https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 262 * புறவெளிச்சத்தின் இருப்பு *

ஶ்ரீ:பதிவு : 262 /  349 / தேதி :- 09 டிசம்பர் 2017


* புறவெளிச்சத்தின் இருப்பு *“ ஆளுமையின் நிழல்   ” - 08
கருதுகோளின் கோட்டோவியம் -03

ஓர் அரசியல்சூழலில் ஆட்சிசெய்யும்அரசியல் சரிநிலைகள்தான். ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்என்பது நவீன ஜனநாயகச்சூழலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சொல். ஜனநாயக அரசியல் எப்போதும் கருத்துகளின் மோதலினால் ஆனது. இங்கே ஒருங்குதிரட்டப்பட்ட கருத்துகளுக்கு எல்லை இல்லாத வலிமை உள்ளது. அவ்வாறு கருத்துகளை ஒருங்குதிரட்டுவதற்கு எளிய வழி அவற்றை ஒற்றைப்படையாக ஆக்கி மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்து மக்களை அவற்றின் கீழ் அணிதிரளச் செய்வதே. இருபதாம் நூற்றாண்டில் இந்த உத்தியை மிகச்சிறப்பாகச் செய்தவர்கள் ஃபாஸிஸ்டுகள். பண்பாட்டு அடையாளங்களை உணர்ச்சிபூர்வமான குறியீடுகளாக ஆக்கி அவற்றின் கீழே மக்களைத் தொகுத்தார்கள். ஒரு மையத்தில் உணர்ச்சிபூர்வமாக ஒருங்கிணையும் கருத்து என்பது மிக மிக அபாயகரமான ஓர் ஆயுதம் என்று இவர்கள் உலகுக்குக் காட்டினார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஃபாஸிஸம் பற்றிய அச்சமும் அருவருப்பும் உலகமெங்கும் ஜனநாயகச் சிந்தனைச் சூழலில் எழுந்தது”. இந்த அச்சத்தையும் அருவருப்பையும் ஓர் அடையாளமாக ஆக்கி, அதன் கீழ் மக்களைத்திரட்டுவதற்கான கருத்தியல் ஆயுதமாக திரண்டுவந்ததேஅரசியல்சரிநிலைஎன்பதாகும்.என்கிறார் ஜெயமோகன் தனது சாட்சி மொழி கட்டுரைத் தொகுப்பில்.

புதுவை சட்டமன்றத்தின் தனிப்பெரும் கட்சி என்கிற அடிப்படையில் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும் உரிமையை முதலில் கோரியிருக்க வேண்டும், ஆனால் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு தலைவர் அதற்கு உடன்படவில்லை .1996 தேர்தலில்  தமிழக கூட்டணி ஏற்படுத்துவதிலும் , தொகுதி பங்கீட்டில்  நிகழ்ந்த சிக்கலும் காங்கிரசுக்கு அதிமுகவுடனான உறவில் நெருடலை உருவாக்கிவிட்டது . அதில் முரண்பட்டு மூப்பனார் தனி கட்சி கண்டு ,  திமுக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தது . ஆனால் புதுவையில் அதிமுகவுடனான கூட்டு மிக இயல்பானது ,என்றாலும் தமிழக மோதலால் அகில இந்திய அளவில் தன்னை தக்கவைத்துக் கொள்ள அதிமுக கங்கிரஸுடன் முரண்படத்துவங்கியது . அதன் பாதிப்பு தேர்தலுக்கு பிறகு புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைவதில் எதிரொலித்தது

தமிழக அரசியலில் மூப்பனார் முக்கிய பங்கு வகித்தார் . திமுக தாமாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு அமைத்தது . 173 இடங்களில் தனித்து வெற்றிப்பெற்றதால் திமுகாவிற்கு கூட்டணி அவசியமில்லாது போனது . அதிமுக எதிர்பாராத வகையில் மிக சொற்பான 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது . மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா முதலில் ஸ்திரமில்லாத ஆட்சியாக அமைந்ததால்  , அதிமுக தனக்கான வாய்ப்பிற்கு காத்திருந்தது . எனவே மாநில தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரஸுடனான தனது உறவை முறித்தது . தலைவர் அதிமுக நிலைப்பட்டையும் , கண்ணனின் அலைபாயும் அரசியல் கணக்கையும் புரிந்துகொண்டு , ஆட்சி கோராது விலகி நிற்பது மாநில அரசியலுக்கு சரியானது என முடிவெடுத்தார் . அதன் காரணமாக கட்சிக்குள் பெரிய எதிர்பபை சந்திக்க வேண்டியிருந்தது . அதன் பின்னர்  புதுவையில் நிகழ்ந்த அனைத்து அரசியல் மாற்றங்களுக்கும் அதுவே முக்கிய காரணி என்றானது .

