https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 9 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 261 * சிதைந்த தர்மம் *

ஸ்ரீ :



பதிவு : 261 / 348 / தேதி :- 08 டிசம்பர் 2017



* சிதைந்த தர்மம்  *




“ ஆளுமையின் நிழல்   ” - 07
கருதுகோளின் கோட்டோவியம் -03








முறைமையான பத்திரிக்கை பேட்டி மிகவும் சலிப்பை தருபவை . கொதிக்கும் கேள்விகள்  கேட்கப்படும் .  அனைவரும் எதிர் நோக்கும் பதில் ஒருகாலாமும் தலைவரின் சொல்லில் எழுந்ததில்லை ஆனால் அவை  உள்ளுரை பொருளாக சொல்ப்பட்டு அர்த்தம் புரிந்து கொண்டவர்களின் , நமுட்டு சிரிப்போடு அவை ரசிகப்பட்டு நிறையுறுவதைத்தான் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன் . பேட்டிக்கு பிறகு அனுபவம் வாய்ந்த மூத்த ஊடகவியலார்கள் பேனாவை மூடிவைத்து விட்டு "பிரசுரத்திற்கல்ல" என்று நிகழ்த்தும் கருத்து   பரிமாற்றம்    பலமுறை  நிகழ்ந்திருக்கிறது. சிலமுறை குறிப்பிட்ட பத்திரிக்கையாளர்களை அழைத்து நடுநிசி வரைகூட கூடுகைகள் நடந்ததுண்டு . அதில் உண்மையதார்த்தம் ,சமூக பொறுப்புணர்வு மிளிரும் . சில முரண்பாடுகளை சண்டையிட்டு சரி செய்த நிகழ்வுகளும் உண்டு . தலைவரை அவ்வளவு வெளிப்படையான அரசியல் உள்சிக்களை அவர்களுடன் விவாதிப்பதை முதலில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை . ஆனால் சில காலம் பிறகு அவை அன்றாட செய்தி நிகழ்வுகளுக்கு மத்தியில் கட்டுரையாக வெளிவருவதை பார்க்கும் போது அதன் அவசியத்தை புரிந்துகொண்டேன்

செய்திகள் பொறுப்புடன் கையாளப்படுவது ஒருபுறமிருந்தாலும் . அந்த உறவுமுறைக்கு பெரிய மரியாதை இருப்பது. 1993 பிறகு தலைவரின்  பத்திரிக்கையாளர் சந்திப்புகள் அறவே நின்றுபோனது . காரணம் பழைய முகங்கள் மாறி எங்கும் இளமை பொங்கும் பத்திரிக்கையாளர்களை காணமுடிந்தது . பத்திரிகையின்  போக்கில் பெரிய மாற்றம் கண்டது அப்போதுதான் . எந்த அரசியலாளருக்கும் மரியாதைப்போய் ,அனைவரையும் குற்றவாளிகள்போலவும் , ஊடகவியலாளர்கள் நேர்மையின் சின்னம் போல வெளிப்பட துவங்கினர். யாரைப்பற்றியும் யாருக்கும் மரியாதையும் இல்லாமலானது . நின்றும் நடந்து பேட்டிகொடுப்பதும் , மைக்கை நீட்டுகிறேன் என உதட்டில் அறியாமல் இடித்துவிட்டதாக நடிப்பதுமாக , அந்த சமூகம் முற்றாக மாறிப்போனது .

 சமீபகாலமாக    ‘வேரற்ற’   இளம்   ஊடகவியலாளர்களின்    ஒரு படை    ஊடகங்களை    ஊடுருவியிருக்கிறதுஇவர்களுக்கு அரசியல்நோக்கு ஏதும் இல்லைஇவர்களின் முன்னுதாரணம் ஆங்கில ஊடகங்கள்தான்ஆங்கில ஊடகங்களின் நோக்குகளும் வழிமுறைகளும் இவர்களை நேரடியாகப் பாதிக்கின்றன. ‘அமைப்பை    எதிர்த்து    துணிவுடன்  குரல்    கொடுக்கும்   ஊடகவியலாளர்’    என்ற  படிமம் மற்றும் மேலை ஊடகங்களில் இருந்து கிடைக்கும்  உதிரியான கோட்பாடுகள்"என  ஜெயமோகன் தனது சாட்சி மொழி கட்டுரைத்தொகுப்பில் சொல்வது இதைப்பற்றித்தான்  என நினைக்கிறேன் .
அன்று பத்திரிக்கையாளர்களையும், அவர்கள் நடந்து கொண்டதையும் பற்றி நான் பல காலம் சிந்தித்ததுண்டு . அவை பல புரிதல்களை எனக்கு கொடுத்திருக்கின்றன . ஊடக தர்மம்  சிதைவுற்று போனது . அதை சரி செய்ய முயன்ற சிலரையும் அது முற்றாக சிதைக்கத் துவங்கியது .அந்த துறையில் என் நண்பர்களை தேர்வு செய்வதில் நிதானமாக நடந்து கொள்ள துவங்கினேன். எல்லாவற்றிலும் உள்ளது போல இதிலும் எனக்கு ஆதரவு எதிர்ப்பு என இரு பிரிவு உண்டாகியது. சில நேரங்களில் உலகாயத போக்குடன் ஒத்திசைவதை பற்றிய உள்ளக்குத்தல் , என் சமன்நிலையை பெரிதும் பாதித்ததுண்டு . சுமூக போக்கை ஒட்டி சில சமயம் அவர்களுடன் இயந்து போக முயற்சித்து பார்த்திருக்கிறேன் . அவை நல்ல பலனை ஒருபோதும் தந்ததில்லை . என்னை பற்றிய அவர்களின் மதிப்பீடுகள் வேறுமாதிரி இருந்தன. அவற்றின் உட்புகுந்த அவற்றை சரி செய்வது நடவாது .

அனைவரும் எதிர்பார்த்த அந்த ராஜ்யசபா தேர்தல் மிக வித்தியாசமாக நடந்து முடிந்தது , நாராயணசாமி தனது போட்டியாளர் திமுகவின் திருநாவுக்கரசுவிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார் . அவர் தோல்வி சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை அடிப்படையில் அவருக்கான வெற்றி சாத்தியமில்லாதது . பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகும் பாமக இறங்கிவரவில்லை . கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளவில்லை . இத்தனை களேபரத்திற்கு பிறகும் வித்தியாசம் ஒரு ஓட்டென்பது , ஆளுகிற திமுக அரசை கதிகலங்க செய்துவிட்டது . அது இந்த அரசு தனது முழு ஆயுளை அடையப்போவதில்லை என்பதை சொல்லிவிட்டு சென்றது .

இதனால் ஆளும்  தரப்பும் எதிர்த்தரப்பும் தங்களின் நிலழல்  வேலைகளை தொடங்க , ஆளும் அமைப்பும் அதற்கு அண்ட கொடுக்க தயாராகிக்கொண்டிருந்தது . இளைஞர் காங்கிரஸ் தலைவர் வல்சராஜுக்கு இது இண்டாவது முறையாக சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பு,  மேலதிகமாக கள சண்டைக்கு பேர்போன இயக்கத்தின் தலைமை என்பது அரசியல் ரீதியில் தனித்து செயல்படும்  சுதந்திரத்தை  அவருக்கு  கொடுத்திருந்தது . வல்சராஜின்லாபிமிக பெரியது , பலம்மிக்கது . அவருக்கு அரசின் அனைத்து துறையிலிருந்து உள்தகவல் கிடைத்ததால்  பட்ஜெட் கூட்டதொடரில் ஆளும் அமைப்பிற்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார்

ஆளும் கூட்டணியில் இரண்டாவது இடத்திலிருந்த தாமாக ஐந்து உறுப்பினர்களை கொண்டதாக இருந்தாலும் , அதன் தலைவர் கண்ணனை சுயேட்சையாக சட்டமன்றம் அங்கீகரித்திருந்தது . கட்சி சின்னத்தில் நிற்கவேண்டிய கண்ணன் என்ன காரணத்தினாலோ சுயேட்சையாகிப்போனார் . அதன் தலைமை தமிழ்நாட்டில் உள்ளது , சின்னம் ஒதுக்குவதற்கான கடிதம் தேர்தல் அதிகாரியிடம் கொடுப்பதில் ஏதோ சிக்கல், அதனால் அவருக்கு அதே சைக்கிள் சின்னத்தை சுயேட்சையாக ஒதுக்கியிருந்தார்கள்

இது தற்செயலாக நடந்திருக்கலாம் என்றனர் சிலர் . ஆனால் அரசியலில் தற்செயல்களுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த காலகட்டத்தில் . பலவித வதந்திகள் கண்ணனைப் பற்றி எங்கும் அலராக பேசப்பட்டது . கண்ணன் சுயேட்சையானது தற்செலயலல்ல . அவருக்கே திமுக கூட்டணி அரசாங்கம் ஆட்சியமைக்கும் என்றெல்லாம் நம்பிக்கையில்லை . பலவித வாய்ப்புகளுக்காகவும் அதன்  பேரத்திற்கு தோதாகவும் தன்னை இப்படி செய்துகொண்டார் என்றும். சிலர் கண்ணன்  மூப்பனார் பற்றி பேசுவதெல்லாம் வெறும் வேஷம் . தன்னை முன்னுறுத்திக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்பவர் அவர் என்றனர் . தென் தமிழக தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது புதுவையை பலமுறை கடந்து சென்ற மூப்பனார் தனது புதுவை  கிளை கட்சியின் தேர்தல்  பிரச்சாரத்திற்கு கடைசி வரை வரவில்லை என்றெல்லாம் எங்கும் பேச்சி எழுந்துகொண்டிருந்தது . புதுவை தாமாகவில் உள்புகைச்சல் கிளப்பிய நேரம் என பலவிதமாக இருந்த அரசியல் சூழல் . முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்யமாட்டார் என்றும் . அப்படியே தாக்கல் செய்யப்பட்டால் இதுவே கடைசீ . என் வதந்திகளுக்கும்  குறைவில்லை

அன்று இரவு வல்சராஜ் தன்னை வந்து சந்திக்க சொல்லி அழைத்திருந்தார் . எப்போதும் வல்சராஜ் அறை நண்பர்கள் சூழ இருப்பது வழமை . நான் சென்ற போது . அவர் மட்டிலும் தனித்திருந்தார் . என்னிடம் சில விஷயங்களை ,சொல்லி நாளை இது பற்றி இளைஞர் காங்கிரஸ் பெயரில் போஸ்டர் வெளியாக வேண்டும் என்றும் , ஆனால் ஓட்டுகிற கணம் வரை ரகசியமாக இருக்கட்டும் என்றார் . நான்  புறப்பட தயாரானதும் ,என்னை மறித்து நேரில் செல்லவேண்டாம் தொலைபேசியில் சொல்லச்  சொன்னார் . ஏன் என்றதற்கு ? வேறு சில விஷயம் பேசவேண்டுமென்றார் . நான் அங்கிருந்தபடி எனக்கு நம்பிக்கையான ஒருவருடன் போஸ்டர் விஷயம் சொல்லிவிட்டு வல்சராஜ் பேச காத்திருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...