கள். அவர்களில் பெரும்பான்மையினர் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் . புதுவை சுதந்திர காலத்திற்கு பின்னாளில் ஆட்சி அமைந்தபோது அதில்  நடந்த அரசியல் சதுரங்கத்தில் தங்களுடன் தோள்கொடுத்து நின்றவர்கள் , பதவியில் அமர்ந்தபோது பொது நலம் விலகி சொந்த கணக்கில் செயல்பட்டதை கண்டபின் , அதிர்ந்து போய் பிறிதெவரையும் விட சண்முகம் நம்பத்தகுந்தவர் என்கிற அளவில்தான் அவரை ஏற்றார்கள் . அவர்கள் தலவர் சண்முகத்துடன் கட்சி சார்ந்து அணுக்கமாக இருந்தாலும் , அவர்கள் தங்களை தலைவரின் ஆதரவாளர்கள் என்கிற அடைப்பிற்குள் என்றும் வைத்துக்கொண்டதில்லை.

எங்களை மூன்று தரப்பாக பிரித்தது இந்தப்புள்ளி , அதனாலேயே மிக யதார்த்தமான உரையாடல்களை அது துவக்கி வைத்தது . அதன் பிறகுதான் , நான் தலைவரின் ஆதரவாளனாக இருப்பினும் , தலைவரை ஒரு தரப்பாக முன்னிறுத்தி  , நான் என்னை ஒரு தனி கருத்தின் தரப்பாக பிரித்து அடையாளப்படுத்திக் கொண்டேன் , அவர்கள் அனைவரும் தங்களை மூன்றாவது தரப்பென புரிந்திருந்தார்கள் . அதுவே சில விஷயங்களை என்னால் அவர்களை அனுகி சொல்ல முடிந்ததும் , அதை அவர்கள் சரியான கோணத்தில் எடுத்துக்கொண்டதும் நிகழ்ந்தது . அதன் பின்னர் உருவாகி வந்தநம்பிக்கைஎன்கிற தளத்தில் இருந்து கொண்டு என்னால் அவர்களுடனான வெளிப்படையான உரையாடலுக்குள் நுழைய முடிந்தது

அரசியல் களத்தில் ஊழின் சில விசித்திரமான ஆடல்கள் , பிறிதொருவருடைய வாழ்வில் நிகழ்வதையும் அவர்கள் அதை புரிந்து கொள்வதிலிருந்து துவங்குகிறது அவர்களது எதிர்காலம் . நான் அவற்றை அவதானித்தபடி எனக்கான படிப்பினைகளை அதிலிருந்து அடைய முயறசிப்பேன் . விளையாட்டின் ஈடுபாட்டால் என்னையும் அறியாது  அதன் உள்வட்டத்தில் நுழைந்திருந்தேன். திரளான அமைப்பும்  ஊர் பெரியவர்களின் மத்தியில் கிடைத்த எதிர்பாராத அங்கீகாரமும் , அரசியல் விளையாட்டு களத்தின் மத்தியில் என்னையும் ஒரு காய் என் கொண்டு வைத்திருந்தது . நினைத்ததை முடிக்கவேண்டும் என்கிற ஒற்றை விழைவையும் அதை நிகழ்த்த எனக்கு உதவியது என் கடந்த கால அனுபவம் . அதைக்கொண்டு   நான் எனது எதிர்கால கணக்கை திட்டமிட்டுக்கொண்டிருக்க  . ஊழ் என் வருங்காலத்திற்கான பாடதிட்டத்தை வேறு வகையில் துவங்கியிருந்ததை, அப்போது நான் தெரிந்திருக்கவில்லை . அங்கிருந்து நான் கற்றதும் , பெற்றதும் , அடைந்ததும் அதிலிருந்து இழந்ததும் , அனைத்தும் என் வயதிற்கு மீறியவை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...