ஶ்ரீ:
பதிவு : 267 / 254 / தேதி :- 14 டிசம்பர் 2017
* முளைக்க காத்திருக்கும் மனிதர்கள் *
“ ஆளுமையின் நிழல் ” - 13
கருதுகோளின் கோட்டோவியம் -03
குடிமை சமூகத்திலிருந்து கிளம்பும் புதிய தலைமுறை எப்போதும் அரசியலை ஆரோக்கியமாக வைத்திருப்பது . அவர்களின் கூர்மையும் ஒருநாள் முனைமழுங்கிப்போகும் என்பது கோட்பாடு . அவர்களின் முதல் எதிர்வினை தான் முளைத்தெழுந்த இடத்திலிருந்து பிறிதொன்று கிளம்பாமல் பார்த்துக்கொள்வதே . விளக்கின் சிட்டத்தை கலைவதின் பொருட்டு மீளவும் அது பிரகாசம் பெறுவதுபோல , தடைகளை விளக்கி அங்கிருந்து புதுத்தலைமை எழுந்து வருவதை உறுதி செய்வது . இவை பிறிதொருவரின் பார்வைக்கு புதிய முயற்சிகளாக பார்க்கப்பட்டு , அவை முடக்கபடுகிற போது .
புதிய முயற்சிகள் தோல்விகளாகின்றன அவை இடிபாடுகளாக கிடக்க , வெற்றிகள் நமது புதுமுயற்சிகளுக்கு தடையாக, எதிர்ப்பாக , நமக்கு எதிர்க்கை கோர்க்க தயங்குவதில்லை . நம் அரசியல் வெற்றிகள் பிறிதொருவருக்கு “அரசியல் சரிநிலைகளாக” பார்க்கப்பட்டு அவர்களின் எதிர்வினைகளால் .அவை அரசியல் காரணங்களுக்காக நாம் செய்யும் தவிற்கவியலாத பிறழ்வுகளுக்கு பிழையிடு போல . அதை அவர் பல இடங்களில் முயற்சித்து பாலத்ததையும் சிவலவற்றில் வெற்றியையும் பலவற்றில் தோல்வியையும் சந்தித்திருந்தார்.
மிக சமீப காலம்வரை அவரது புதிய முற்சிகளும் அதன் வெற்றி தோல்விகளை பற்றியும் பலர் என்னிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன் . அவர் மேலே கொண்டுவர முனைந்த முடியாது போன சிலரையும், நான் எனது கூடுகைப் பயணத்தின்போது சந்திக்க நேர்ந்தது . காலம் கடந்த பிறகும் விடுபட்டு போன அவர்களின் இடத்திற்கு பிறிதொருவர் இன்னும் எழுந்து வந்து சேரவில்லை என்பதையும் , அங்கே அவரது பழைய கோட்பாடுகள் இன்னுமும் ஜீவித்திருப்பதை உணரமுடிந்தது , நான் அதை மேலெடுக்கும் முயற்சியை துவங்கினேன் ; எனக்கு அவர் கொடுத்திருந்த அடையாளத்திற்கு , அவருக்கு நான் செய்ய முயற்சிக்கும் பிரதியாக இதை இருக்கட்டும் என்று.
தலைவர் தனது பிரதேச மற்றும் வட்டார கமிட்டிகளின் புதிய தலைவர்களையும் நிர்வாகிகளையும் நியமிப்பதில் எந்த அடிப்படையில் நிர்வகிக்கப்போகிறார் என்று தெரியவில்லை . அவரின் முயற்சிகளினால் வென்றெடுக்க முடியாது விடப்பட்ட சில நல்ல தலைவர்களை மறுபடியும் , அவர் நிறுவ நினைத்த இடத்திற்கு கொண்டுவர , இது காலம் என்று எனக்கு தோன்றியது , அதற்கான முழு முயற்சியில் ஈடுபட துவங்கினேன் .
ஒரேவிதமாக தொகுதியில் இளைஞர் அமைப்பினர் செயல்படுவதைத் தவிர்த்திருந்தேன் . யாருக்கும் என்ன நிகழப்போகிறது என்பதை பற்றி முழுத்தகவல் செல்லப்படவில்லை , ஆகவே ஒருவருக்கொருவர் அவர்களுக்குள் தெரிந்த சில தகவல்களையும் பரிமாறிக்கொள்ள முடியாதபடி அது வடிவமைக்கப்பட்டிருந்தது . தேர்தல் தேதி நெருங்கியதும், மாநில தலைவருக்கு போட்டியில்லை என்றாகிவிட்டது . மாநில கமிட்டி நிர்வாகிகள் தொகுதியின் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என்கிற சட்டத்தின் படி, இருவர் தொகுதி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு , ஒருவர் மாநில பிரதிநிதி பிறிதொருவர் தொகுதி தலைவர் , இரண்டும் அனைவரின் ஒத்துழைப்புடன் தொகுதி அளவில் சுமூகமாக ஏகமதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதை கண்காணிக்க மாநில அமைப்பிலிருந்து பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் . எங்களது திட்டம் புதுவையில் உள்ள 21 தொகுதிகளை மூன்றாக பிரித்து , எங்களுக்கு சரிவரும் ஏழு , எங்கள் ஆதரவில்லாமல் நியமிக்கமுடியாத ஏழு .எங்களுக்கு மட்டுமே சரிவரும் ஏழு , என பிரித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தோம் . இது எந்தவகையில் வெற்றியை தரவல்லது என யாருக்கும் என்னால் புரியவைக்க முடியாததால் . எனது அணுக்கர்களே இதை முதலில் எதிர்க்க துவங்கினர் . சிலர் வட்டார கமிட்டியுடன் மோதுவதற்கான வாய்ப்பாக இதை பார்த்தனர் .
சிக்கலே இங்குதான் துவங்குகிறது . மோதல் போக்கு இந்த திட்டத்தை முழுமையாக செயலிழக்க செய்துவிடுவதுடன் . அசம்பாவிதமாக ஏதாவது நிகழ்ந்து அதனால் சிக்கல் உண்டுடானால் தலைவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டிவரும் . அவருக்காகவே இது அத்தனையும் நிகத்தபட்டது என்கிற வாதம் செல்லது . தனித்து நான் எதையோ முயறச்சித்ததாக பார்கும் வாய்ப்பு என் அரசியல் வாழகையை முடித்துவைப்பதுடன் , தலைவர்முதல் வல்சராஜு வரை இதில் என்மீது அதிருப்த்தியடையும் வாய்ப்பையே அதிகரித்து விடும். நான் எனது ஆட்டத்தின் போக்கையே மாற்ற நினைத்தேன் .
“ஒருபோதும் தொடர்ச்சியான, தர்க்கபூர்வமான ஒரு கோட்பாட்டை அல்லது நிலைப்பாட்டை உருவாக்க முயலக்கூடாது. எந்நிலையிலும் எந்த முத்திரைக்கும் அஞ்சி எல்லாரும் சொல்லும் அரசியல்சரிகளைச் சொல்பவனாக ஆகிவிடக்கூடாது. புறக்கணிப்போ வசையோ எதுவானாலும் அதுவும் ஒரு இயல்பான விளைவே என ஏற்றுக்கொள்ளவேண்டும். மனசாட்சியின் குரலாக, ஒரு வெறும் சாட்சியின் தரப்பாக மட்டுமே என் அரசியல் ஒலிக்க வேண்டும். அது முரண்பாடுகள் கொண்டதாக, வெறும் மனப்பதிவாக, சல்லிசாக இருந்தாலும் பரவாயில்லை. அப்படி ஒரு குரலுக்கு கோட்பாட்டாளர்களுடன் விவாதிக்கும் திராணி இருக்காது. அதற்கு கொள்கைகளின் சாராம்சமும் இருக்காது. ஆனால் அதற்கு ஒரு பங்களிப்பு உண்டு. கோட்பாட்டாளர்கள் விளக்காத பலவற்றை அது எளிமையாகச் சொல்லிவிட முடியும். அந்தக் குரலுடன் பலசமயம் எளிய வாசகர்கள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடும்”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக