https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 18 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 271 * எழுதலும் பணிதலும் *

ஶ்ரீ:



பதிவு : 271 / 358 / தேதி :- 18 டிசம்பர் 2017

* எழுதலும் பணிதலும் *


ஆளுமையின் நிழல்   ” - 17
கருதுகோளின் கோட்டோவியம் -03



ஆழ்மனப்படிமானம்  மற்றும் ஒற்றைமனப்பரப்பு என்கிற இரு கருதுகோள் போன்ற ஒன்றை முதலில் நான் ஜெயமோகனிடமிருந்துதான் பெற்றுக்கொண்டேன் . முதலில்  அவை வெவ்வேறானவைகள் என்றும், பின்னர் அவை ஒரே விஷயத்தின் இரு முனைகள் என்றும் , அவை  இரண்டும் காலவெளியில் நம்மை கொண்டு இணைப்பவைகளாக இருக்கலாம் என்றும் தோன்றியது . இலக்கிய வாசிப்பனுபவம் ஒரு பயணம் என்பது போல, நம்மை அங்கு கொண்டு சேர்கிறது , அதனாலேயே நமக்குள் நிகழும் திறப்புக்கள் சாத்தியமாகின்றன

ஒரு இலக்கியவாதி தனது ஆழ்மனதை ஒற்றைமனப்பரப்பில் இணைத்துக்கொள்வதனூடாக கால பரிமாண தத்துவத்தை கடக்க முடிகிறது போலும் . நல்ல வாசிப்பனுபவம் என்பது அது நம் ஆழ்மனப்படிமத்துடன் உரையாடுகிறபோது நிகழுகிறது . நுண்மாண் நுழைபுலம் போல ஏதோ ஒரு வாசல் திறந்துகொள்ளலாம் . அதில் உள்ளது நமக்குள் எழும் அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் . இதுவும் ஒரு தொழில்நுடட்பம்போலும் , அந்த சந்தர்ப்பங்களில் எழுத்தாளருக்கு திறந்த கதவுகள் நாம் நுழையவும் அனுமதிக்கிறது

நான் எனக்கெதிரென கிளம்பும் எதிர்ப்புகள மிக அயர்ச்சியுடன் நோக்கிய காலம்அவை எழுப்பும் கருத்தையும்   தன்மையையும் நான் இங்கிருந்து கொண்டு அவற்றை அனுமானிக்க முயல்கிறேன் . என் எதிர்தரப்பினர்கள் , எனக்கு வாய்க்கும் இடங்களும் பொறுப்புகளும் , பதவிகளும் சந்தர்ப்பவசத்தினால் மட்டுமே நிகழ்பவை , ஆகவே அனைத்தும் தற்செயல்கள் , அதில் அதிருஷ்டம் என்கிற ஒன்றைத்தவிர ,பிறிதொன்றில்லை என நினைத்துவிடுகிறார்கள்.

புடவியில் நிகழும் அனைத்தும், விண்ணக தெயவங்களின் ஆடலே என்றாலும் , நம் மனத்தின் எண்ணங்களினாலே அவற்றிற்கு  நாம் பொறுப்பேற்றுக்கொள்கிறோம் , இவை  நான் எனக்கான முயற்சிகளிலிழுந்து எழுந்தவைகளாக அவர்களால் பார்க்க இயலுவதில்லை . தகுதியற்ற ஒருவனுக்கு ஊழின் வசத்தால் அடைந்துவிடுகிற ஸ்தானம் பிறிதெவரின் உள்ளத்திலும் அவை காழ்ப்பெனவே எழுந்து விடுகின்றன . சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் என்னை பரிபவப்படுத்தும் வாய்ப்புகளை அவர்கள் நழுவ விடுவதே இல்லை . பல சமயங்களில் அணுக்கர்களும் இதே நிலைக்கு சென்றுவிடும்போதுதான் . நான் என்னை பற்றிய அவதானிப்பில் இறங்குகிறேன்

நான் எங்கோ பிறழ்கிறேன் ,அதனாலேயே அணுக்கர்களும் ஒருநாள் எதிர்நிலைக்கு போய்விடுகிறார்கள் போலும் . இந்த மனக்குறை எனக்கு மிக சிறுவயது முதலே இருந்துக்கொண்டிருப்பது . இதை கடந்து செல்ல பலமுறை முயன்று இருக்கிறேன் . நம்மை பற்றிய தவறான புரிதல்கள்தான் இதற்கான காரணம் என , சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவர்களுடன் நான் உரையாட தயங்குவதே கிடையாது . துரதிருஷ்டவசமாக அதில் வெற்றியடைந்ததில்லை . அப்படி அடைந்த சிலவும் நீண்டநாட்களுக்கு நிலைக்காது . விளக்கங்களை வார்த்தைகளால் சொல்லி புரியவைக்க முடியாது போய்விடும்போது , அவை பெரும் மனவழுத்தத்திற்கு என்னை ஆளாகிவிடுகின்றன

இப்போது சிந்திக்கையில் , “உறவின் அமைப்புகள்காலவெளிக்கு சம்பந்தப்பட்டவை போலும். பேசுகிறவர் தன் சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி அதை செய்தாலும், நமக்கு அணுக்கமானவர்களுக்கு இருக்கும் அபரிதமான புரிதல்கள் , சிலங்காலதிற்கு பிறகு காணாமலாகிவிடுகிறது , சொல்லுதலும் ,புரிதலும் காலாதீதமானது தான் போலும் . எல்லாமும், எல்லாகாலமும் எல்லாருக்குமாக புரிந்துவிடுவதில்லை.

தொகுதிகளின் இயல்பான சிக்கல் அந்தந்த வட்டாரத்தின் அரசியல் சமன்பாட்டை ஒட்டி எழுபவை . அதை உடைத்துக்கொண்டு எழுந்து நிகர்நிலையை அடைந்ததும், பிரதேச கமிட்டியிலுருந்து வரும் மேற்பார்வையாளர்களால் தலைமைக்கு எடுத்துச் சொல்லப்படும் . நான் நினைக்கும் எனது அணுக்கர்கள் தங்களின் தொகுதி கூடுகையில் ஏதையாவது குழப்பாமல் இருந்தால் , வெகு விரைவில் என்னை சூழ்ந்து , எனது செயல்பாடை முடக்கிவைக்க முயலும்  அனைவரையும் கடந்து நான் வெளிவந்துவிடுவேன் .  

திட்டம் நான் எதிர்பார்த்ததை விட நல்ல பலனைத் தந்ததுமொத்த மாநிலத்திலும்  ஒரே நேரத்தில் வட்டார தேர்தல்கள் நடப்பதால் , ஒரே மாதிரியான சிக்கல் எழுவதை அனைவரும் இயல்பானது என நினைத்தனர் . இதில் புதிய தலைவர்கள் எழுந்து வருவதை அனைத்து மேளிடப் பார்வையாளருக்கு உணர்த்தியிருந்தது , அதனால் வழமையான தொகுதி ஆளுமைகளுடன் மட்டும் கலந்தாலோசித்து பின் அவர்களின் வீடுகளில் நடக்கும் தொகுதி கூடுகைகளின் வழியாக எட்டப்பட்டவை முடிவுகளாக அறிவிப்பென வெளிவந்துவிடும் வழமை, இந்த முறை நடவாது என புரிந்து போனது  . 


தொகுதியில் நடந்த முதல் நகர்வே ஆலோசனை கூடுகைகளை பொது இடத்தில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போதே மேலிட பார்வையாளர்களுக்கு அதன் பயணதிசை தெரிந்தது இருக்கலாம் , அதனால் வழமைகள் முற்றிலுமாக மாறியது . மேல்மட்ட அரசியல் செல்வாக்கினால் தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அது இரண்டே வழிகளை திறந்து காண்பித்தது . ஒன்று ; அனைவரையும் அனுசரித்து, தன் பதவியையும் தனது அணுக்கர்களை நிர்வாகிகளாக அடைவது  . இரண்டு ; இயல்பில் எழும் புதிய தொகுதி ஆளுமைகளுடன் ஒரு உடன்பாட்டை கண்டடைந்து ,பதவிகளை பகிர்ந்து கொள்வது. நீண்ட உட்கட்சி அரசியல் ஒரு முடிவிறக்கான திசையை நோக்கிய பயணமாக நகர்ந்துகொண்டிருக்க , பதட்டமும் , சிலிர்ப்புமாக நான் அதை பார்த்தபடி இருந்தேன் . அங்கு நிழல் நிஜத்தின் முன் பணிவதும், நிஜம் நிழலிலிருந்து எழுவதுமாக , ஒரு சத்தமில்லாத மாற்றம். அது பல தொகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்