https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 23 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 276 * தன்னை அறியும் தாகம் *

ஶ்ரீ:பதிவு : 276 /  364  / தேதி :- 23 டிசம்பர் 2017


* தன்னை அறியும் தாகம்  *ஆளுமையின் நிழல்   ” - 22
கருதுகோளின் கோட்டோவியம் -03அறிமுக நிமித்தமாக நடந்த உரையாடல்களில் அவர்களின் கடந்த கால அரசியலை கசப்புடன் பேசிக்கொண்டிருந்தனர் , அதன் மத்தியில் , நான் பாலன் தலைமையில் கலந்து கொண்ட சம்பவங்களும் பேசப்பட்ட போதுதான், அதைப்பற்றிய பிறிதொரு கோணத்தை அறிந்தவன் என்கிற முறையில் நான் சில புதிய தகவல்கள் சொன்னேன்.   நான் பிறிதொரு கோணத்தில் கருத்துக்களை வைத்தபோது , உரையாடல் விவாதமானது . அனைவரும் எனக்கெதிராக வெகுன்டெழுத்தனர் . அவர்கள் பார்வையில் என் கூற்று அதிகப்பிரசங்கியாக  பார்க்கப்பட்டதில் ஆச்சர்யபட ஒன்றில்லை , இரண்டு காரணங்களால் இயற்கையானதே. என் வயதும் , அரசியல் பார்வையும்.

உரையாடல்கள் துவங்கிய முதலிலே , அவை வருத்தம் தரும் தூர்ந்து போன கனவுகளிலிருந்தே  கதைகளாக புறப்பட்டனஅவர்கள் பலமணி நேரம் அதை விரித்த்தெடுத்த பின்னர் , நான் அதை நான்கு பிரிவுகளாக பிரித்து , தொகுத்து கொண்டேன் . இல்லையெனில் அது ஒரு மூத்தோரின் கதை என்றாகி அது எனக்கு தகவல்களாகவும் அறிவுரைகளாகவும் முடிவுறும் . அதன் பின் அதில் தர்க்கிக்க ஒன்றுமிருக்காது. முதல் ;பகுதி விடுதலை போர் காலம் . இரண்டு; விடுதலைக்கு பின் நேரு காமராஜ் குபேர் காலம் . மூன்று ; குபேரரின் வீழ்ச்சி சண்முகத்தின் எழுச்சி .நான்கு; சண்முகத்துக்கு எதிர்ப்பு , ஆதரவு , பின் நம்பிக்கை இழந்து விலகல் . என நான்காக அதை பிரித்து வைத்துக்கொண்டேன்.

முதல் விஷயம் புதுவை விடுதலை போராட்ட காலம். அதைப்பற்றி தலைவர் எனக்கு சொன்னவை சர்ச்சைக்கிடமான சம்பவங்கள் நிறைந்தவை . அதை எடுத்தால் பின் ஒருகாலமும் இவர்களுடன் அதை தர்க்கிக்க இயலாது . காரணம் என் வயது . இரண்டு நேரு காமராஜ் குபேர் காலகட்டம் இந்திய அரசியல் சரித்திரத்தின் வழியாக இதை பார்த்தால் அன்றி முழுமையாக என் தரப்பு எடுக்க முடியாது. இவர்கள் உணர்வுபூர்வமாக அதில் பிணைத்துள்ளதால், அதை முன்னெடுப்பதிலும் அர்த்தமில்லை . எனக்கு லாவகமாக நான்காம் பகுதியை தர்க்கத்துக்கு எடுத்து அதன் வழியாகவே முழுமையும் கடந்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றேன் . அதன் துவக்கம் ஏறக்குறைய எனது அடையாளமாதல் முதல் பகுதியிலிருந்து தொடங்கும் , அந்த கோரிமேடு ரணகளத்திலிருந்து துவங்கினேன் . மெல்ல அது பாலனிடம் வந்து தலைவரின் முயற்சி முறியடிக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு அணுக்கமாக வந்தது . என்னை பற்றிய புரிதலுக்கு அவர்களை கொண்டுவருவதற்கு இவை போதுமானதாக இருந்தது.

