https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 29 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 282 * தனியின் தொகுப்பு *

ஶ்ரீ:



பதிவு : 282 / 369 / தேதி :- 29 டிசம்பர் 2017



* தனியின் தொகுப்பு  *



ஆளுமையின் நிழல்   ” - 28
கருதுகோளின் கோட்டோவியம் -03







என்னால் தொகுதிக் களத்தில் கண்டடையபட்டவர்கள், தங்களின் அடையாளத்தையும் , அதிகாரத்தையும் தெரிந்து கொள்ளும் அவகாசமின்றி தேர்தல் சடுதயில் அவர்களின் மேல் திணிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் நடைபெறும் சூழலில் புதிதாக பொறுப்பில் வந்தவர்களுக்கான களம் திறக்கப்பட்டு தேர்தல் வேலைகள் அவர்களை மூர்க்கமாக உள்ளிழுத்துக் கொள்ளும். அந்த சூழலில் தங்கள் கட்சி ஆளுமைகளை பற்றிய புரிதலுக்கு அவர்களிடம் நேரமிருக்கப்போவதில்லை . அவர்களை  சரியான முறையில் ஆற்றுப்படுத்தாது போனால்தன்னை எங்கு எவ்விதம் யாருக்கு பின்னால் கொண்டு நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரியாது போகும் ஆபத்தே அதிகம் .

முதல்நிலையிலேயே அவற்றை அறிந்து கொள்ளாது போனால் , தேர்தலரசியல் அவர்களை பல பக்கங்களில் இழுத்து அலைக்கழித்து விடும், பின் அவர்களின் அரசியல் நுழைவிற்கு எந்த அர்த்தமும் இல்லாது போகலாம் . கட்சியில் பொறுப்பிற்கு வருவது அதை நடத்திச்செல்லும் ஆளுமைகளின் எண்ண போக்கிற்கு வாகாக ஒரு அமைப்பை நிர்வகிக்க . அதற்கு அவர்களின் நம்பகத்தன்மை பிரதானமாக கருத்தில் கொள்ளப்படும். நிர்வாகிகள் தங்கள், தலைமையின்  ஆளுமைகளுக்குள் அவர்கள்  நடுநிலை வகிக்க முடியாது . கட்சி அரசியலை பொறுத்தவரை அது குற்றமாக பார்க்கப்படுவது .

யாரை நோக்கியாவது ஒரு மனச்சாய்வு இருந்தால் அல்லது , அவர்களால் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது . யாரை வேண்டுமானாலும் தங்களுக்கு மேல் நிறுவிக்கொள்ளும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதுதான் அவர்களின் அரசியல் ஆயுளை முடிவு செய்வதுஅவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே தொகுதி அமைப்பில் உள்ள ஏதாவதொரு ஆளுமை அமைப்பிலுள்ள அனைவருக்கும் ஒரு செய்தி சொல்வதன் பொருட்டே.

கட்சி அரசியலென்பது ஆளுமைகளை பிரதானமாக முன்னிறுத்துவது . அதன் பலத்தில்  இதுவும் ஒரு அங்கம் . தலைமை பற்றிய எந்த முரண்பட்ட கருத்தையும் எவர் மீதும் வலிந்து ஏற்றுவது சரியாக இருக்காது . ஆனால் வளர நினைக்கும் இளம் தலைவர்கள் தங்களின் தலைமையை பற்றிய புரிதலும் , அவர்களின் அரசியல் பாதையையும் அதில் தங்களுக்கான வாய்ப்பையும் கிரஹிக்க தெரிந்திருந்தால் , அதில் அவர்களுக்குள்ள நிறை குறைகளை சமன்படுத்துவது எனக்கு எளிதானது . ஆனால் முடிவுகள் எப்போதும் அவர்கள் தாமாக எடுக்கவேண்டியது. கருத்துருவாக்கம் அவரவர் சொந்த சொத்தாக இருக்கவேண்டியது . அதை வெறும் சொல்லில் நிறுவுவது எப்போதும் நிலையாதது .

இந்த சிக்கலான சூழலில் தலைவர் பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் , எனது வேலை மிக சுலபம்  . யாரையும் எதற்கும் தயாரிக்கும் பனி மிச்சமாகி  , தேர்தல் வேலையை மட்டிலும் நான் சிரத்தையாக பார்க்கலாம் . பிறிதொருவர் அறிவிக்கப்பட்டால்தான் வம்பே  , இன்று தலைவருக்கு எதிர் நிற்கும் வாய்ப்பு கட்சிக்குள் மரைக்காயர்தான் பிரதானமாகி இருக்கிறார் . அதன் நிழலாக நாராயணசாமியும் கண்களுக்கு தெரிகிறார்கள் , இருவரும் கட்சிக்கும் அதன் ஆயுளுக்கும் அறைகூவலாக களம் நிற்பவர்கள் .

 அணுகுமுறை வெவ்வேறாக இருப்பினும் . முடிவு ஒன்றை மட்டுமே சொல்வது . மரைகாயாரானால் அவரை களத்தில் எதிர்கொள்வது எளிது , அவர் யார் என்பதில் அனைத்து கட்சி ஆளுமைகளும் தெரியும் ஆனால் நாராயணசாமி தான் யார் எனபதை இனிமேல் வெளிக்காட்ட போகிறவர் . தலைவரின் தரப்பிலிருந்தே தன்னை வளர்த்தெடுத்து வெளிக்காட்டிக்கொள்வதால் , அவரது அரசியல் கட்சிக்குள் எடுபடும் . அவரை தவிர்க்கவே இயலாது அதன் விளைவுகள் எதிர்கால கட்சியின் போக்கு முற்றாக மாறிப்போகும். இன்று எழுந்து வந்திருக்கிற புதிய அமைப்பு ஒன்று உறுமாற்றம் கொள்ளும் அல்லது களத்தே நிற்காது ஒழியும்.

நான் பலவித குழப்பத்தில் இருந்தேன் . நடக்கப்போவதில் எதையும் என்னால் மாற்றி அமைக்க முடியாது .இருப்பினும் என தரப்பு என ஒன்றை தலைவரிடம் நான் சொல்லியே ஆகவேண்டும் . இதுவரை சிந்தனைகளாக கனவுகளாக , திட்டங்களாக இருந்தவை செயல்முறைக்கு வரவேண்டிய காலம் . வானில் பறந்து கொண்டிருந்தது இப்போது தரையிறங்கியாக வேண்டும் . நான் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தேன்.

நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையில் இருந்தபோதும் , அடுத்து நிகழ விருக்கும் அனைத்து சாத்தியகூறுகளையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். தலைவரை பொருத்மட்டிலும் கட்சி ,வெற்றி ,ஆட்சி என்கிற நிலைப்பாட்டிற்குள் வந்துவிட்டால் ,அதைத் தவிர வேறு எதையும் சிந்திக்கும் போக்கில்லாதவர் . ஏதாவதொரு சமன்பாட்டில் தான் விலகினால் கட்சி ஜெயிக்கும் என்கிற நிலை எழுந்து வந்தால் தன் இருப்பை விட்டுக்கொடுக்கவும் தயங்க மாட்டார் என நான் அறிவேன் . இந்த முறை அதைப்போன்ற ஒன்று நிகழக்கூடாது என்கிற அச்சத்தில்  இருந்தேன் . நான் சொல்வதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இல்லை என்றாலும் . என் குரலுக்கு அவர் மதிப்பளித்தே ஆகவேண்டும் என அவரை வற்புறுத்தும் மனநிலையில் நான் இருந்தேன்

அனைத்து மட்ட தலைவர்களும் அவருடன் பேசி பின்னர் ஒருவர் பின் ஒருவராக கிளம்பி சென்ற பிறகு , நான் தலைவரிடம் பேச அருகனைந்த போது நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது . அன்றைய நாள் முழுவதுமாக பலருடன் பேச்சுவார்த்தையில்  கழித்திருந்தார் . நான் அவரை சந்தித்த போது மிகவும் சோர்வாக காணப்பட்டார் . எனக்கு சட்டென ஒரு தயக்கம் சூழ்ந்தது , களைத்துள்ள போது பேசுவது நல்லதல்ல என  நினைத்து,பேசுவதை தவிர்த்து கிளம்ப முடிவெடுத்தேன் . அவர் மிகவும் தளர்ந்து மேல்சட்டை கழற்றி கதவில் மாட்டியபடி என்னை கூர்ந்து நோக்கிகாலையிலிருந்து பலர் பேசியாகி விட்டது . நீயும் ஏதோ சொல்ல விழைகிறாய் சொல்லுஎன்றதும் . நான் அடைந்திருந்த அந்த தயக்கத்தை கடந்து சொல்லவந்ததை தொகுத்துக்கொண்டேன் . அவை தனித்தனியான முடிவுகளாக பிரிந்து கிடக்கின்றன . அனைத்தையும் நேர்கோட்டில் கொண்டு வர என்னால் முடியுமானால் , அவருக்கு நான் சொல்ல விழைந்தது நிறைவு பெறலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்