https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 270 * வாசிப்பின் காலவெளிப் பயணம் *

ஶ்ரீ:பதிவு : 270 / 357 / தேதி :- 17 டிசம்பர் 2017* வாசிப்பின் காலவெளிப் பயணம்  *

ஆளுமையின் நிழல்   ” - 16
கருதுகோளின் கோட்டோவியம் -03

குடிமை சமூகத்தை சென்று தொடும் அனைத்து  நிகழ்வுகளும் நடந்து , பின் சரித்திரங்கள் என்றாகிறது. ஒரு மாநில அரசியலை நிர்வகிக்கும் அமைப்பால் நிகழும் போது அது குடிமை சமூகத்தில் ஒரு தொடர் தாக்கத்தை கால வெளியில் நிகழ்த்துகிறது. முக்கிய நிகழ்வுகளின் போது நாம் அருகிலிருப்பது ஒரு ஊழ் . நான் அருகிலிருந்த போது நிகழ்ந்து ,பின் பேசப்பட்டவைகள் அனேகம். அது நிகழ்கிறபோது , அதன் முழு தாக்கத்தை என்னையும் அறியாது என் ஆழ்மனம் அதைப் பெற்றுக்கொண்டிருக்க வேண்டும்

ஒரு எளிய நிகழ்வென அது அன்றும் கடந்து சென்றது. என் சிந்தனை அதன் விளைவுகள் ஒட்டி அது சில காலம் நீடிப்பதை பற்றியோ அல்லது வேறு ஒரு நிகழ்வின் தொடக்கமாகவும்  இருக்கலாம் என்கிற சிறிய புரிதலை தாண்டி அதை பார்க்கும்  வயதோ அனுபவமோ ஞானமோ அன்று இல்லாத நிலையில் இருந்து , இன்றைய இலக்கிய வசிப்பினூடாக கிடைக்கும் புரிதல்களில் என் ஆழ்மனதை  அவற்றில் பொருந்தி ,மீளவும் நிகழ்த்தி அதன் நுட்பங்களின் தொகைகளை அணுக்கமாக பார்க்க முயல்கிறேன். அது சொல்லும் செய்திகள் காலத்தினால் மேலும் மேலும் என விரிவடைந்தபடி இருப்பதை மட்டுமே இன்றும் உணரமுடிகிறது.ஜெயமோகனின் சொல்லாட்சிகள் எனக்கு மிக அற்புதமான திறப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன . என்னை எழுதவைக்கும் உந்து சக்தியை , நான் அவரது எழுத்துகளில் இருந்தே  பெறுகிறேன்

வல்சராஜ் என்னை இந்த பதவிக்கு கொண்டுவராது இருந்தால், நான் எனக்கான திட்டம் என ஒன்றில்லாத இடத்தில்கூட எனக்கான வேறு வாய்ப்புகளுக்கு காத்து இருந்திருக்கலாம் . முரணியக்கத்தின் ஒரு சிறு இழையாக மட்டுமே நான் செயல்பட முடியும் என்பதை, நான் இன்று புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். என் பகுதியை நானில்லாமல் பிறதொருவரும் செய்திருக்க முடியும். ஆனால் என் வழிமுறைகள் அதில் என் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்துவதாக இருந்திருந்தால் .அதில் நானும் பேசப்படும் அங்கமாகிறேன்.

செயல்பட நினைப்பவனுக்கு களங்கள் என்றும் வறண்டுவிடுவதில்லை , ஏறக்குறைய நடந்தது அதேதான். ஆனால் , எனது கனவுகள் வேறுவிதமானதாக  இருந்தது . நான் இளைஞர் காங்கிரஸில் ஏதாவது செய்யவேண்டுமென்றால் . மாநில நிர்வாக கமிட்டி எனக்கு சாதகமாக இருக்க வேண்டும் . அந்த செயற்குழு கூடுகைக்கு பிறகு முற்றிலும் செயலிழந்த நிலையில் இருப்பதால், இனி அதிலிருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்க முடியாது . எனது எதிர்கால கனவு திட்டத்தில் இந்த பிரதேச காங்கிரஸ் தேர்தலில் எனது பலத்தையும்  செயல்பாட்டையும் நான் வென்றெடுக்க வேண்டும் . இது நான், முற்றிலும் எதிர்நோக்காத தருணத்தில் வாராது வந்த வாய்ப்பு . அச்சத்தினாலோ , புரியாமையினாலோ இதை இழப்பதை போன்ற இழவு பிறிதொன்றில்லை . இங்கு நான் இருப்பதை யாரும் உணரப்போவதில்லை, ஏனெனில் இது நான் விளையாடும் களமல்ல . எனவே யாருடைய கவனமும் என்மீது குவியும் வாய்ப்பும் இல்லை  . 

சரித்திரம் கொஞ்சம் பேஜாரான விஷயம். ஒரு பக்கத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது உருவாகும் உணர்ச்சிகளும் நெகிழ்ச்சிகளும் நம்மை மறுபக்கம் பார்க்கவே விடாமல் அடித்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் உண்மையான சரித்திரம் என்பது இரண்டு பக்கம் மட்டுமல்ல; கண்ணுக்குத் தெரியாமல் மூன்றாவது பக்கமென ஒளிந்திருக்கும் இரகசியங்களையும் உள்ளடக்கியது. நமக்கு உடன்பாடு இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல.

எனது பாணி அரசியலில் நான் எப்போதும் எல்லோருடனும் முரண்பட்டே இருந்திருக்கிறேன் . அவை எனது ஆணவத்திலிருந்து கிளத்தவையல்ல . அனுபவத்திலிருந்து அடைந்தவை . நமக்கான பாதையில் பிறிதொருவருடைய உதவியை எக்காலத்தும் எதிர்பார்க்க முடியாது . அவற்றுக்கான இலக்கை நான்  எங்கிருந்து அடைகிறேன் என்று, எனக்கு அணுக்கமானவர்களுக்கு  புரியவைக்க  பலமுறை முயன்று முடியமலானது . அரசியல் செயல்பாடுகளுக்கான அதிகாரத்தைமுத்திரைமோதிரம்போல தலைமையிடம் இருந்து பெறுவது என்றும் ,அது இருந்தால் அனைத்து கதவுகளும் விளைவுகளுக்கு நமக்கேற்ப்ப  திறந்து கொடுக்கும்பின் அரசியலென்பயது ஒன்றுமில்லை , என்கிற அவர்களின் தவறான நிலையே இவை அனைத்திற்கும் தொடக்கம் என நினைக்கிறேன்.

அரசியலுக்கு வருபவர்கள் அதைப்போல ஒன்றை எதிர்பார்த்தே வருகிறார்கள் . ஆனால் அவர்கள் அறிவதில்லை , தலைவர்களும் அதை தேடியே தங்கள் பாதைகளில் பயணிக்கிறார்கள் என்று . செல்வாக்கு என்பது குடிமை சமூகத்திடமே புதைந்து கிடக்கிறது என்பதை போல ஒன்றை நான் புரிந்து கொண்டிருந்தேன் . ஆனால் அதன் பிற பரிமாணங்கள் திறந்து கொண்டது சாட்சி மொழி கட்டுரைக்கு தொகுப்பிற்கு பிறகுதான் என நினைக்கிறேன்அதற்கு முன்னதாக ஜெயமோகனின்இன்றைய காந்தி” , “வெள்ளை யானைவசிக்கும் அந்த கணம் வரை என் வாசிப்புகளிலிருந்து எனது புரிதல்களை குறிப்புகளாக்கி கொள்ளா வேண்டும் என்று மட்டுமே நினைத்திருந்தேன் .  

வெண்முரசின்பீஷ்மர் மற்றும்வண்ணக்கடலில்தென்னகத்து பாணன் ஒருவனின் பாரத வர்ஷத்தின் பயணம் அதன் நிலக்காட்சி , மொழி கலாச்சாரம் போன்றவற்றை கண்முன் கொண்டு நிறுத்திய பிறகு தான் , நான்இன்றைய காந்திவாசிக்க துவங்கியிருந்தேன் அது எனது அரசியல் அனுபவத்திலிருந்து நான் கற்றவற்றை திறந்து கொடுத்து, அவைற்றை இன்னும் நுட்பமாக பார்க்கும் பார்வையை கொடுத்தது . அப்போது குறிப்புகளுக்காகஇன்றை காந்திபுத்தகத்தில் அடிக்கோடிட்டு பகுதி மிகுந்து போனதை பற்றிக்கூட ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன் . அது எப்படி என்னுள் ஊடுருவி நடந்தவற்றை என் மனக்கண் முன் , என எனக்கு விரியவைத்ததையும் , அவற்றை என்  வாசிப்பு அனுபவத்தையும் , புரிதல்களை கடந்து எங்கிருந்து பெற்றேன் என இன்றும் வியக்கிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...