https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 27 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 280 * சிந்தனையின் விடுதலை *

ஶ்ரீ:பதிவு : 280 / 367 / தேதி :- 27 டிசம்பர் 2017


* சிந்தனையின் விடுதலை *
ஆளுமையின் நிழல்   ” - 26
கருதுகோளின் கோட்டோவியம் -03காங்கிரஸ் போன்ற ஒரு வெகுஜன அமைப்பின்  தலைமை குறுங்குழு மனோபாவத்தில் இயங்கக்கூடியதல்ல . பலர் ஒன்றுகூடி முன்னெடுக்கும் வாய்பபை அவர்களுக்கு தர வேண்டும் என்கிற நிலைப்பாட்டில், யாருக்கும் எந்த மன விகாரத்திற்கும் இடமளிக்காதபடி , அனைத்தையும் தானே முன்னின்று செய்து கொள்வதால் , தனக்கு அடுத்தவர் இவர் என அவர் யாரையும் அடையாளப்படுத்துவதில்லை . அவரவர் தனது  செயல்பாட்டினால் அவருக்கு நெருக்கமான அல்லது அடுத்த ஸ்தானத்தை அடையும்போது , அதை மௌனமாக அங்கீகரித்து விடுவார் .

கல்கத்தா அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் முதல்நாள்  வழமைபோல மிகவும் ஆயாசமாக போய்க்கொண்டிருந்தது . ஆனால் இரண்டாம் நாள் மாநாடு  காலை நிகழ்வு ஆரம்பிக்கும்  முன்னமே மேடை பகுதியில் ஒரு இறுக்கம்  வந்து சூழ்ந்திருப்பதையும் , முக்கிய தலைவர்கள் நிலையழிந்து மேடைக்கும் வாசலுக்குமாக நடந்துகொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது . மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த அகில இந்திய தலைவர்கள், யாரையோ எதிர் நோக்குவதாக பட்டது . மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அனைத்திற்கும்சில நிமிடங்களில் அதற்கான காரணம் தெரிந்தது . கட்சியில் புதிய உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டசோனியா காந்திஅன்று காலை நிகழ்வில் பங்கெடுக்க இருப்பதாக தகவல் பரவியதும் ,அனைவரும் உற்சாகமானார்கள் .எதிர்நோக்கியது போல காலை 11:00 மணிக்கு சட்டென சோனியா காந்தி மேடையில் தோன்றினார்  . உற்சாக கட்டுக்கடங்காத மனிடக்குரலாக எங்கும் கிளப்பி ஒரு கார்வைபோல ஒலித்துக்கொண்டிருந்தது .

சோனியா காந்தியின் வருகைபலகாலமாக பேசப்பட்டு கொண்டிருந்த ஒன்றுதான் . அது இன்று நிஜம் என்றானது . இந்திய அளவில் இது பெரும் அரசியல் மாற்றத்திற்கு  அறைகூவுவது . மாநாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தவுடன் , மேடையிலிருந்த முக்கிய தலைவர்கள் சோனியா காந்தியை சூழ்ந்து கொண்டு அவரை பேசச்சொன்னார்கள் . முதலில் மறுத்தவர் சிறிது நேர தயக்கத்திற்கு , மறுத்தலுக்கும் பிறகு தனது முதல் பேச்சை நிகழ்த்தினார் . அது முன்னமே எழுதி கொண்டுவரப்பட்ட உரை . காங்கிரஸ் இயக்கத்தில் நேரு குடும்பத்திலிருந்து  மற்றுமொருவர்

மாநாடு முடிந்து ஊர்த்திரும்ப கல்கத்தா விமான நிலையத்தில் தலைவருடன் அமர்ந்திருந்தோம் .அவர் மிக உற்சாகமாக இருந்தார் . ராஜிவ் காந்தியின் மறைவிற்கு பிறகு கட்சிக்குள் இருந்த தேக்க நிலை ஒரு முடிவிற்கு வந்திருந்தது . மத்தியில் இருந்த வாஜிபாயின் பாஜக  கூட்டணி அரசாங்கம் நித்தம் ஒரு சிக்கலை எதிர் கொண்ட அரசாங்கமாக அப்போது இருந்தது . மிக மெல்லிய பெரும்பான்மை அரசாங்கம் என்பதால் , மம்தா பானர்ஜி மற்றும் ஜெயலலிதா தலைமையிலான மாநில காட்சிகள் அரசாங்கத்திற்கு கடும் சவாலை ஏற்படுத்திக்கொண்டிருந்தனபத்திரிக்கைகள்இரு முதிர் கன்னிகளுக்கு இடையில் ஒரு நைஷ்டிக பிரம்மச்சரி என கிண்டலடித்துக்கொண்டிருந்தன

சோனியா காந்தியின் அரசியல் நுழைவு என்றோ நிகழந்துவிட்ட ஒன்று . அது  வெளிப்படையாக இப்போது பரிணமித்துள்ளது அவ்வளவே  . அடுத்த நிகழவேண்டியது காங்கிரஸ் கட்சிக்குள் தலைமை  மற்றம் . காங்கிரஸின்  அகில இந்திய தலைமை மாற்றத்தை நோக்கிய நகர்வு இருப்பதை அனைவராலும்  உணர முடிந்தது . வாஜிபாய் அரசாங்கம் ஜெயலலிதா சோனியா காந்தி டீ பார்ட்டியில் கவிழ்ந்து இடைப்பட்ட அரசாங்கம்  சீத்தாராம் கேசரி தனது பல்வலி காரணத்தை சொல்லி ஒரு முடிவிற்கு வந்ததும், நாட்டின் தலையில் மற்றுமொரு பாராளுமன்ற தேர்தல் திணிக்கப்பட்டு மறு  தேர்தல் வந்ததுவாஜ்பாய் அரசாங்கம் பதிமூன்று நாள் , பதிமூன்று மாதம் என இரண்டு அரசாங்கம் அமைந்து இந்தமுறை ஆட்சிக்கு வந்தால் பதிமூன்று வருடம் ஆளப்போகிறோம் என தேர்தலை சந்திக்கும் வாய்ப்பாக பேசப்பட்டது

புதுவை மாநிலம் பாராளுமன்ற தேர்தல் சந்திக்கும் வாய்ப்பு இந்த முறை சிக்கலாகி போனது . தில்லியில் சோனியா காந்தி ஜெயலலிதா பேச்சுவார்த்தை சில அரசியல் முரண்பாட்டினாலோ அல்லது ஆளுமை பிழை புரிதலினாலோ முறிந்தது  , அது புதுவை  பாராளுமன்ற தேர்தலை கூட்டணியற்று  , தனித்து சந்திக்கம் சூழலில் கட்சியை கொண்டு விட்டது  . வழமையாக மரைக்கார் போட்டியிடுவார் என்கிற எதிர்பார்ப்பும்  , இல்லை என்றாகி அவர் தனது உடல்நிலையை காரணம் சொல்லி நிற்க மறுத்துவிட்டார் . பாராளுமன்ற தேர்தல் கூட்டணி இல்லாமல் சந்திப்பது வெற்றிக்கு உகந்தது இல்லை என அவர் விலகிக்கொண்டார் மற்றபடி உடல்நிலை குறித்து அவர்சொன்னது ஒரு காரணம் மட்டுமே என எங்கும் பேசப்பட்ட சூழலில், உற்சாகமா இருந்தது நான் மட்டுமே என நினைக்கிறேன்

தேர்தல்  எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக  நினைத்தேன் . மூன்று  காரணங்களினால் இது சிறப்பான  வாய்ப்பு   ஒன்று ; புதிதாக  உட்கட்சி தேர்தலை சந்தித்து கட்சி ஜனநாயக பாதைக்கு திரும்பி இருந்தது , அதுவரை மேல் மட்ட அரசியல் தொடர்பினால் மட்டுமே தொகுதிகளை கைக்குள் வைத்திருந்தவர்களிடமிருந்து அது கைமாற்றி விடப்பட்டது . இரண்டு ; அதை முயற்சிக்கும் போதுதான் பல இளம் தலைவர்களை நான் அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் செயல் படுவதற்கு ஏற்ற களமாக அவற்றை மாற்றி அமைத்திருந்தேன் . இந்த சூழலில் பாராளுமன்ற தேத்தலில் தலைவர் நிற்கும் படி நேர்ந்தால் அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்கிற வாய்ப்பும், அதையொட்டி கண்டடையப்பட்ட புதிய தலைவர்களை களம் இறக்க சிறந்த சந்தர்ப்பமாக இது இருக்கும் 

அனைவரையும் தொடர்புறுத்தும் இணைப்பை செய்ய இதைவிட சிறப்பான  சந்தர்ப்பம் பிறிதொரு முறை வாய்க்காது . மூன்றாவதாக ; இளைஞர்காங்கிரஸில் நிலவும் தேக்க நிலையும் அதிகார போட்டியும் ஒரு முடிவரக்கூடிய வாய்ப்பை இது எனக்கு கொடுக்கலாம் என கணக்கிட்டேன் . நீண்ட நெடுங்காலமாக சிந்தனையாக திட்டமாக மட்டுமே இருந்தது இப்போது விடுதலை பெற்று செயல்பாட்டிற்கு வந்தது , மிகுந்த விடுதலையளிப்பதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...