https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 22 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 275 * பயணமும் வாய்ப்பும் *

ஶ்ரீ:




பதிவு : 275 / 362 / தேதி :- 22 டிசம்பர் 2017


* பயணமும் வாய்ப்பும்  *



ஆளுமையின் நிழல்   ” - 21
கருதுகோளின் கோட்டோவியம் -03





ஊழின்  ஆடல்கள் விசித்திரமானவை , பறிதொருவருடைய வாழ்வில் நிகழும்போது  அதை அவதானிப்பதில் கிடைப்பவை, அளப்பரிய புரிதல்கள் . அவற்றை நமக்கான படிப்பினையாக அடைந்தால் , அவை நம் வாழ்வின் பல கதவுகளை திறக்க வல்லவை . நமக்கான அறிதல் அனைத்து நம் வாழ்கையிலிருந்தே கிடைக்க வேண்டுமாயின் ஒரு வாழ்வின் காலம்  போதாது .  

திரளான அமைப்பு பலமும்  , ஊர் பெரியவர்களின் மத்தியில் கிடைத்த  எதிர்நோக்காத அங்கீகாரமும்  , நான் அறியாத ஊழின் விளையாட்டு களத்தின் ஒரு காய் என ,என்னை கொண்டு வைத்திருந்தது . ஒரு வழி திறந்ததும் ,  அதை உளம் ஒப்பி செய்ய, நான் நினைத்ததை முடிக்கவேண்டும் , என்கிற ஒற்றை விழைவைவால் உந்தப்பட்டு, இப்போது இங்கு வந்து நிற்கிறேன் . அதை நிகழ்த்த எனக்கு உதவியது என் கடந்த கால அனுபவம். நான்   எனது எதிர்கால கணக்கை திட்டமிட்டு கொண்டிருக்கையில் . ஊழ், என் வருங்காலத்திற்கான புதுப் பாடதிட்டத்தை ,வேறு வகையில் துவங்கியிருந்ததை அப்போது நான் அறிந்திருக்கவில்லை

என்னை கடந்து சென்ற காலத்திடமிருந்து  நான் கற்றதும் , பெற்றதும் , அடைந்ததும் அதிலிருந்து இழந்ததுமாக , அனைத்தும் என் வயதிற்கு மீறியவை. காலம்  இதம் இத்தம் என்கிற நிர்ணயத்திற்கு உட்பட்டதல்ல , அதன் எண்ணிலடங்கா கணக்குகள் மானுட எல்லைக்கு அப்பாற்ப்பட்ட அறியாமை என்கிற கடுவெளியில் நிறைந்திருப்பவை . இன்று வாழ்ந்து நாளை மடியும் எளிய மானுடர்க்கு எதையும் ஒரு எல்லைக்கு மேல் பார்க்கும் பார்வை இல்லை . நாளை விடியல் மீள மீள நிகழ்ந்து கொண்டிருந்தாலும் நேற்றும் இன்றும் எப்படி வேறுவேறோ, அதைப்போலவே நாளையும் வேறுவிதமாக தான் விடியப்போகிறது

நமது ஆரம்பகால தேசத்தலைவர்களெல்லாம் அடிப்படையில் சாமானியர்கள். ஆனால் தொடர்ச்சியாக மகாராஜாக்களின், வைஸ்ராய்களின், வாழ்க்கையை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ராஜரீகம் என்றால் அரசத்தோரணை என்பதை கண்டு கற்று வளர்ந்தவர்கள்தானே அவர்கள்? காந்தி அவர்களை கதர் துணியிலும் எளிமையிலும் கட்டிப்போட்டிருந்தார். உள்ளே அவர்களின் ஆத்மா ஏங்கிக் கொண்டிருந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததுமே நமது காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே வைஸ்ராய் ஆகும் கனவுகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்எனகிறார் ஜெயமோகன் தனதுஇன்றைய காந்திஎன்கிற ஆக்கத்தில்.

கட்சி ரீதியில் காந்தியாலும் , காமராஜராலும்  ஈர்ககப்பட்டு  உள்நுழைந்தவர்கள். அவர்களில் பெரும்பான்மையினர் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் . புதுவை சுதந்திர காலத்திற்கு பின்னாளில் ஆட்சி அமைந்தபோது அதில்  நடந்த அரசியல் சதுரங்கத்தில் தங்களுடன் தோள்கொடுத்து நின்றவர்கள் , பதவியில் அமர்ந்தபோது பொது நலம் விலகி சொந்த கணக்கில் செயல்பட்டதை கண்டபின் , அதிர்ந்து போய் பிறிதெவரையும் விட சண்முகம் நம்பத்தகுந்தவர் என்கிற அளவில்தான் அவரை ஏற்றார்கள்

ஆனால் அவர்கள் தலைவரை குறை சொல்லி துவங்கிய உரையாடல் அவரின் அந்த கட்சி நிர்வாக சீர்திருத்த முயற்ச்சியை அவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தவர்கள் . அது தோல்வியை தழுவியதால் , வெறுப்பில் கட்சி அரசியலையும் விட்டார்கள் , தலைவரையும் விட்டு விலகினார்கள் . கட்சி அரசியலின் உள்விளையாட்டை அவர்கள் அறியாததால் . வெற்றியடையாத தலைமையின் காரணங்களையும் , சங்கடங்களையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாது போனதுஅதன் விளைவாக தலைவருடனான அவர்களுடைய உறவு எக்காலத்துக்குமாக தூர்ந்து போயிற்று

அவர்களின் கடந்த கால வரலாற்றை சொல்லக் கேட்கும் வாய்ப்பின் மத்தியில்தான் , நான் பாலன் தலைமையில் கலந்து கொண்ட சம்பவங்களும் பேசப்பட்டன . அதன் உள்விவகாரமாக சில கருத்துக்களை நான் வைத்தபோதுதான் , உரையாடல் விவாதம் என்கிற நிலையை அடைந்தது . நான் அதை விவாதத்தை நோக்கி நகர்த்தி பேச ஆரம்பித்ததும் , அனைவரும் எனக்கெதிராக வெகுன்டெழுத்தனர் . அவர்கள் பார்வையில் என் கூற்று குற்றமாக பார்க்கப்பட்டதில் , ஆச்சர்யபட ஒன்றில்லை , அது இரண்டு காரணங்களால் இயற்கையானதே.

ஒன்று; இவன் சிறுவன் . இவனுக்கு என்ன தெரியும் பழைய கதைகளைப்பற்றி?, என்கிற கிராமத்து பெரிசுகளின் இயல்பான கோபம் . இரண்டு; நான் தலைவரின் தீவிரமான ஆதரவாளன் ஆகையால் என்னால் இருபக்க உண்மையை உண்மையாக பார்க்கும் கண் இல்லை என்பதாக இருந்தது . இதில் சர்வ ஜாக்கிரதையாக என்னால் வெளிவர முடியாது போனால் . அனைத்தும் இன்று , இப்போதே முடிந்து போனது, என்றே எடுத்துக் கொள்ள வேண்டியது தான் ,என்கிற நிலையை அடைந்து விட்டது .

எனது பயணம் பற்றிய புரிதல் எனக்கிருந்தது. அதன் இலக்காக நான் நினைத்திருந்தது முழு உருவடையாத ஒரு கருதுகோள் மட்டுமே . சரியான வடிவம் எனக்கு பயணத்தின் போது உருவாகிவரும் என்கிற நம்பிக்கை இருந்தது . ஆனால் பயணத்திற்கான பாதையும் , கொண்டுசெல்லும் ஊடகம் தேடி இங்கு வந்திருக்கிறேன் . அவை சிதைந்து கிடைப்பதால் அதை எவர் சீர்செய்ய இயலுமோ அது அவர் வாகனம் என்றாகி விடுகிறது . எனது முயற்சியின் முதல் நோக்கம், தலைவர் நான் எனக்கு ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தை அனுமதித்தார் என்பது

அதற்கு நான் செய்யக்கூடிய பதில் இது என்பதாக இருத்தலும் , கட்சி என்பது தேர்தலை நோக்கி நகரும் அமைப்பாக மாறிவிட்டதால் அதில் உட்கட்சி அரசியலுக்கு இடமில்லாது போனது . ஆட்சி என்பது எண்ணிக்கை அடிப்படையிலானது . அதை அடைவதற்கு இருபுறமும் நிகழும் சமன்பாடுகளே முக்கிய பங்கு வகிக்கின்றன . அது நிகழும் தோரும் கட்சி அமைப்பு மெல்ல மரணிக்க துவங்குகிறது. எனக்கான தளமாக ஒன்றை கட்டி எழுப்பும் முயற்சியாக இதை செய்தேன் . வெற்றி எனக்கான தனித்த அடையாளத்தையும் அதிகாரத்தையும் கொடுக்கும் . தோல்வியும் கொண்டாடத்தக்கதே. அது கொடுப்பது போல அனுபவத்தை பிறிதொன்று கொடுப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக