https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 277 * தனித்த கவனம் *

ஶ்ரீ:



பதிவு : 277 / 364 / தேதி :- 24 டிசம்பர் 2017

* தனித்த கவனம் *



ஆளுமையின் நிழல்   ” - 23
கருதுகோளின் கோட்டோவியம் -03





அரசியல்சரிநிலை என்பது எப்போதும் அமைப்புக்கு எதிராக நிலைகொள்வது என்பதே. அது நூற்றுக்குத் தொண்ணூறு தருணங்களில் நியாயத்தின்பால் நிற்பதாகவே அமைகிறது என்பது இயல்பானதுதான். எந்த ஓர் அதிகார அமைப்பும் தவிர்க்கமுடியாத அன்றாட அநீதிகளின் மீது இயங்குவதே. அடக்குமுறை என்ற அம்சம் இல்லாத அரசு என்பது மண்மீது சாத்தியமானது அல்ல. அத்துடன் இவர்கள் அமைப்பை மிக நெருங்கி நின்று அதன் உள்விளையாட்டுகளை காணும் வாய்ப்பையும் பெற்றவர்கள். ஆகவே ஒவ்வொன்றும் எத்தனை கேவலமான அதிகார ஆசை, சுயநலங்கள், சபலங்கள் மீது உருவாக்கப்படுகிறது என்று இவர்கள் நன்றாகவே அறிவார்கள்என்கிறார ஜெயமோகன் தனதுசாட்சி மொழிகட்டுரைத் தொகுப்பில் .

ஊர்பெரியவர்களுக்கு  முதலில் நான் முயற்சிக்கும் விஷயத்தால் ,என்ன நிகழ்ந்து விட கூடும் ? என்பதில் அவநம்பிக்கை கொள்ளவே வாய்ப்பு . அதனால்  கூட்டிய கூடுகைகளில் அவர்களை கௌரவப்படுத்த  அவற்றை அந்தந்த பெரியவர்கள்  வீடுகளிலிலேயே நடத்தினோம் . அதனால் நாங்கள்  அடைந்த நன்மைகள் இரண்டு . ஒன்று; அவர்களின் இல்லங்களில் அந்த கூடுகை நடைபெற்றதனால் அவர்கள் தாங்கள்  இழந்த கெளரவம்  மீட்டெடுக்கப்பட்டதாக ஒரு தோற்றம் எழுந்தது

அதனால் அவர்கள் மீளவும் களமிறங்க இருந்த மனத் தடை விலகியது . இரண்டு;கூடுகைக்கு பிறகு நடந்த எனது தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள்  . அதில்  இன்றைய நடப்புகளும் , அதனால் பின் எழும் மாற்றங்களை சொல்லி அவர்களை நம்பிக்கையோடு அணுக முடிந்தது . இதில் பணயம் வைக்கப்பட்டது எனக்கு அரசியல்  அடையாளம் . எங்காவது நிகழும் பிறழ்வும் ,அதிலிருந்து விளையும் விபரீதத்தையும  உணர்ந்தே இருந்தேன் . நான் அவர்களுக்கு கொடுத்த நம்பிக்கை வேலை செய்தது என சொல்வதை விட, இது ஊழின் ஆடல் . நான் வெறும் கருவி மட்டுமே என உணர்த்திருந்ததால் , தடையற்ற பேச்சும் அதன் முடிவும் எனக்கு சாதகமான களத்தை உருவாக்கி வைத்திருந்தது

தொகுதி தலைமை மற்றும் அதன் நிர்வாகிகளை நியமிக்கும் தேர்தல் கலந்தாலோசனை கூடுகைகளுக்கு . ஊர் பெரியவர்கள் நுழைந்தது , அங்கிருந்த பழைய நிர்வாகிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தாலும் , இவர்கள் எதிர்கொள்ளவது அவர்களுக்கு ஒரு விஷயமல்ல. ஒருகாலத்தில் அவர்களால் தோற்கடிக்கப்பட்டு காணாமலானவர்கள் . வாழ்நாள் முழுவதும் இவர்களிடம் தோற்பதற்கு பிறிதொரு தரப்பாக இருந்தவர்கள் . ஆகவே நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர்கள் வருவது பற்றிய ஆச்சர்யத்தை மட்டுமே அது கொடுத்திருந்தது

நான் எனது அணுக்கர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவாக்கி இருந்தேன் . ஊர் பெரியவர்களை இளைஞர் அமைப்பு ஆதரிப்பது , கட்டக்கடைசி நிலையில் வெளிவர வேண்டும். அதுவரை அதை வெளித்தெரியாது வைத்திருக்க சொன்னேன். அதிர்ஷ்டவசமாக நான் சொன்னதை சொன்னபடி நிகழ்த்தியிருந்தனர் .பழைய நிர்வாகிகள்  அச்சப்பட்டது முகவரி அற்ற இளைஞர்கள் பெருமளவில் அங்கு கூடியிருந்ததை பார்த்தபோதுதான் . கட்சி வளர்ந்துவிட்டது என்றும் , ஆளும் திமுக அரசாங்க அதிருப்தியாளர்களாக இருக்கலாம் என்கிற எண்ணத்தை அடைந்தார்கள்

நான் குறிப்பிட்ட எனது அணுக்கர்களில் வெகு சிலருக்கு மட்டுமே கூடுகையை எந்த திசை நோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என அறிவுறுத்தியிருந்தேன் . கூடவே சில நிபந்தனைகளும் ,எச்சரிக்கைகளும் . “ எக்காரணம் கொண்டும் கூச்சலிடுவதுபூசலுக்கு வழிவகுப்பது போன்றவை  நிகழ்வே கூடாது . அது அவர்கள் வழிமுறை . அதை நீங்கள் செய்தால் உங்களை சுலபமாக விலக்கி கை கழுவுவதில்  திறமைவாய்ந்தவர்கள்”. “அவர்களுக்கு பூசலை கையாளத்தெரியும் , அவர்களுக்கு தெரியாதது சமாதானம்தான் . அதுதான் அவர்களை வீழ்த்தும் ஆயுதம் , அதன் மொழி அவர்களுக்கு எப்போதும் புரிந்ததில்லை . அந்த மொழியில் பேசினால் மட்டுமே உங்களால் அவர்களை வெல்ல முடியும் என் சொல்லி வைத்திருந்தேன்

பழைய நிர்வாகிகள் பல களம் கண்டவர்கள்நீண்ட நாள் பதவிகளில் இருந்து தொகுதி குடிமை சமூகத்திற்கு பெரிதாக ஏதும் செய்யாதவர்கள் . அதனால்  அவர்களிடம் மதிப்பிழந்திருந்தார்கள் . ஆகவே புதிய உறுப்பினர் சேர்க்கை போன்றவற்றை அவர்களால் வெற்றிகரமாக பதிய முடியாமலானது . இப்போது அங்கு கூடியுள்ள இளைஞர்கள் புதியவர்கள் . வந்துவிட்டவர்களின் ஆதரவை பெறுவதற்காகவாவது நடுநிலையாளர்  போல வேஷம் கட்டியாக வேண்டும் . புதியவர்களை கையாளுவது அவர்கள் மட்டுமே அறிந்த கலை , ஒரு பொது அபிப்பிராயம் அடையவேண்டிய நிர்பந்தம் எழுந்துவந்து . என்னால் அனுப்பப் பட்டவர்கள்  அனைவரும் புதியவர்கள் என்பதால் பழைய ஆளுமைகளின் பலத்தை அவர்கள் அறிந்திருக்க வில்லை

