https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 29 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 13 அமைப்பின் முரண்

ஶ்ரீ:



அரிய  நிகழ்வும்  வெறுமையும் - 13

அமைப்பின் முரண் 


பதிவு :  400 / தேதி :- 28 ஜனவரி  2018




வெளியிலிருந்து பாரக்க அது ஒரு சாதாரண அரசு விருந்தினர் விடுதி போல இருந்தது . அதன் செலவெறிய வாடகையின் காரணம் உள்ளே நுழைந்த மறு நொடி,  நட்சத்திர விடுதிக்கான சகல செல்வ செழிப்பும் அங்கு கொட்டிக்கிடந்தது அதன் காரணம் புரிந்தது  . இந்த முரண்,முதலில் எனக்கு திகைப்பை கொடுத்தது . பொதுவில் வெளிப்பார்வைக்கு பகட்டாக தெரியும் பல விடுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை. விளம்பரத்திற்காக மெனக்கெடுபவர்கள், பயணிகளின் வசதிகளை எண்ணுவதில்லை  , ஆனால் வெளியில் ஒன்றும் யூகிக்க இயலாத இந்த விடுதியில்  உள்ளுர காணும் கட்சியின் தரம் வேறுபட்டிருப்பதை புரிந்து கொள்ள முயற்சித்தேன் . உள்ளிருக்கும் இந்த செல்வ செழிப்பை  வெளிக்காட்ட யாருக்கோ அவர்கள் அஞ்சுகிறார்கள் என்கிற முடிவிற்குதான் வர இயன்றது. அது அங்கு பொருளியலில் நிலவும் மேல் கீழ் அமைப்பின் முரணையும் . அரசியல் நிலை சக்திகளின் மேலாதிக்கத்தையும் தெளிவுபடுத்தவதாக எண்ணினேன் .

விடுதியில் நாங்கள் எடுத்திருந்த இரண்டு அறைகளும் அதிநவீன விடுதிக்குள்ள அனைத்து வசதிகளோடு மிக விசாலமானவை , அதன் செலவேறிய காரணத்தை நியாயப்படுத்திக் கொண்டிருந்தன . பொதுவில் தங்கும் விடுதியில் நல்ல தரத்தை எதிர்நோக்கும் வழமை எனக்கு இருந்தாலும், இந்தளவு நவீன வசதிகளை கொண்டதை நான் தவிர்த்து விடுவேன் . ஆனால்  இந்தத்தரத்தில் விடுதியை எடுத்ததற்கு ஒரு முக்கிய காரணமுண்டு . இங்கிருந்தபடிதான் எனது முழு அயோத்தி யாத்திரையை திட்டமிடவேண்டும் . நம்பகமான வண்டியை பொறுப்புள்ள விடுதிகள் வழங்கமுடியும் என்பதுதான் அதற்கான அடிப்படை காரணம் . ஆனால் நாங்கள் இந்த விடுதியை எடுத்த இரண்டு நாட்களில் எங்களுக்கு முன் சென்ற யாத்திரை குழுவைக் கொண்டே நாங்கள் பயணிக்கும் வண்டி ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது . இனி அடுத்து செய்யவேண்டியதை பற்றிய சிந்தனையில் இருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்