என்னை பற்றிய அவர்களின் அவதானிப்பை மூன்று தரப்பாக பிரித்து . என்னை ஏன்? தனித்தரப்பாக நிறுவிக்கொண்டேன் என்பதற்கான  விளக்கம் , அவர்களுக்கு என்னை மிக அணுக்கமாக கொண்டு நிறுத்த்தியது .ஒன்று; நான் தலைவரின் எதிர்ப்பில் என் அரசியலை துவங்கி , பின் அவரிடம் வந்து சேர்ந்ததால் ,அவரின் இரண்டுபக்கமும் அறிந்தவனாகிறேன் . ஆகவே எனது போதாமையாக அவர்கள் சொன்ன வயதிற்குரிய ஆர்வக்கோளாறு என்னிடம் இல்லை என்றானது . இரண்டு ; தலைவரின் முயற்சிகளை தோற்கடித்த தரப்பாக நிகழந்தை அவர்களுக்கு சொல்லி , அது அவரின் தனிப்பட்ட தோல்வியாக பார்ப்பது சரியல்ல என நிறுவினேன்

மூன்றாவது ; இது அத்தனையும் நான் பேசியதிலிருந்து ஒரு  நகர்ப்புற இளைஞனாக  அரசியல் தெரியாது பேசவந்துவிடவில்லை , என்பது நான் சொல்லாமலேயே அவர்களுக்கு புரிந்தது . இது அவர்களுக்கு என் மீதான அடிப்படை நம்பிக்கையை வளர்த்திருக்கலாம். நான் பேசுவதை கேட்க்கும் இடத்திற்கு  அவர்கள் வந்து சேர்ந்தது எனது நல்லூழ் . எனது திட்டமும் அதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையும் ,மேலிடத்திலிருந்து அவர்களுக்கு உதவவே நான் வந்திருப்பதை புரியவைத்ததும் . தங்களின் முதல் நிலை சிக்கலை தாண்டி அவர்கள் மேலெழுந்து  வந்தார்கள் .

எனது அனைத்து கலந்தாலோசனை கூடுகைகளிலும் அந்தந்த ஊர் பெரியவர்களையே இளைஞர் காங்கிரஸ் தொகுதி அமைப்பால்  மீள மீள முன்னிறுத்தப்பட்டார்கள் . அதுநாள் வரை மேலிட செல்வாக்கு என்கிற மாயையில் தொகுதியை கையில் வைத்திருந்த ஆளுமைகள் , இதை இயல்பாக எழுந்துவந்த மாற்றமாக புரிந்துகொண்டதுதான் அவர்களின் முதல் பிழை . நாங்கள் எடுத்த எந்த முயற்சிகளுக்கும் பின்னல் என் முகம் தெரிவதை முற்றிலுமாக தவிர்த்திருந்தேன் . அவர்களின் பலத்தையும் , களத்தில் அவர்கள் செல்லுக்கூடிய எல்லைகளையும் முன்னமே ஊசுடு போன்ற தொகுதிகளின் வழியாக அறிந்திருந்ததால் , அதை மையப்படுத்தியே அனைத்தையும் ஒருங்கமைத்திருந்தேன்

நான் நிகழ்த்திய அனைத்தும் சிறு சிறு கூடுகை என்பதால் அது யாருடைய கவனத்தையும் அன்று கவரவில்லை .வெற்று விளம்பரத்திற்காக ஆசைப்பட்டு , இதை கட்சி ரீதியில் வெளிப்படும் கூடுகையாக முன்னெடுத்திருந்தால் , தொகுதி தலைவர்களின் முன் அனுமதி பெறாது நிகழ்த்த இயலாது . இது சொல்லிவிட்டு செயகிற காரியமில்லை . நான் நிகழ்த்திய கூடுகைகள் இளைஞர் அமைப்பை மையப்படுத்தி இருந்ததால் இவர்களுக்கு சொல்லி செய்யவேண்டிய நிர்பந்தம் எனக்கு எழவில்லை

நாங்கள் கூட்டிய நிகழ்விற்கு ஊர் பெரியவர்கள் என்கிற முறைமையில் அவர்கள் கடைசி நிமிடத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டதால் . அது எதிர்நிலையாளர்களுக்கு  தெரிந்திருக்கவில்லை . அதில் கலந்துகொண்ட ஊர் பெரியவர்கள் , உட்கட்சி அரசியல் நிலைபாட்டாலும், பொது சமூகத்தில் அது டாம்பீக அரசியலாக நிகழ்வதை பார்த்து ஒதுங்கியதால் , மறக்கடிக்கப்பட்டவர்கள்  . பொது வாழ்கையை தேடலினாலும் பிறர்  பொருட்டும் பயணப்பட்டவர்கள் , அதை ஒரு சாகசமாக செய்வதில்லை. பிறரின் குமுறல் கண்டு உளம் நெகிழ்ந்து அளியின் பொருட்டு அவற்றை துரத்திவர்கள் . ஆனால்   வாழ்கை இனிமையாவது தேடலில் , அதனிலும் இனிமை அதை தொடும் தருணம் . தேடல் ஒரு தீரா தாகம்போல , அதை அடைய எதுவும் ஒரு தடையல்ல என்பதை எனது பயணத்தின் வழியாக அவர்களை உணர்கிறேன் , என்னையும் உணர்ந்து கொள்கிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக