ஶ்ரீ:
பதிவு : 279 / 366 / தேதி :- 26 டிசம்பர் 2017
* புதிய வார்ப்பு *
“ ஆளுமையின் நிழல் ” - 25
கருதுகோளின் கோட்டோவியம் -03
ஒற்றைமனப்பரப்பென இருக்கும் அனைத்திலிருந்தும் விழைவினால் தன்னை வேறென பகுத்திருக்கும் ஒவ்வொருவரின் ஆழ்மனமும் தன்னைத் தவிர பிறிதொருவரை எக்காலத்தும் ஏற்றுக்கொள்வதில்லை .அனைத்திலிருந்தும் பிறித்தே அது எப்போதும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டே இருக்கிறது . எந்த கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிக்கொண்டாலும் , எத்தனை முக்கியத்துவம் கிடைத்தாலும், அது யாரை சார்ந்து அவர்களுக்கு கிடைக்கிறதோ ,அவருடன் நெருக்கமான உறவும்,நட்பும் இருந்தாலும் , ஆழ்மனத்தினுள்ளே ஒன்று அவரை வெறுத்து ஒதுக்குவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது . அவர்கள் திரளின் ஒரு துளி என்றாலும் ஒற்றை மனம் என்றே எங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தாலும் தன்னை தான் என அது உணராத கணம் ஒன்றில்லை .
இருக்கும் திரளிலிருந்தோ அமைப்பிலிருந்தோ அவர்கள் பிளவுபட மிக எளிய காரணங்களே போதுமானது . அது தனிப்பட்ட ஒருவருடைய எண்ணமாக இருந்தாலும் கருத்து வெளியில் கண்ணுக்கு தெரியாத ஒரு சரடினால் அனைவரும் கோர்க்கப்பட்டே இருக்கிறார்கள் .பேசிக்கொள்ளாத போதும் எண்ணங்களினால் அவர்கள் ஒற்றை திரள் என்றே இருக்கிறார்கள் .
மாறிவருகிற அரசியல் சூழலில் , புதிதாக இணைந்த பலருக்கும் , பொறுப்பிற்கு வந்தவர்களுக்கும் , தலைவர் வீட்டில் நிகழ்ந்த அந்த உண்டாட்டு விழாவினை , அவர்களுக்கு அங்கீகாரமளிக்கும் சந்தர்ப்பமாக மாற்றிக்கொண்டேன் . நீண்ட நாட்களுக்கு பிறகு அதைப்போல ஒரு அமைப்பு தலைவரை சார்ந்து எழுந்துவந்திருக்கிறது என காட்ட நினைத்து , பல தொகுதி இளைஞர் அமைப்பிலிருந்து அனைவரையும் அழைத்திருந்தேன் .
அது எந்தவகையிலும் பிசிறில்லாத படி பார்துக்கொள்ளப்பட்டது . மாலை 6:00 துவங்கிய விழவு இரவு 11:00 மணிவரை நீடித்தது . தலைவரின் கட்சி அமைப்பென்பது ஒரு தொகுப்பு போல தோன்றினாலும் அது முற்றிலும் உதிரிகாலகவே இருந்துவந்தது . அதை தனக்கான தொடர்புறுத்தும் அமைப்பாக என்ன காரணத்தினாலோ அவர் தொகுக்கவில்லை அல்லது அவ்வாறு செய்ய விரும்பவில்லை , என ஏதாவதொரு காரணம். . நான் மருவுருவாக்கம் செய்ய நினைத்தது அதைத்தான் . அதிகாரமிக்க ஒருங்கிணைப்பாக அதை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் .
நான் தனித்து செயல்படும் களம் எங்குமில்லாது போனது . வல்சராஜ் தனது அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது அவசியமில்லை என் நினைத்ததினாலோ , அவர் அதைப்போன்ற ஒருங்கிணைப்பை இளைஞர் அமைப்பில் உருவாக்கவில்லை . நான் ஒரு தருணத்திறகாக காத்திருக்கிறேன். அது எப்படிப்பட்டது என தெரியாது அது வரும் என்கிற நம்பிக்கையை நான் இழக்கவில்லை.
