https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 16 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 269 * மறுமுனையைத் தேடி *

ஶ்ரீ:பதிவு : 269 / 356 / தேதி :- 16 டிசம்பர் 2017

* மறுமுனையைத் தேடி *ஆளுமையின் நிழல்   ” - 15
கருதுகோளின் கோட்டோவியம் -03எளிய குடிமை சமூகத்தின் நம்பிக்கையை அரசிலில் பொருட்டு பெறுவதும் , அதை நேர்மறையான  வழியில் நடத்தி செல்வதும்  வளரும் அரசியலாளனுக்கு  எண்ணியிராத கிடைக்கும்  மூலதனம் . அரிதான சந்தர்ப்பங்களில் தான் அது நிகழ்கிறது . அதே சமயம் பெற்ற நம்பிக்கையை தக்கவைக்கும் திசையின் பயணிப்பது மட்டும் போதுமானதல்ல. அறியாமல் நிகழும் சிறு பிறழ்வு பெற்ற மொத்தமும் காணாமலாக்கிவிடும். நாம் நினைப்பதையும் பார்ப்பதையும் சொல்லி நம் இலக்கை அவர்களுக்கு புரியவைத்துவிடுவது எளிதல்ல . விஷயங்களுக்கான நமது தீர்வு எப்பவும் சரியாகவே இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதம்  இல்லை. அதை போன்றதொரு சூழலில் அரசியலும் ,மக்களின் விழைவும் நேர் கோட்டில் வர அவர்களை வெறும் பேச்சினால் மட்டும் நம் பின்னால் திரட்டிவிட இயலாது. முரண் பட்ட எண்ணங்கள் தவிற்க இயலாதது  . அத்தகைய சந்தர்பங்களில் நம்பிக்கையுடன் காலத்திற்கு காத்திருப்பு ஒன்றே அவற்றை கடக்கும் வழி என இருந்திருக்கிறேன் . அவை ஒருநாள் நாம் நினைத்ததில் கொண்டு நிறுத்தப்படலாம் . அப்போது நாம் அங்கு இருப்போமானால் , அது நமது நல்லூழ் மட்டுமே. அவை எளிதில் கைகூடுவதில்லை . உள் நுழைய ஒரு விழி இருந்தால் வெளியேறும் வழியும் இருந்துதான் ஆகவேண்டும் என்கிற நம்பிக்கையே பயணத்திற்கான ஒரே துணை.

இது ஜனநாயகம். ஜனநாயகம் நிதானமானது. ஒவ்வொருவரின் நலனும் பிறர் நலனுடன் மோதுவது என்பதனால் ஒரு சிறு விஷயம்கூட ஒரு முரணியக்கத்தின் இறுதியில் ஒரு சமரசப்புள்ளியில் மட்டுமே இங்கே நிகழ முடியும். எதுவும் எளிதில் நிகழாதென்பதனால் எதுவுமே நிகழவில்லை என்ற பிரமையை அளிப்பது ஜனநாயகம். ஆனால் ஜனநாயகம் என்ற செயல்பாடு உள்ளவரை மக்களின் எண்ணங்கள் சமூகத்தையும் அரசையும் மாற்றியே தீரும் என்பதற்கான சான்றும் இந்தியாவேஎனகிறார் ஜெயமோகன்

“ 1988ல் நான் ஆனந்தை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். என்னுடைய முதிராத மனநிலையில் ஐயங்களை கேட்டுக்கொண்டே இருந்தேன். பொறுமையாகப் பதிலளித்தவர் சிரித்தபடிமக்கள் என்பது கடவுள் போல. நாம் பிரார்த்தனை செய்வதையும் உபாசனை செய்வதையும் அது கேட்கிறது என நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.” எனகிறார் ஜெயமோகன். நாம் நினைப்பதை நாமே செய்தும்  பார்த்தும்விட முடியும் என நினைப்பதும் , ஒரு பேராசைதான் போலும்.

எனக்கு அது பற்றி சிந்திக்கும் வாய்ப்பும் அதை உரியவர்களிடம் பேசுவது போல ஒரு வாய்ப்பும் கிடைத்தது நல்லூழ் என்றே நினைக்கிறேன் . ஒன்று; பாலனுக்காக செயல்பட்டபோது. பிறிதொன்று ; என்னை நான் தேடி கிளம்பி , பின் சிறு கூடுகைகளின் வழியாக கண்டடைந்தது . முன்னதில்   கண்டது  வெறும் தடைகளை மட்டுமே . ஆனால் இன்று இவ்விடத்தில் அவை வேறு வகையானவைகளாக இருக்கின்றன . முதலில் அதை ஊசுடுவில் துவங்கும்மோதே அதனிலிருந்து கிளைக்கும் எதிர்வினைகளை அறிந்து கொள்ள முடிந்தது . இப்போது கால் வைக்கும் இடத்திலெல்லாம் எதிரிகள் முளைத்தபடி இருக்கின்றனர் . எப்போதும் குத்துப்பட்டபடி இருப்பது மனதை சலிக்க செய்வது . ஆனால் எளிய மக்களிடமிருந்து எழும் அந்த ஆதரவும் அங்கீகாரமும்  உற்சாகமாக அவை எழுந்து வரும் போது, பட்ட வலிகள்   அனைத்தும் ஒன்றுமில்லாதபடி செய்துவிடும் .

மாநிலத் தலைமை எனக்கு அனுகுணமாக இருந்தாலும் , நிகழ் அரசியலின் சூழ்தல்கள் பெரிய சவால்களை கொடுத்துக்கொண்டிருந்தன . களத்தில் தலைவர் ஒரு காலத்தில் கைவிட்டதை மீளவும் நான் நிறுவ முயச்சிப்பது , என் அரசியல் எதிர்காலத்தை ஒன்றுமில்லாது செய்துவிடக் கூடியது என புரிந்திருந்தேன் . அதை செய்யாமல் விடுவேனானால்  என் எதிர்காலத்திற்கு யார் உறுதிச்சொல்ல போகிறார்கள்?. அப்படியே சொல்பவர்கள் இருந்தாலும்  அவர்களும்  காலத்திற்கு, சூழலுக்கும் , மனதிற்கும், விழைவுகளுக்கும் ஆதீனமானவர்கள் தானே . ஆனால் இதை செய்யவதனூடாக எனது எதிர்காலம் என ஒன்று இல்லாது போனாலும் , இப்படி ஒன்றை முயற்சித்தேன் என்பதே என் வாழ்வினை அர்த்தமுள்ளதாக ஆக்கக்கூடியது என்கிற நினைவே நிறைவை தருவது.

நேர்மறையான அரசியல் வழிமுறையில் யாருக்கும் எதற்கும் இறைஞ்சுவதில்லை . அது ஒருவித ஆணவம் போல. அது இல்லையென்றால் இங்கு காற்று வீசும் திசைகளிலெல்லாம் ஓடி முடிவில் மரணிக்க மட்டுமே முடியும் . அத்தகைய சூழலில்  காலம் என்னை அதிகாரத்தின் மையத்தின் பக்கத்தில் கொண்டு வைத்ததுடன், அதில் எனக்கான கணக்கையும் தொடங்கிவைத்தது . அரசியலில் பலரின் உழைப்பு எப்போதும் அடுத்தவர் கணக்கில் தான் வரவு வைக்கப்படுகின்றது . தனி கணக்கென்பது , சாத்தியமில்லாதது

நடப்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பையும் அதில் சில விஷயங்களை செய்தவன் என்கிற வகையில் ஜெயமோகன் சொல்லில் அவைசரித்திரத்தில் போல , நானும் அங்கிருந்தேன் . சரித்திரத்தில் ஒருக்கால் நான் நினைவுகூரப்படலாம் .ஆனால் அந்த சரித்திரங்கள் நிகழ்க்கையில் நான்  அங்கு இருந்தேன் . அதன் முழு தாக்கத்தை என் ஆழ்மனம் பெற்றுக்கொண்டது . அதை ஜீரணிக்கும் வயதோ அனுபவமோ ஞானமோ அன்று இல்லாத நிலையில் இருந்து , இன்றைய இலக்கிய வசிப்பினூடாக கிடைக்கும் புரிதல்களில் என் ஆழ்மனதை பொருந்தி அவற்றை மீளவும் நிகழ்த்தி அதன் நுட்பங்களின் தொகைகளை அணுக்கமாக பார்க்க முயலுகிறேன்.

அவரின் சொல்லாட்சிகள் எனக்கு மிக அற்புதமான திறப்புகளை கொடுக்க வல்லதாக இருக்கின்றன . என்னை எழுதவைக்கும் உந்து சக்தியை , நான் இங்கிருந்தே பெறுகிறேன். அதன் பல பரிமாணங்களை என்னால் இப்போது அணுகி பார்க்க முடிகிறது . வல்சராஜ் என்னை இந்த பதவிக்கு கொண்டுவராது போய் இருந்தால், நான் எனக்கான திட்டம் என ஒன்றில்லாத இடத்தில்கூட எனக்கான வேறு வாய்ப்புகள் எழுந்து வர காத்திருந்திருப்பேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...