https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 2 டிசம்பர், 2017

வெண்முரசு புதுவை கூடுகை 10

ஶ்ரீ:


பதிவு / 341 / தேதி / 01 டிசம்பர் 2017


வெண்முரசு புதுவை கூடுகை -10 
முதறகனல் ஆடியின் ஆழம் 



புதுவை வெண்முரசு தனது 10 வது கூடுகை தலைப்பு முதற்கனல் - ஆடியின் ஆழம் . மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது என்று சொல்லினால் அது வெறும் சம்பிரதாய பேச்சு போலாகிவிடும் . அது அதைக் கடந்தது . நண்பர் ராதாகிருஷ்ணன் உரையாடியதை நினைத்துப்பார்க்கிறேன் . நினைவில் அடங்காததை சொல்லில் அடக்கமாக சொல்லி முடித்தார் . மிக ஆழமான வாசிப்பும் அதைவிட அதை சொல்லிய முறையும் இன்னும் காதில் ஒலித்தபடி இருக்கிறது . ஏறக்குறைய அதன் அனைத்து புள்ளிகளும் அவரால் தொட்டெடுக்கப்பட்டு விட்டது . ஒவ்வொன்றையும் மிக ஆழமாக திறந்து ஆய்ந்து சொன்னது வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச்செல்வதாக இருந்தது . அவருக்கு பாராட்டுக்கள் . அதை பதிவாக இடச்சொன்னேன் . முடியுமா எனத்தெரியவில்லை என்றார் . ஆம் அது உண்மையே . அதனால் என் பதிவில் சொல்லாட்சி மட்டும் அப்படியே நினைவில் நிற்க தொகுத்து மட்டுமே இருக்கிறேன்

வெண்முரசு முதற்கனலின் சிகரம் என்றால் அது ஆடியின் ஆழமாகத்தான் இருக்க முடியும் . இயல்பான உருத்தாத தத்துவங்களால் கோர்க்கப்பட்ட பகுதியாக நகர்ந்து செல்கிறது ; பல சுவை நிறைந்ததாக , பல வண்ணம் நிறைந்ததாக , பல அளவு உள்ளதாக. பின்னர் வெண்முரசென கிளைக்க தயாரான விதைகளின் தொகுப்பு இது என்றால் மிகையல்ல .

அகவயமாக நிகழ்வதை நிகழ்த்துவது எது என்கிற கேள்வி ? அதை யார் எதற்காக நிகழ்த்துகிறார் என்கிற புரியாமை இருந்தாலும் . அது அனைவருக்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது . வெகு சிலர் மட்டுமே அதை அவதானிக்கும் முயற்சியில்  இருக்கிறார்கள் . அதன் வழியாக தங்களின் வாழ்வியலுக்கு அது சொல்லவிழைவதை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் . அது தன்னை எல்லோருக்குள்ளும் நிகழ்த்திபடியே இருக்கிறது . ஆனால் அதை உணர விழையாதவர்களுக்குள் அது நிகழ்தினால் என்ன பயன்....... ?அவர்கள் பிறிதெவரின் கை ஆயுதமாகி விடுகிறார்கள் போலும். ஒவ்வருவருக்கும் தங்களைப்பற்றிய மிகை நம்பிக்கை இருப்பதையும் , அதுவே சொல்படும் என்கிற விழைகையில் , முற்றாக எதிர்நோக்காத தருணத்திலிருந்து பிறிதொன்று எழுந்து வருகின்றது

நிலக்காட்சிகளை பற்றிய நுண்மையான வர்ணனைகளும் , அதை ஒட்டிய பிற காட்சி சித்தரிப்புகளும் , உருவெளித் தோற்றம் போல கண்முன் விரிகின்றது . அவை நிகழ்வுகளை இன்னும் அனுக்கமாக நெருங்கி பார்க்க வைக்கின்றன . புதிதாக ஒரு திறப்பு என ஒன்று நிகழ்வது , இதை ஒட்டியே என நினைக்கின்றேன் . இதுதான்  எழுதுதலின் தொழில்நுட்பம் போலும். திரு.ஜெயமோகன் அதன் அனைத்து புள்ளிகளிலும்  தன்னை நிறைத்துக்கொடுக்கிறார்.

சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார் அக்னிவேசர்.” குறிப்பாக இடத்தை உணர்த்துவது எப்போதும் நேரடியாக சொல்ல இயலாததால் . இருக்க வேண்டியவைகளையும் கடக்க வேண்டியவைகளையும் சொல்லியே அவற்றை நிரூவ முடிவதால் , எப்போதும் தத்துவம் குழப்புவதாக தோன்றிவிடுகின்றன .

புறத்தை கட்டுப்படுத்தியவன் அதன் அகப்பிம்பமான அகத்தையும் கட்டுப்படுத்தியவனாவான். இருபுடை வல்லமைகொண்ட அவனையே ஸவ்யசாச்சி என்று தனுர்வேதம் போற்றுகிறது" என்றார் அக்னிவேசர். "ஒருகையால் உள்ளத்தையும் மறுகையால் உடலையும் கையாள்பவன் அவன். ஒருமுனையில் அம்பும் மறுமுனையில் இலக்கும் கொண்டவன். அவன் ஒருமுனையில் பிரபஞ்சமும் மறுமுனையில் பிரம்மமும் நிற்கக்காண்பான்.” என்று வெண்முரசு தனுர்வேத மெயம்மையை சொல்ல வருகிறது . இரு கைகளாலும் அம்பு தொடுக்க தெரிந்தவன் ஒரு இயந்திரம் மட்டுமே ...அதனால் அவன் ஸவ்யசாச்சி.

அக்னிவேசர் சொன்னார் "துரோணா, வித்தையின் பொருட்டு மட்டுமான வித்தையே ஞானமாகக் கனியும். ஞானத்தை வெல்வதற்கான ஆசையே கூட வித்தைக்கு தடையேவித்தையின் இன்பம், அதன் முழுமைக்கான தேடல், வித்தையாக நாமே ஆவதன் எளிமை மூன்றுமே வித்தையை முழுமையாக்கும் மூன்று மனநிலைகள். வேறெதுவும் கற்பவனின் அகத்தில் இருக்கக் கூடாது." துரோணர் வணங்கினார். "நீ வெல்ல வேண்டிய எதிரி அதுவே. அதற்கென்றே வில்லை ஆள்வாயாக!” போன்றவைகள் உருத்தாத தத்துவமாக ஒளிர்கிறது.

இதில் சொல்லாட்சியும் உவமைகளும் கவனத்தை கவருபவைகள்

-“காடு திறந்து ஒரு மலைச்சரிவின் முனை வந்தது. வானம் வெகுதொலைவுக்குக் கீழிறங்கியது. கீழே பாறைகள் நடுவே கங்கையின் ஓடை ஒன்று சிறிய வெண்ணிறச் சால்வைபோல கிடந்ததுஅந்த கண்முன்னே காடு திறந்து கொள்வதை உணரமுடிகிறது

-முற்றத்தொடங்கிய கோதுமைக்கதிர்கள் அடர்நீலநிறத் தாள்களுடன் செறிந்து நின்றனஇதை மெனக்கெட்டு கூகியதில் அந்த அடர் நீலம் பச்சையின் கூடுதல் நிறமாக ஒளிர்கையில் ஜெ சொன்ன அடர் நீலத்தை பார்க்க முடிந்தது

மீன்பிடிப்பவர்களின் தோணிகள் மெல்ல அலைகளில் எழுந்தமர்ந்து நிற்க அவ்வப்போது அவற்றிலிருந்து தவளை நாக்குநீட்டுவதுபோல வலைகள் எழுந்து நீரில் பரவி விழுந்தன.” 

அலைகள் மோதிக்கொண்டிருந்த அஷிக்னியின் கரையை உறுதியாக கல்லடுக்கிக் கட்டியிருந்தனர். கல்லடுக்குகளின் பொந்துகளுக்குள் புகுந்த நீர் எண்ணிஎண்ணிச் சிரிப்பதுபோல ஒலியெழுப்பியது.” நீரின் ஒலி பல விதமாக சொல்லப்பட்டதில் இது ஒன்று

ஆனால் அதற்கு மாறாக மக்கள் சிவப்பு நீலம் பச்சை மஞ்சள் நிறங்களில் உடையணிந்து பெரிய பூக்கள் போல நடமாடினர். ஆண்கள் வண்ண உடைகள் அணிவதை சிகண்டி அங்குதான் முதல்முறையாக பார்த்தான்.” கண்களால் கண்ட காட்சியை மட்டுமே இவ்வளவு துல்லியமாக சொல்ல முடியும்.

தலைக்குமேல் பேருருவமாக எழுந்து நின்றன சுதையாலான ஏழு வெண்குதிரைகள். பெருங்கடல் அலை ஒன்று அறைவதற்கு முந்தைய கணத்தில் உறைந்ததுபோல, மலைச்சரிவில் இறங்கிய நதி நிலைத்தது போல

குன்றின் மேல் ஏறிச்சென்ற பெரிய படிக்கட்டுகளால் மேலிருந்த கட்டடத்தின் காலடியில் கொண்டுசென்று சேர்க்கப்பட்ட மனிதர்கள் கைவிரல்கள் அளவேயுள்ள சிறிய பாவைகளாக அசைந்தனர்.

ஆடிப்பிம்பத்திற்குள் என்னை கட்டிப்போட்டவனை நான் அறிவேன். அவன் பெயர் பீமசேனன்...நான் அவனுடைய ஆடிப்பிம்பம். அவனும் என்னைப்போன்றே பெரிய தோள்களில் சகோதரனை தூக்கிக்கொண்டு செல்வதைக் கண்டேன். அவன் செய்ய இயலாததை இங்கே நான் செய்யமுடியாது. மூடன், முழுமூடன்..." எண்ணியிருக்காமல் எழுந்த பெரும்சினத்துடன் "அவன் என்னை ஆடியில் தள்ளிவிட்டிருக்கிறான்... என்னை அவனுடைய வெற்றுப் பிம்பமாக ஆக்கிவிட்டான்...." என்று கூவியபடி ஓங்கி பாறைச் சுவரை அறைந்தார்.” இதுதான் மாமலரில் மரமாக முழுமையாக நிறத்துள்ளதை பார்க்கும் போது மனித சாத்தியமற்ற திட்டமிடல் தெரிகிறது.

வீரரே, முடிவின்மையை உணராத எவரும் இப்பூமியில் இல்லை. மண்ணிலும் விண்ணிலும் மனிதனின் அறிதல் வழியாக ஒவ்வொரு கணமும் முடிவின்மையே ஓடிச்செல்கிறது. முடிவின்மையை தேவைக்கேற்பவும் வசதிக்கேற்பவும் வெட்டி எடுத்த காலத்திலும் மண்ணிலும்தான் மானுடர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முடிவின்மையின் எளிமையை உணர்ந்தவனே விடுதலை பெறுகிறான். அந்த அறிவைத் தாளமுடியாதவன் பேதலிக்கிறான்..." தண்டகர் சொன்னார்.”

அடையாளம் இருப்பை உணர்த்துவது , இருப்பு  இருக்கும் காலத்தாலும் வாழும் நிலமாகிய மண்ணாலும் அடைப்பு இடுபவை. முடிவின்மை பிரமாண்டமானது என்பதை பொய்யாக்கி எளிமையை தருவது வாழ்வியலின் சமநிலை பேனுவது.

மகனே, நீ உன் இளமையைக்கொண்டு உன் காமத்தை நிறைவுகொள்ளச்செய்' என்று யயாதி சொன்னபோது புரு கைகூப்பி "தந்தையே, அந்த முதுமைக்குள் இருந்தபடி நான் காமத்தின் முழுமையை அறிந்துகொண்டேன்.”

இளமையைக்கொண்டு வெற்றியையும் புகழையும் அகவிடுதலையையும் மட்டுமே இனி நாடுவேன்" என்று சொன்னான். அக்கணமே தன் முதுமைக்குள் இருந்த யயாதி காமத்தின் நிறைவின்மையை மீண்டும் அறியத் தொடங்கினார்.”

இந்த இரண்டிலும் உள்ள முரண் இயற்கையின் நியதியை சொல்ல வல்லது . தேடலுக்கு உடல் ஒரு சாதனம் . உடலே தேடலுக்கு இடம் கொடுக்கும் சாதனம் . அதை தேடுபவர்களை பொருத்து , அது தேடுபவரின் ஊழில் எழுவது . யயாதிக்கு தேடல் வெளியில் இருந்ததும் புருவிற்கு அது அகத்தேடலாக இருந்தது . அதை யயாதியின் உடலிலிருந்தே அடைந்து விடுகிறான் , எனில் உடல் தனித்துவமானது அல்ல , என நிறுவுகிறார் , அற்புதமான பகுதி இது , இந்த இடத்தை திறந்து உள்செல்ல செல்ல வேதங்களில் சொல்லப்பட்டதும் தருசனங்களில் சொல்லப்பட்டவையை . சென்று தொடுகிறது , படைப்பு மீள மீள நிகழ்வதும் முன்பிருந்ததே மீளவும் தோன்றுகிறது எனில் அதே ஆத்ம மீள் மீள பிறக்கிறான் என்பது அர்த்தவத்தாமாக்கி போகிறது அதை இவ்விதம் கையாள முடியும் பரவசமான அனுபவமாக இருக்கிறதுஉள்ளூர நிறைவின்மையை அறிபவர்கள் பொய்யாக அகந்தையை காட்டுவார்கள்" என்றார்.”

நீர்வளம் மிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த எவருக்கும் பாலையைப் பார்க்கையில் வரும் எண்ணங்கள்தான் முதல்முறையாக அந்த வெற்றுநிலவிரிவைப் பார்க்கையில் அவருக்கும் எழுந்தன. கல்லில் செதுக்கப்பட்ட பறைவாத்தியத்தை பார்ப்பதுபோல. ஓவியத்தில் வரையப்பட்ட உணவைப்போல. பயனற்றது, உரையாட மறுப்பது, அணுகமுடியாதது. பிறிதொரு குலம் வணங்கும் கனியாத தெய்வம்.” சிறு தெய்வ வழிபாட்டையும் அதில் உள்ள நெறிமுறைகளை இதைவிட துல்லியமாக சொல்லமுடியுமா?

கையில் அந்த மண்ணை அள்ளி மெதுவாக உதிர்த்தபின் கைவெள்ளையைப் பார்த்தபோது சிறிய விதைகள் ஒட்டியிருப்பதைக் கண்டார். குனிந்து அந்த மண்ணை அள்ளி அது முழுக்க விதைகள் நிறைந்திருப்பதை அறிந்து வியந்தார். நிமிர்ந்து கண் தொடும் தொலைவுவரை பரந்திருந்த மண்ணைப்பார்த்தபோது அது ஒரு பெரும் விதைக்களஞ்சியம் என்ற எண்ணம் வந்தது. என்றேனும் வடவை நெருப்பு சினந்து மண்ணிலுள்ள அனைத்துத் தாவரங்களும் அழிந்துபோய்விட்டால் பிரஜாபதியான பிருது வருணனின் அருளுடன் அந்தப் பாலைமண்ணில் இருந்தே புவியை மீட்டுவிடமுடியும். இது எனக்கு ஜெ யின் பனிமனிதனை நினைவுபடுத்திவிட்டது. அங்கு விதைகள் பனியில் வைத்ததைப்கோல இங்கு பாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது வேறு புவியாக இருக்கும். முற்றிலும் வேறு மரங்கள் வேறு செடிகள் வேறு உயிர்கள் வேறு விதிகள் கொண்ட புவி. பாலைநிலம் என்பது ஒரு மாபெரும் நிகழ்தகவு. இன்னும் நிகழாத கனவு. யுகங்களின் அமைதியுடன் காத்திருக்கும் ஒரு புதிய வாழ்வு. எழுந்து நின்று அந்தமண்ணைப் பார்த்தபோது திகைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. உறங்கும் காடுகள். நுண்வடிவத் தாவரப்பெருவெளி. மண்மகளின் சுஷுப்தி. அந்தப் பொன்னிறமண் மீது கால்களை வைத்தபோது உள்ளங்கால் பதறியது.”

அவரை அணுகிய பாலைவன உடும்பு தன் சிறு கண்களை நீர்நிரம்பும் பளிங்குமணிக் குடுவைகள் போல இமைத்து கூர்ந்து நோக்கியபின் அவசரமில்லாமல் கடந்து சென்றது

கண்பழகியதும் தொலைவு என ஏதுமில்லாமல் செங்குத்தாக சூழ்ந்திருக்கும் சாம்பல்நிறப் பரப்பாக பாலைநிலம் உருமாறும்.

உங்கள் இருதோள்களும் ஒழிவதே இல்லை வீரரே. விழியற்றவனையும் நிறமற்றவனையும் தூக்கிக்கொள்ளலாம்...' அவரே அதில் மகிழ்ந்து 'ஆகா என்ன ஒரு அரிய நகைச்சுவை. விழியற்றவனுக்கு கண்களில் நிறங்கள் இல்லை. விழியிருப்பவனுக்கு உடலில் நிறங்கள் இல்லை... ஆகாகாகா!' இருகைகளையும் ஒன்றுடன் ஒன்று ஓங்கி அறைந்தபடி பீஷ்மர் எழுந்துவிட்டார்.”

இருளில் பாலைநிலம் மெல்ல மறைந்து ஒலிகளாகவும் வாசனையாகவும் மாறிவிட்டிருந்தது. அது பின்வாங்கிப்பின்வாங்கி சுற்றிலும் வளைந்து சூழ்ந்திருந்த தொடுவானில் மறைகிறது என்று அவர் முதலில் நினைத்தார். அந்தியில் தொடுவானம் ஒரு செந்நிறமான கோடாக நெடுநேரம் அலையடித்துக்கொண்டிருக்கும். பின்பு பாலை இருளுக்கும் இருளுக்குமான வேறுபாடாக ஆகும். மெல்ல கண்பழகியதும் தொலைவு என ஏதுமில்லாமல் செங்குத்தாக சூழ்ந்திருக்கும் சாம்பல்நிறப் பரப்பாக பாலைநிலம் உருமாறும்.”

வீரரே, ஒரு பெரும்பத்தினி கங்கையில் ஒரு பிடி நீரை அள்ளி வீசி கங்கைமேல் தீச்சொல்லிட்டால் என்ன ஆகும்? கங்கைநீர் கங்கையை அழிக்குமா?” 

விஷவில் ஏந்திய மலைக்கள்வனாக இருக்கலாம். உங்கள் முதல் எதிரியாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முள்ளைமட்டும்தான் எடுத்துக்கொண்டீர்கள். அப்படியென்றால் நீங்கள் வல்கிதாஸ்திர வித்தை கற்றவர். ஒரு சிறுமுள்ளையே அம்பாகப் பயன்படுத்தக்கூடியவர். ஒரு முள்தைத்தாலே மனிதனைச் செயலிழக்கச்செய்யும் ஆயிரத்தெட்டு சக்திபிந்துக்களைப்பற்றி அறிந்தவர்.”

காசிநாட்டரசி அம்பையின் மைந்தனும் பாஞ்சால இளவரசனும் வழுவா நெறிகொண்டவனுமாகிய சிகண்டி எனும் உனக்கு நானறிந்தவற்றிலேயே நுண்ணிய போர்வித்தைகள் அனைத்தையும் இன்று கற்பிக்கிறேன். அவை மந்திரவடிவில் உள்ளன. உன் கற்பனையாலும் பயிற்சியாலும் அவற்றை கைவித்தையாக ஆக்கிக்கொள்ளமுடியும்" என்றார். சிகண்டி தலைவணங்கினான்.”

இங்கு எழுதழலில் அர்ஜுனன் சொன்னது நினைவிற்கு வந்தது.“ஆம், வேறுபாடென ஒன்றுமில்லை என்பதும் உண்மைஎன்றான். தனக்குத் தானே என கையசைத்து எதையோ அகற்றுபவன்போல காட்டிமெய்யாகவே வேறுபாடெதுவும் இல்லை. முற்றழிவை உருவாக்கும் அரக்கர்களும் புத்துலகு படைக்க எண்ணும் ஞானியரும் நிகழ்த்துவது ஒன்றே, பேரழிவு. வேர்வரை கெல்லி எடுத்து மண்புரட்டும் மேழியைவிட அழிக்கும் படைக்கலம் எது? முளைப்பதென்ன என்பதுதான் வேறுபாடுஎன்றான்.


-கிருபாநிதி அரிகிருஷ்ணன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்