மாநில காங்கிரஸ் அமைப்பில் புதிய மாறுதல்களை கொண்டுவந்த காலம் அது , தலைவரின் கைகளை விட்டு கட்சி மெல்ல கழன்று கொண்டிருக்கிறது என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை . கட்சியின் சிறந்த பேச்சாளர் என்றால் அது கருணாநிதிதான் . அவருக்கு இணையாக பேசக்கூடியவர்கள் இன்றும் கூட உருவாகிவரவில்லை . எங்கேயோ என்னமோ குழப்பம் அவர் தலைவரிடம் தனக்கு மாநில அமைப்பில் எந்த பொறுப்பும் தேவையில்லை என்றும் , அகில இந்திய அமைப்பில் உறுப்பினர் எனகிற ஸ்தானம் தான் தேவை என அடம்பிடிக்க துவங்கினார் . இதன் பின்னணியில் கிருஷ்ணமூர்த்தி இருப்பதாக எங்கும் பேசப்பட்டது .
தலைவிரின் அணியை பிளக்கும் முயற்சி அப்போதே துவங்கி இருக்க வேண்டும் . தில்லியில் வருடத்திற்கு ஒருமுறையோ , இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ கூட்டப்படுவதில் இவர் என்ன பேச நினைத்தார் என்பது அவருக்கே வெளிச்சம் . தில்லியை மையப்படுத்தி அரசியல் செய்வது மிகவும் செலவேறியது . அதன் தாக்கத்தால் முன்னாள் அமைச்சர் காந்திராஜ் , கருணாநிதியின் பொது செயலாளர் பதவிக்கு வந்தார் . தொகுதிகளுக்கு மாற்று தலைமை வந்ததனால் , அவர்களில் சிலர் மாநில கமிட்டியில் இடம்பெற்றனர் .
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் மற்றம் நிகழ்வதற்கான சமிக்ஞகள் தெரிய ஆரம்பித்தன . இதன் மத்தியில் கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வருடாந்திர மாநாடு நடக்கவிருப்பதாக செய்தி வந்ததும், வால்ராஜ் நானும் செல்வதாக முடிவு செய்தோம் . முக்கிய நிர்வாகிகளும் அதில் பங்கெடுப்பது , அவர்களை அரசியலில் உற்சாகப்படுத்த ஒரு காரணியாக இருக்கும் என்கிற அடிப்படையில் , முக்கிய நிர்வாகிகள் சிலர் கல்கத்தாவிற்கு கிளம்ப , ஒரு நாள் முன்னதாக நானும் வல்சராஜும் கல்கத்தா பயணமானோம் . இரண்டு நாள் நிகழ்வாக அது அங்கே ஒருங்கியிருந்தது .
வழமைபோல ஹிந்தியில் அனைவரும் பேசிக்கொண்டிருக்க மிகவும் ஆயாசமாக மாநாடு போய்க்கொண்டிடுந்தாது . பிரசவ வைராக்கியம்போல வெகு விரைவில் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது . இரண்டாம் நாள் காலை நிகழ்வு ஆரம்பிக்கும் முன்னமே ஒரு பரபரப்பு தொற்றி இருப்பதை உணரமுடிந்தது . மிகவும் பரபரப்பாக துவங்கியதும் சில நிமிடங்களில் அதற்கான காரணம் தெரிந்தது . “சோனியா காந்தி” அன்று காலை நிகழ்வில் பங்கெடுக்க இருப்பதாக தகவல் பரவியது . அனைவரும் உற்சாகமானார்கள் .எதிர்நோக்கியது போல காலை 11:00 மணிக்கு சட்டென சோனியா காந்தி மேடையில் தோண்றியதும் எங்கும் உற்சாக வெள்ளம் கட்டுக்கடங்காத மனிடக்குரல் எங்கும் கிளப்பி ஒரு கார்வைபோல ஒலித்துக்கொண்டிருந்தது . ஸ்வாரஸ்யமில்லாது சென்றுகொண்டிருந்த கூட்டம் ஒரே நிமிடத்தில் உணர்வு கொந்தளிப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது . அங்கு கூடியிருந்த தலைவர்களின் கண்களில் கூட அந்த மனவிலக்கத்தைதான் என்னால் உணரமுடிந்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக