https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 23 ஜனவரி, 2018

“தமிழை ஆண்டாள்”

ஸ்ரீ :


பதிவு :  394 / தேதி :- 23 ஜனவரி  2018 




தமிழை ஆண்டாள்


ஆசிரியர்,
தினமனி நாளிதழ் ,
கேன்டீன் வீதி,
புதுவை -1




வைரமுத்து எழுதியதமிழை ஆண்டாள்கட்டுரை தினமணியில்  [08-01-18] ஆண்டாளையும் , ஶ்ரீவைஷ்ணவத்தையும் மட்டுமல்லாது ஒட்டு மொத்த  ஆன்மீக சமூகத்தின் நம்பிக்கையை உடைக்கும் முறையற்ற விமர்சனமாக வெளிவந்திருந்தது. அதைக் கண்டித்து பலரும் எதிர்வினையாற்றியதற்கு மதிப்பளித்து , நிர்வாகம் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்த , தங்களின் ஜனநாயக பண்பை மதித்து எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

ஒரு தரமான பத்திரிக்கையின் செய்தி மக்கள் சமூகத்தில் எவ்வித கேள்விக்கும், மறுசிந்தனைக்கு உட்படாது அவர்கள் மனதில் சென்று தங்கிவிடும் என்பது உங்களுக்கு தெரியாததல்ல . அக் கட்டுரை சொல்லும் செய்திகள் ஆண்டாள் சொல்ல வந்த ஆழ்பொருளை அறியாமலும், தமிழ் இலக்கிய அனுகுமுறையும் இன்றிஉண்மையை திரித்து , உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது . முழுமையும் அபத்தமாக இருப்தை நற் தமிழ் அறிந்த எவரும் புரிந்து கொள்வர் .இருப்பினும் அவற்றிலிருந்து சிலவற்றை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறோம் .

  1. ஆண்டாள் கூறும் செய்தியாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்போம்  ஆனால் இறைவனையும் இயற்கை  இறந்த நிகழ்வுகளையும் கழித்துப் பார்க்க வேண்டும் என்கிறார்.
  1. அதுபோலகல்லான கடவுளே கண்ணனாகினான்என்ற சொற்றொடரே பிழையானது.
  1. இறைவன் முன் எல்லாரும் சமம்என்பது குறுகிய பரவசம் என்று விரசமாக குறிப்பிடுகிறார்.
  1. நம்மாழ்வாருடைய உணர்ச்சியின் பிரவாகம் யாப்புக்குள் தடுக்கி விழுகிறதுஎன்கிறார்.
  1. திருவாய்மொழியில் முதல் பாசுரத்தில் உள்ளதுயரறு சுடரடிஎன்பதில் உள்ள ஆழ்ந்த உணர்ச்சியைதிடீரென்று வைணவத்துக்கு மாறியவர் திருநீறு குழைத்துத் திருமண் இட்டுக்கொண்டதுபோல் என ஓர் உதாரணம் வேறு சொல்கிறார்.
  1. ஆழ்வார் பாசுரமோ பெரும்பாலும் ஆற்றுப்படுத்துவது; ஆண்டாளுடையதோ ஐக்கியப்படுத்துவதுஎன்கிறார். ஆழ்வார் மற்றும் ஆண்டாள் பாசுரங்களுக்கு அவர் சொல்வதுபோல் வேற்றுமைகள் இல்லை.
  1. உரைகாரர்கள் இதற்கு வேறுபொருள் கூட்டித் தம் தீராப்புலமையின் திமிர் காட்டுவார்கள்என் வைரமுத்து எழுதுவது பண்டைய நம் உரையாசிரியர்கள் அனைவரையுமே அவமானப்படுத்துவதாகும்.
  1. ஆண்டாள் நாச்சியாருக்குக் கட்டுரையின் பெரிய அவமதிப்பு அமெரிக்காவின் இண்டியானா பலகலைக்கழகம் வெளியிட்ட நூலில், “Andal was herself a devadasi who lived and died in the srirangam temple” என்று எழுதியிருப்பதைக் காட்டி இருப்பதாகும். ”பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கோடிக்கணக்கான இறை நம்பிக்கையுடையவர்களின் மனங்களை முறிக்கும் போக்கை மையமாக கொண்டது வைரமுத்துவின் நாத்திக பாணி இறை எதிர்பு எழுத்து . அதை அனைவரும் அறிவர். அவரிடமிருந்து இதைத்தவிர வேறெதையும் எதிர் நோக்க இயலாது . ஆனால் அவை தினமணி போன்ற வெகுஜன பத்திரிக்கையில் அத்தகைய காழ்ப்பு சொற்கள்  வெளியாகும் போது , அது அனைவரையும் திடுக்கிட வைக்கிறது . அந்த வசை கட்டுரைக்கு மாற்றாக தகுதியுள்ள ஒருவரின் சீரிய கட்டுரையே இந்த வலியை போக்க வல்லது . ஆகவே தினமணி நிர்வாகம் அதை செய்யும் என்கிற எதிர்பார்ப்பில் , இந்த கடிதம் உங்களிடம் அளிக்கப்படுகிறது .

நன்றி 

இவன்

ஶ்ரீ ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு

புதுவை  


குறிப்பு:-

விழாக்குழு சார்பாக வேளுக்குடி ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் ஸ்வாமி தினமணி வைத்யநாதனுக்கு அனுப்பியது 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்