ஆட்சி அமைப்பது தொடர்பாக தலைவர் பல வகையில் நெருக்கடிக்கு ஆளானார் . அரசியலில் அழுத்தம் தாங்குவதும் ,வளைந்து கொடுக்காத தன்மையும் தலைமை பண்பிற்கு அடையாளமாக பார்க்கப்படுபவை . தலைமை தன் இருப்பை உணர்தத்துவது . பிறிதெவரையும் தன் நோக்கிற்கு கொண்டுவருவது . தன் அகவெளிச்சத்தை பாய்ச்சி காத்திருப்பது . ஆனால்  ஆட்சி அமைப்பதை சுற்றி எழுப்பட்ட ஒற்றைபடை கருத்து , பின்னர் எழுந்து  மாநில கட்சி அரசியலில் புதிய காலகட்டத்தை நோக்கி நகரும்படியானது . அதிலிருந்து விளைந்த பலன் என்ன என்பதை சில கால வரலாற்று நிகழ்விற்கு பிறகு கணிப்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன் . ஒரு முடிவை எடுத்த பிறகு அதிலிருந்து விலகுவதென்பது அவர் அறியாதது. அவரை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய இயலாத சூழலில் , எல்லோரும் அவரவர்களுடைய நேரத்திற்கு காத்திருந்தனர்.

இந்த சூழலில்தான் ராஜ்யசபைக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது . ஆளும் திமுக கூட்டணியில் இரண்டாவது இடத்திலிருந்த தாமாக ஐந்து உறுப்பினர்களை கொண்டதாக இருந்தாலும் , அதன் தலைவர் கண்ணனை சுயேட்சையாக சட்டமன்றம் அங்கீகரித்திருந்தது . கட்சி சின்னத்தில் நிற்கவேண்டிய கண்ணன் பலவித பேரங்களுக்கு வசதியாக சுயேட்சையாகிப்போனார் . மூப்பனார் கண்ணனின் மன ஓட்டத்தை அறிந்ததால் எதையும் தான் முன்னின்று செய்வதில் தயக்கம் காட்டினார் . கண்ணனால்  சீட்டு கொடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குள் மனோகரன் தவிற மற்ற அனைவரும் காங்கிரஸ் சீட்டு கிடைக்காததால் தாமாக விற்கு வந்தவர்கள் . அவர்கள் மேல் கண்ணனால் முற்றதிகாரம் கொள்ள இயலவில்லை . அதன் விலைவாக அனைவர் மீதும் சந்தேகப்படும் நிலைக்கு கண்ணன் தள்ளப்பட்டார் . அல்லது அவர் சந்தேகப்பட்டதால் அனைவரும் அவரிடம் மனவிலக்கம் கொண்டனர் . பெரும்பான்மை பெற்றுத் தர முயலும் ஒவ்வொரு சந்தர்ப்பமும்  கண்ணனின் அரசியல்  உயிர் வலிகண்டது .ராஜ்யசபா தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கூட்டணிக்குள் சிடுக்குகளை ஏற்படுத்தி கொண்டிருந்தது

அன்று இரவு வல்சராஜை சந்தித்த போது என்னிடம் வேறு சில விஷயம் பேசவேண்டுமென்றார் . நான் அங்கிருந்தபடி எனக்கு நம்பிக்கையான ஒருவருடன் அவர் சொன்ன போஸ்டர் விஷயத்தை சொல்லிவிட்டு அவர் பேச காத்திருந்தேன் . வல்சராஜ் என்னிடம்வெளியில் என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்றார் திடீரென . நான் சற்று நிதானமானேன் . “எதைப்பற்றி? என்றதும்” , அவருக்கு எரிச்சல் கண்களில் தோன்றி மறைந்தது . “ஆட்சியை பற்றித்தான்என்றார்இந்த அரசாங்கத்திற்கு அநேகமாக இதுதான் முதலும் கடைசியுமான பட்ஜெட் என பேசிக்கொள்கிறார்கள்என்றேன் . என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என தெரியுமா?”  என்றார் . நான் மெளனமாகஆம்என தலையாட்டினேன் . “எல்லா தளத்திலும் இதுபற்றிய அலராகவே இருக்கிறது . தாமாக உட்கட்சி பூசலால் இந்த ஆட்சி எந்நேரமும் கவிழ்ந்து போகவே வாய்ப்பு ஆனால் எனக்கு இரண்டு எண்ணங்கள், ஒன்று அதன் ரகசியத்தன்மை போய்விட்டது , இரண்டு இது மேலும் கட்சிக்குள் சமன்குலைவை அதிகப்படுத்தும் . உங்களுக்கு இதில் என்ன பங்கு என எனக்கு தெரியவில்லை . ஆனால் செயல்முறைகள் இவ்வளவு பகிரங்கமாக இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என்றேன்  . 

முன்னாள் அமைச்சர் காந்திராஜை பார்க்கவேண்டும் போகலாம்என்றார் , நானும் அவரும் காந்திராஜை பார்க்க புறப்பட்டோம் . வல்சராஜ் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார் என எனக்கு முன்பே தெரியும் . அவருக்கும் முன்னாள் முதல்வர்  வைத்திலிங்கத்திற்கும் சரி வராது. எனக்கும் அப்படித்தான் . இந்த முயற்சியில் அவர்தான் முன்னின்று செய்து கொண்டிருக்கிறார். “ஆட்சி கவிழ்ப்புஅரசியல் விளையாட்டில் தவிர்க்க இயலாத ஒரு நகர்வு  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...