https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 29 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 281 * தரையிறங்கும் நேரம் *

ஶ்ரீ:பதிவு : 281 / 368 / தேதி :- 28 டிசம்பர் 2017


* தரையிறங்கும் நேரம்  *
ஆளுமையின் நிழல்   ” - 27
கருதுகோளின் கோட்டோவியம் -03


பாராளுமன்ற தேத்தலில் தலைவர் நிற்கும் நேருமானால் அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்கிற வாய்ப்பும், அதையொட்டி கண்டடையப்பட்ட புதிய தலைவர்களை களம் இறக்க சிறந்த சந்தர்ப்பமாக இதை பார்த்தேன் . தேர்தல் ஒரு கொண்டாட்டம் போல நிகழ்வது . இரவு பகலாக அனைவருடனும் தொடர்பில் இருக்க நேர்வதால் , எல்லாரையும் பற்றிய நேரடியான  புரிதலுக்கு அது வாய்ப்பளிக்கிறது .அனைவரையும் தொடர்புறுத்தும் இணைப்பை செய்ய இதைவிட  சந்தர்ப்பம் பிறிதொரு முறை வாய்க்காது . இளைஞர் காங்கிரஸில் நிலவும் தேக்க நிலையும் அதிகார போட்டியும் ஒரு முடிவந்து விடும் . நீண்ட நெடுங்காலமாக சிந்தனையாக மட்டுமே இருப்பதும் , செயல்பாட்டிற்கு வராத திட்டமாக அவை இருந்து கொண்டிருப்பதும் ஒரு வதை போன்றது . இது இப்போது  செயல்பாட்டிற்கு வருவது , மிகுந்த விடுதலையளிப்பதாக இருந்தது.

சீட்டு சம்பந்தமாக தலைவர் தில்லி கிளம்ப இருக்கும் செய்தி கிடைத்ததும் , அன்று மாலை அவரை வீட்டில் சென்று சந்தித்தேன் . தேர்தல் என்று வந்து விட்டாலே ஒரே கொண்டாட்டமும் திருவிழா மனநிலைக்கும் கட்சி வந்துவிடுகிறது. அவர் இருந்த  தெருவில்  நுழையமுடியாது அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது . முதல் முறையாக உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்திருந்ததால் அனைவரும் தாங்கள் தங்கள் சந்தர்பத்திற்கு காத்திருந்தனர் . புதிய பொறுப்பின் அதிகாரத்தை ருசிக்கும் ஆவல்  அனைவரிடமும் இருந்தது . அதற்கான வாய்ப்பும் இதுதான்தலைவர் வீட்டிற்கு வெளியில் தொண்டர் கூட்டம் அலைமோதியபடி இருந்தது

தலைவர் தன்னை பார்க்க வந்திருந்த அனைத்து தொகுதி மற்றும் மாநில தலைவர்களிடன் தனிப்பட்ட முறையிலான சந்திப்பை நிகழ்த்தியபடி இருந்தார் . உள்ளும் வெளியிலுமாக நிறைய பேர் அவரது சந்திக்க காத்திருந்ததால் , நான் அவருடன் தனிமையில் பேசும் வாய்ப்பு கிடைக்காமல் போகுமோ என்கிற ஏமாற்றத்தில் இருந்தேன் . நாளை அதிகாலை அவர் தில்லி புறப்படுவதால், நான் தேர்தல் சம்பந்தமாக என் எண்ணத்தை சொல்ல இதுவே எனது கடைசி வாய்ப்பு . அந்த சூழலே எனக்கு ஒருவித நிலையழிதலை  கொடுத்து கொண்டிருந்தது.

மரைக்காயர் தான் போட்டி இடப்போவதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் அவரை நம்ப முடியாது . திரைமறைவில் காரியங்களை நிகழ்த்தி வெற்றி பெறுவதில் சமர்த்தர் . மேலும் தில்லியின் முடிவெடுக்கும்  பாணி மிக சிக்கலானது , புரிந்து கொள்ள முடியாதது . அதன் தன்மையை புரிந்து கொண்டால் தான் அதன் இயங்குமுறைகள்  புரிந்து கொள்ள முடியும் . பலவித மத ஜாதி மொழி இன காலச்சாரங்களை கொண்ட நாட்டின் மக்களை ஒன்றிணைக்கும் கட்சியின்  தலைமை பொறுப்பென்பது எளிதாக நினைக்க முடியாதது

மாநில அரசியலில் நிலவும் சமன் பாட்டை நிலை நிறுத்திவதில் உள்ள சவாலகளே மூளையை சொடுக்கி விடுபவை . அதை விட பல்லாயிரம் அலகுகளினாலான முரணியக்கத்தை அடிப்படையாக கொண்டது தேர்தலாரசியல் . காங்கிரஸ் நூற்றாண்டு கண்டு . நாட்டில் ஜனநாயகப்போக்கை துவங்கி வைத்து . நீண்ட பாரம்பரியமும் , அனுபவமும் உள்ள அகில இந்திய கட்சி அது . எப்போதும் தனது முடிவுகளை சில சிக்கலான கொள்கை தீர்மானங்கள்  மற்றும் செயல் திட்டங்களினால் அவை தன்னை வடிவமைத்துக் கொண்டது . அதை முற்றிலுமாக வளர்க்க பல கட்ட ஆலோசனைக்கு பிறகே தேர்தலின் போக்கை கணக்கில் எடுக்கும்

கொள்கை முடிவு என்பது , தனது பலம் , கூட்டணி வாய்ப்பு அதனால் இணையும் அல்லது விலகும் கட்சிகளின் கணக்கு . வடக்கு தெற்காக பரந்த நிலப்பலப்பில் நிலவும் அரசியல் எதிர்க்கட்சிகளின் பலம் நமக்கான சீட்டு கணக்குகள் போன்ற மூளையை வறண்டடிக்கும் சிக்கலான கணக்குகளினால் ஆனவை . பின்னர் அதை கொண்டே வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுகிறார்கள் . ஆகவே மாநில தலைவராக இருந்தாலும், தேர்தல் சீட்டு கிடைக்கும் வரை யாருக்கும் எதற்கும் எவரும் உத்தரவாதமளிக்க முடியாத . இதில் மரைக்காயரை போல ஆளுமைகள்  எந்த விதமான நகர்த்தலை நிகழ்த்தும் என்பது யாரும் கணிக்க இயலாது. தலைவர் இப்போது தனக்கு சீட்டு என்கிற சங்கடமான நிலைபாட்டிற்கு வந்திருப்பதால் அவரை தவிர்த்து பிறிதொருவர் அந்த வாய்பபை பெற்றால். அது தலைவரின் பலகீனமாக பார்க்கப்படும்

நான் தலைவரை முன்னிறுத்தி , ஒரு புதிய செயல்முறைகளை முன்னெடுக்க  இளம் தலைவர்களை களமிறக்க இதைப் போன்ற ஒரு நல்ல வாய்பபிற்காக காத்திருக்கிறேன் . மேலும் இங்கு நிலவும் அரசியல் சூழல் நான் கொண்டுவந்திருக்கும் புதியவர்களுக்கு  அரசியல் தலைமை பற்றிய பிழை புரிதல் நிகழ்ந்து விடக்கூடாது . தலைவரை தவிர பிறிதொருவர் பாராளுமன்ற தேரதலில் நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டால் . நான் எடுத்து முயறசிகள் அனைத்தும் நீர்த்துப் போகலாம் . தேர்தல் நேரத்தில் வேட்பாளர் வெற்றி ஒன்றே இலக்காக இருக்கும் . அந்த சூழலில் ஆளுமைகளை பற்றிய புரிதலுக்கு நேரமிருக்கப்போவதில்லை . ஆனால் அரசியலென்பது ஆளுமைகளின் பலத்தை பிரதானமாக முன்னிறுத்துவது . அதில் தலைமை பற்றிய எந்த முரண்பாட்டையும் கொண்டுவருவது சரியாக இருக்காது . நான் பலவித குழப்பத்தில் இருந்தேன் . நடக்கப்போவதில் எதையும் என்னால் மாற்றி அமைக்க முடியாது .இருப்பினும் என தரப்பு என ஒன்றை அவரிடம் நான் சொல்லியே ஆகவேண்டும் . இதுவரை சிந்தனைகளாக கனவுகளாக , திட்டங்களாக இருந்தவை செயல்முறைக்கு வரவேண்டிய காலம் . வானில் பறந்து கொண்டிருந்தத்து தரையிறங்கியாக வேண்டும் . நான் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...