ஊர் பெரியவர்களுக்கு  துணையாக இளைஞர் அமைப்பினரை நிறுத்தியிருந்ததால் , அது அவர்களின்  நம்பிக்கையை அதிகமாக்கியது . நிகழ்ந்த தொகுதி கூடுகையில் தாங்கள்  பலமாக இருப்பதை  உணர்ந்து கொண்டதும் , அது தங்கள் நிலைகளில் இன்னும் அழுத்தம் கொள்ள வைத்தது . அவர்கள் உற்சாகத்தில் இருந்ததால் , நான் செய்ய நினைத்தது எனக்கு சாத்யமானது . நான் அவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளின் மூலமாக அவர்களை முன்னிறுத்தியிருந்தேன் . ஏறக்குறைய எல்லா தொகுதிகளுக்குள்ளும் . வென்றவர் எங்களால்  முன்னிறுத்தப்பட்டவர் , அல்லது எங்கள் அமைப்பை சேந்தவருடனான உடன்பாட்டில் வந்தவர்கள்

சில தொகுதிகளில் நாங்கள் வெற்றியடைய முடியாது போனாலும் , இனி எங்களை ஒதுக்க முடியாது என்கிற நிலையை உருவாகி அது விட்டிருந்தது . நினைத்தைப்போல பெரும்பலம் வாய்ந்த களம் அமைந்துவிட்டது . தேர்தல் முடிந்ததும்தான் பிரதிநிதிகளும் வட்டார தலைவர்களும் தலைவரின் ஆசியை பெற வந்தபோது அவருக்கு ஆச்சர்யம் வென்றவர்கள் தலைவரால் விரும்பப்பட்டவர்கள் என்பது. எப்படி இது நிகழ்ந்திருக்க முடியும் என அவருக்கு புரியவில்லை. ஒவ்வொரு குழுவாக அவரை சந்தித்த அனைத்து தொகுதிகளின் பெரியவர்கள் . நடந்த அனைத்தையும் அவரிடம் சொன்னார்கள் .

ஒவ்வொருவராக தலைவரிடம் பேசிக்கலைவதை நான் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன் . வந்தவர்கள் கிளப்பி செல்ல இரவு 11:30 மணிக்கு மேலாகிவிட்டது . அவருக்கு இரவுணவு ரவி கொண்டு வைத்தபோது, பசியில்லை என்று சொல்லி தவிர்த்து , பழம் மட்டும் எடுத்துக்கொண்டார் . தலைவர் மௌனமாக தொலைக்காட்சியில் ஏதேதோ செய்தி பார்த்திருந்து விட்ட படுக்கை போடா சொல்லி ரவியிடம் சொன்னார் , நான்  செய்து முடித்த எதையும் அவருடன் பிறகு பேசக்கொள்ளும் வழமையில்லை

அன்றைய வேலை முடிந்த திருப்பதியில் எழுந்து கொண்டேன் . நான் கிளம்புவதை பார்த்ததும் ஒன்றும் சொல்லாது பக்கத்திலிருந்த நாற்காலியை காட்டி அமரச்சொன்னார் . நான் மௌனமாக சென்று அவர் அருகில் அமர்ந்துகொண்டேன் . “ நீ செய்திருக்கும் இவை அனைத்தின் பின் விளைவை  நீ அறிவாயா?” என்றார் . நான் ஏதும் பேசப்போவதில்லை என்கிற முடிவோடுதான் அங்கு வந்திருந்தேன் . ஊர் பெரியவர்கள் தலைவரை சந்திக்கும் போது நான் உடனிருக்க வேண்டும் என விழைந்தார்கள் , அவர்களின் பொருட்டே அங்கு வந்தேன் . நான் எந்த அறிவுரையும் கேட்கும் மனநிலையில் இல்லை .. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். வருவதை எதிர்கொள்ள வேண்டியதுதான் என சொல்லிவிட்டு அவர் மேற் கொண்டு பேசுவதை கடந்து வீடு நோக்கி கிளம்பினேன். தனித்த கவனத்தை கொண்டு நிகழ்த்தும் எதற்கும் ஒரு செயற்கை தன்மை வந்துவிடுவதால் , இயற்க்கை அதில் வினையாற்றும்போது எழுந்துவருவது எப்போதும் பிறிதொன்றகவே இருக்கும் . தலைவர் சொல்ல விரும்பியது அதுதான் போலும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக