https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 6 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 258 * வரலாற்றின் பரிணாமம் *

ஶ்ரீ:



பதிவு : 258 / 345 / தேதி :- 05 டிசம்பர் 2017

* வரலாற்றின்  பரிணாமம்   *


“ ஆளுமையின் நிழல்   ” - 04
கருதுகோளின் கோட்டோவியம் -03




ராஜ்யசபை தேர்தல்  சட்டமன்ற உறுப்பினர்களை வாக்காளர்க்ளாக கொண்டது , ஆகவே குடிமை சமூகத்திற்கும் அதற்கும் எந்த தொடர்புமில்லை . வாக்காளர்கள் அனைவரும் அரசியலாளர்கள் என்பதால் அதின் வேலைகள் மிக நுண்மையானதாக இருந்தன . பத்திரிக்கையாளர் சந்திப்பும். தொடர்புகளும் இதில் செறிவாக பயன்படுத்தபட வேண்டும். ஆனால் அன்று அது உண்டாட்டாக மட்டுமே ஒருங்கியிருந்தது  . புதுவை காங்கிரஸ் கலாச்சாரமாக அது இருந்ததில்லை.

தில்லி நிருபர்களின் வருகையால் , செய்திகள் அகில இந்திய அளவிலானதாக முக்கியத்துவம் பெற்றுவிட்டது . செய்தி வெளியாகும் முறைமையை முன்கூட்டி அவதானித்து அவை அறிக்கையாக வெளியாகும்படி பார்த்துக் கொள்வது மிகவும் சிடுக்கானது . அறிக்கைகள்  எப்போதும் பல்வேறு செய்திகளை வளையங்கள், வளையங்களாக கொண்ட முறையை சொற்களாகவே அவை எப்போதும் கோர்க்கப்படுவது . சிறு பிழையும் தவறான அர்த்தம் தொணிக்கும்படி உருவாகிவிடும் . அது சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது , பின் அதை துரத்தி சரிசெய்வது சாத்தியமில்லை. செறிவான முறைமை சொற்கள் நல்ல  பத்திரிக்கையாளர்களை தூண்டுபவை. அவர்கள் அதனூடாக நாம் சொல்ல விழைவதை செய்திகளாக புனைவதால் , அவை வாக்காளர் மத்தியில் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை  முதலிலிருந்தே மேல் கீழ் என்கிற அடுக்கு முறைக்குள் கொண்டுவந்து விடும்

தலைவரின் அனுகுமுறைகளை முற்றாக ஒதுக்கி நாராயணசாமி தான் நினைத்தபடி தன் பாணி அரசியலை தொடங்கிவிட்டிருந்ததால் தலைவரால் அவரை கட்டுப்படுத்தமுடியாத நிலையை நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருந்தார். வல்சராஜ் நாராயணசாமியின் கட்டுப்பாடில்லா நிலையை தன் எதிர்காலம் விழைவின் பொருட்டு ஆதரித்துக் கொண்டிருந்தார் என நினைக்கிறேன் . அதே சமயம் அவரிடம் தன் சொல்லுக்கும் ஒரு எல்லையிருந்ததையும் அறிந்திருந்தார்.

தலைவரின் கட்சி முற்றதிகாரம் ஒரு கால முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது . அரசியலின் இந்த வளர்சிதை மாற்றம் தவிர்க்க இயலாத வரலாற்று தருணங்கள் .  அது எப்போதும் மீள மீள நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.நாராயணசாமி தனது அகில இந்திய பத்திரிக்கையாளர் நல்லுறவை இதில் முழுமையாக பயன்படுத்திக்கொண்டார்.பத்திரிக்கையாளர்கள் புதுவையில் வந்து குவிவது இதற்கு முன் நடந்திராதது . அகில இந்திய பத்திரிக்கையின் கவனத்தை இது ஈர்த்தது . இதற்கு பின்னல் உள்ள அரசியல் மிக ஆழமும் நுட்பமும் கூடியவை . அவற்றிற்கு புதுவையின் அடுத்த தலைமுறை அரசியலை கட்டமைக்கும் திறனிருப்பதை என்னால் உணரமுடிந்தது . பத்திரிக்கை எப்போதும் ஒரு சார்பானவை என சொல்லிவிட முடியாது . நமது தவறு போட்டியாளருக்கு வாய்ப்பை நாமே வலிந்து சென்று தருவதைப்போல சந்தர்ப்பம் வாய்த்துவிடுவதும் உண்டு   . 

இத்தகைய சூழலில் பத்திரிக்கையாளர் உண்டாட்டு தேவையா என்கிற குழப்பம் முதலிருந்து . பத்திரிக்கை செய்தி எந்த நுட்பத்துடன் சொல்லப்படவேண்டும் என்கிற கணக்கில் நிறைய வேலைகள் செய்யப்பட்டிருந்தன . அவற்றை ஒப்பு நோக்க நான் என் பத்திரிக்கை நண்பர்களைத் தொடும்போதுதான் , இளம் பத்திரிக்கையாளர்கள் நாராயணசாமிக்கு எதிரான மனச்சாய்வை உணர முடிந்தது. அவர்களுக்கு நாராயணசாமி மீது இன்னதென ஒரு காரணமும் இல்லாத அசூயை இருந்தது . அது அவருக்கு எதிரென இயல்பாக எங்கும் காற்றைப்போல பரவியிருந்தது.

முறைமை மீறலாக இருந்தாலும் நாராயணசாமி  நிச்சயம் உண்டாட்டில் கலந்து கொள்வர் என நினைத்தேன் . நான் வல்சராஜிடம் நினைவு  படுத்த சூழலின் மாறுபாட்டை அவரும் உணர்ந்திருந்தார்லிப்ட்டின் கதவு திறக்க வெளிவந்த நாராயணசாமி என் அழைப்பை கையில் எடுத்து என்னிடம் என்ன ?என  கண்களால் கேட்டபடி அந்த விருந்து நடைபெறும் ஹாலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் . நான் வல்சராஜை பார்த்தேன் அவர் அதிருப்தியை  வெளிக்காட்டிகொள்ளாது வரவேற்று அவருடன் இணைந்து கொண்டார் . நாராயணசாமி தில்லியிலிருந்து வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் குழுமியிருந்த ஒவ்வொரு மேஜையாக சென்று மிகுந்த நட்புடன் பேசிக்கொண்டிருந்தார் . அவர் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசியபடி மேஜைக்கு மேஜை நகர , வல்சராஜும் அவரை தொடர்ந்து கொண்டே இருந்தார் . நான் எதிர்வரும் சிக்கலை சமாளிக்க அதிருப்தியாளர்களை பிரத்யேகமாக கவனிக்க தொடங்கினேன்.

அந்த ஹால் முழுவதும் நிறைய மேஜைகள் போடப்பட்டு சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் குழுமி இருந்தனர் . அவரவர் குழுவுடன் தனித்ததனியாக அமரும் படி மேஜைகள் ஒருங்கியிருந்தன . எங்குமுள்ள குறுங்குழு பிரிவினை அங்கும் நிறைந்திருந்தது . உள்ளூர் வெளியூர், அயல்நாட்டு பத்திரிக்கையாளர் , விசேஷ நிருபர்கள் . பத்தி எழுத்தாளர்கள் . தொலைக்காட்சி நிருபர்கள் ,இளைஞர்களென  என ரக வாரியாக பிரிந்து கிடந்தார்கள்

உள்ளூர் இளம் பத்திரிகையாள்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் இருந்தது . அவர்கள்  ஹாலின் பின் ஓரப்பகுதிகளில் உள்ள மேஜைகளில்  அமர்ந்திருந்தார்கள் . நான் சென்று அவர்களுடன் இணைந்து கொண்டேன் . பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நிலவும்  அரசியலை பல காலமாக அறிந்திருந்தும் . அதன் பல பரிமாணங்களில் அதைப் பாரத்துக்கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த மேஜையில் தில்லி  இளம் பத்திரிக்கையாளர்   சிலர் நடப்பின் அடைப்படையில் அங்கு அமர்ந்திருந்தார்கள். பத்திரிக்கை துறை உள்விவகாரங்களை உரக்க சிரித்து பேசி ஒருவரை ஒருவர் பகடி செய்துகொண்டிருந்தனர் . அன்று பத்திரிக்கை பற்றிய நான் அடைந்த புரிதல்கள் அளப்பரியவை

அன்று நிகழ்ந்ததை அனுகி புரிந்து கொண்டதையும் , அது நிகழ் அரசியலை எதை நோக்கி நகர்த்தமுடியும்? என்கிற கேள்வியை அன்று அவசியமில்லாத காரணத்தால் நான் என்னை கேட்டுக்கொள்ளவில்லை . ஆனால் அதன் பிறிதொரு கோணத்தை சொன்னது  .சமீபத்தில் நான் வாசித்த ஜெயமோகனின்  சாட்சி மொழி என்கிற கட்டுரை தொகுப்பு . அவரிடம் கேடக்கபட்ட கேள்விஅரசியல் நிகழ்வுகளில் நீங்கள் பெரும்பாலும் மௌனம் சாதிக்கிறீர்களே ஏன்? உங்கள் கருத்துகளை ஏன் எழுதுவதில்லை? . “பொதுவாக ஊடகச் செய்திகளை நம்பி அரசியல் சமூகப்பிரச்சினைகளை அலசுவதில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை கிடையாது, ஏன் என்றால் எனக்கு ஊடகவியலாளர்களிடம் நெருக்கமான தொடர்புகள் பலவருடங்களாக உண்டு. அவர்கள் எப்படி செய்தி சேகரிக்கிறார்கள், எப்படி செய்திகளை உண்டு பண்ணுகிறார்கள், எந்தெந்தச் சூழல்களில் செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று நான் நன்றாகவே அறிவேன். ஊடகம் எதுவானாலும் அவற்றின் நம்பகத்தன்மை கால்பங்குதான். ஒட்டுமொத்தமாக ஊடகங்கள் என்பவை பல்வேறு சக்திகளால் இயக்கப்படும் ஒரு பெரும் கருத்துத்தரப்பு என்று சொல்லலாம். ஊடகங்களின் கருத்துநிலையை உருவாக்கும் நான்கு சக்திகள் இவை."

பிராந்திய மொழிகளில் உள்ள ஊடகவியலாளர்கள் ஆங்கில ஊடகவியலாளர்கள் பெறும் சம்பளத்தில் பத்தில் ஒருபங்கு ஊதியம் பெறுபவர்கள். வருமானத்துக்காக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரைப்படத்துறையினரின் இனாம்களை நம்பி வாழ்பவர்கள். ஆகவே தன்னம்பிக்கை இல்லாதவர்கள். இவர்களில் படிக்கும் பழக்கமுள்ளவர்கள் மிக மிகக் குறைவே. பெரும்பாலானவர்கள் பாமரர்கள் என்றே சொல்ல வேண்டும். இவர்கள் ஆங்கில ஊடகவியலாளர்களை நம்பி அவர்களை பிரதி எடுப்பதையே தங்கள் செயல்பாடாகக் கொண்டிருக்கிறார்கள்." என்றார் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்