ஶ்ரீ:
பதிவு : 265 /352 / தேதி :- 12 டிசம்பர் 2017
* காற்றின் திசை *
“ ஆளுமையின் நிழல் ” - 11
கருதுகோளின் கோட்டோவியம் -03
இளைஞர் காங்கிரசிலிருந்து தொகுதி தலைவர்களிடம் உறுப்பினர் படிவம் கேட்டு சென்ற பலருக்கு ஏதேதோ காரணம் சொல்லி உறுப்பினர் படிவம் மறுக்கப்பட்டது, அது பிறிதொரு சிக்கல போல கிளம்பும் என நினைத்தேன் . அதை உடனே தடுத்து நிறுத்தியாக வேண்டும் . அவர்களை சீண்டி பூசலிடிவதற்கான வாய்பபை திறந்து வைக்க தொகுதி தலைவர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசி வைத்து ஒரே மாதிரியான பதிலை சொல்லிக் கொண்டிருந்தனர் . இது ஒருவகையில் எனக்கு நல்லதற்குத்தான் என பட்டது . ஒரு விஷயம் மறுக்கப்படும் போது தான் அது சுவாரஸ்யாமானதாக மாறிவிடுகிறது . சரியாக பதியவேண்டும் என்கிற ஆவேசம் எழுந்தது . பெரிய மாற்றங்களை எப்போதும் வீசும் சிறிய காற்றின் திசையில் உணர்ந்து கொள்ள முடியும் . அவற்றின் போக்கை நம்மால் தீர்மானிக்க முடியாது . ஆனால் அது வீசும் திசை தோரும் நம்மை கொண்டு வைக்க நம்மால் முடியுமானால் , அது வீசுவது நமக்கு மட்டுமே என மாற்றிவிட முடியும் . வழமையான குழப்பத்தால் பெரிய காங்கிரசாரால் கொடுக்கப்பட்ட படிவங்களின் பெறுபகுதி கட்சி அலுவலகத்திற்கு பதிவு செய்யப்பட்டு திரும்பப்போவதில்லை . அந்த சூழலில் நாங்கள் பதியும் சிறய அளவிலான சேர்க்கையை நாங்கள் பதிந்தாலே அவை புதிய வாசலை எங்களுக்காக திறந்து வைக்கலாம் என அவதானித்தேன் .
மறுநாள் காலை மாஹியிலிருந்த வல்சராஜிடம் இளைஞர் காங்கிரஸ் சார்பாக தொகுதி தலைவர்களிடமிருந்து உறுப்பினர் படிவங்களை பெற முடியாமையையும் , அவை நமக்கெனத் தனியாக தரப்பட வேண்டியது முறைமை என அவரிடம் நான் தொலைபேசியை சொன்னபோது , அவர் சூர்யநாராயனிடம் தான் பேசுவதாக சொல்லி , என்னை அவரை சென்று சந்திக்க சொன்னார் . நான் ஏற்கனவே பேசிவைத்தவர்கள் இதை ஒரு சிக்கலாக்கும் மனோபாவத்திளேயே அனுக முயற்சித்தனர் , தங்களுக்கு படிவம் மறுக்கப்பட்டது தலைவருக்கு தெரியவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தனர் . இது போன்ற குழப்பம் சிக்கலை இன்னும் பெரிதாகும் வாய்பிற்கே அழைத்துச் செல்லும் என அவர்கள் அறிந்திருக்கவில்லை . எனவே சூரியநாராயணனிடமிருந்து படிவம் பெறுவது அவசியமில்லை என்றும் , நாம் அதை தலைவரிடமிருந்து நேரடியாக வாங்கலாம் என்றவர்களை அடக்கி , ஒருநாள் பொறுத்திருக்க சொன்னேன் .
சூர்யநாராயணனை சந்திக்கும் முன்பாக தலைவர் சென்று சந்தித்தேன் , உனக்கு எத்தனை படிவம் வேண்டுமென்றார் தொகுதிக்கு பத்து என்கிற கணக்கில் 210 போதெமென்றேன் . சூர்யநாராயனிடம் நான் கேட்பதை கொடுக்க சொன்னார் . நான் எனக்கு 210 வல்சராஜ் சார்பாக 1500 படிவங்களை பெற்றுக்கொண்டேன் . எனக்கென பெற்றுக் கொண்ட படிவங்களுக்கு மட்டும் நான் கையெழுத்திட்டேன். இளைஞர் காங்கிரசின் சார்பாக வல்சராஜ் வந்ததும் அவரிடம் படிவம் பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்தை வாங்கிக்கொள்ள சொன்னேன் . சூர்யநாராயணனுக்கு என் திட்டம் புரிந்து போனது , என்னை ஒருமாதிரி பார்த்து சிரித்துக்கொண்டார் . அன்றே அனைவரையும் கூப்பிட்டனுப்பி 21 பேர் கொண்ட குழு நியமித்து , ஒருவார காலத்திற்குள் அனைத்தையும் பதிவு செய்த திரும்ப பெற்றுவிட வேண்டுமென்பதில் உறுதியாய் இருக்கச் சொன்னேன் . இப்போது அவர்களுக்கு நான் சொல்லவருவது தெளிவாக புரிந்திருந்தது .
புதிய உறுப்பினர் சேர்க்கை பலவருடங்களாக அமைப்பு ரீதியில் எந்த மாற்றத்தையும் செய்யாததால் அது ஒரு சம்பிரதாய நிகழ்வு போலாகியிருந்தது . நிர்வாகிகளின் மற்றம் நிகழாமல் போய் , ஒவ்வொரு முறையும் இதை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் கோஷ்டிகளுக்குள் அடிதடியாகி ,சிலசமயம் ரத்தக்களரியான சம்பவங்களும் மட்டுமே அதனால் விளைந்த பலன் என்றிருந்தது . ஒரு முறை அனைத்து தரப்பும் போட்டிபோட்டுக்கொண்டு புதிய உறுப்பினர் பதியப் புறப்பட்டு அது புதுவை வாக்காளர் எண்ணிக்கைவிட பலமடங்கு அதிகரித்து போன்ற கோமாளி கூத்தான சம்பவங்களும் நிகழ்ந்ததுண்டு . 1996ல் நடந்த தேர்தலில் கட்சி தோல்வியுற்று , ஆட்சி கைவிட்டுப்போனது; மரைக்காயர் தில்லி அரசியலில் முழுமையாக இருந்தது புதுவை அரசியலில் ஆர்வமற்ற இருந்தது ; போன்ற பல காரணங்களினால் இந்த முறை மூத்த தலைவரகளுக்குள் பெரிய போட்டியென்றெல்லாம் ஒன்றுமில்லை . ஆனால் தொகுதி அளவில் தலைவர்களை மாற்றுவதற்கான வாய்பிருந்தும் , நடப்பதை பற்றிய புரிதல் இல்லாமையால் உறுப்பினர் சேர்க்கை மந்த கதியில் நடந்து முடிந்தது . நாங்கள் கொடுத்திருந்த 1710 படிவத்தில் 745 மட்டுமே எங்களால் திரும்பப்பெற முடிந்தது . தொகுத்திக்கு சராசரியாக 25 என்கிற அளவில் அது இருந்தது . நான் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள இந்த எண்ணிகைப் போதுமானது .
உட்கட்சி தேர்தல் சம்பந்தமாக தில்லியிலிருந்து அடிக்கடி பார்வையாளர்கள் வரத்து அதிகமான பிறகுதான் , இது வழமையாக நிகழும் சம்பிரதாய நிகழ்வு இல்லை என் அனைத்து தரப்பினர்களுக்கும் புரிந்தது , ஆனால் படிவம் திருப்பி அளிக்கவேண்டிய இறுதி தேதி நெருங்கி விட்டதால் , கடைசி நேரத்தில் விழத்துக் கொண்டவர்களால் கூட ஒன்றும் செய்யமுடியவில்லை . இளைஞர் காங்கிரஸ் சார்பாக நாங்கள் தனியாக பதிந்ததை நான் சொல்லும் வரை அலுவலகத்தில் கொடுக்கவேண்டாம் என நிறுத்தி வைத்திருந்தேன். தொகுதி தலைவர்களிடம் கொடுத்தால் அது கட்சி அலுவலகத்திற்கு போய் சேராது . இறுதி தேதி இரண்டுமுறை மாற்றி அறிவிக்கும் வரை பொருத்திருந்து , கடைசிநாள் மாலை , தொகுதி தலைவர்களிடம் கொடுக்காமல் கட்சி அலுவலகத்தில் நேரடியாக சமர்பிக்க செய்தேன் . அதை ஒரு குற்றமாகவும் , நான் தனித்து பெரிய காங்கிரசில் தேவையில்லமல் தலையிடுவதாக தலைவரிடம் முறையிடப்பட்டது . இது நான் எதிர்பாரத்துதான் . படிவங்களை இளைஞர் காங்கிரசின் சார்பாக வல்சராஜ் பெற்றுக்கொண்டதாக அவை ஆவணப்படுத்தப் பட்டிருந்ததால் , அவை என் பெயரில் எங்கும் குறிப்பிடப்படவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக