https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 24 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 9 சொகுசின் விலை

ஶ்ரீ:

அரிய நிகழ்வும்  வெறுமையும் - 9


சொகுசின் விலை 



பதிவு :  395 / தேதி :- 23 ஜனவரி  2018 





மனித மனம் நவீனத்தையும், சிறப்பையும் நோக்கிய பார்வையுடையது , மேல்நிலையை ஒட்டி பழகவே அது எப்போதும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன் . என்னை பொறுத்தவரை எப்போதும் படோடோபத்தை தேடி ஓடுவதல்ல . ஆனால் அதற்கான வாய்ப்புகள் திறந்ததிருக்கையில் கிடைப்பதில் சிறந்ததை தேர்ந்தெடுப்பது என் வழமை . தொழில் ரீதியான மன அழுத்தங்களை சதா சர்வகாலமும் வீட்டில் வெளிப்படுவதை தவிர்க்க இயலாது இருக்கும் எனக்கு . அதை அத்தனையும் அனுசரிக்கும் மனைவியை எப்போதாவதுதான் இதைப்போல வெளியில் அழைத்துவர முடிகிறது . அந்த சூழலில் நவீனமயமான தெரிந்த அந்த உணவு விடுதி சற்று தொலைவில் இருந்ததையும் நேரக்கணக்கையும் தவறவிட்டிருந்தேன்

இதோ அதற்கான விலையாக இதோ இப்போது  நான் பதட்டமாக  ஓடிக்கொண்டிருக்கிறேன் . இருதயம் துடிப்பதை காதில் கேட்டபடி நான் ஓடுவதை மொத்த விமானநிலையம் புறக்கணித்து அது தன் வேளையில் மும்முரமாக இருந்தது . சற்று நிதானித்துக்கொண்டபோது . நான் நிவாஸை மறுபடியும் பார்த்துவிட்டேன் . அவன் நாங்கள் நின்றிருந்த இடத்தின்  மேல் தள படிகளில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவன் , என்னை பார்த்ததும் நிதானமாக வரச்சொல்லி கைகாட்டிவிட்டு ,அவருடன் மேலேறி சென்றுகொண்ருந்தான்

அவர் விமானநிலய சிப்பந்தி என புரிந்து கொண்டேன் அவர் எங்களை தேடிக்கொண்டு வந்தவர் என்பது  ஒரு விடுதலை உணர்வை கொடுத்தது . சற்று முன்னர் வரை என்னை குதறி எடுத்த அந்த  குற்றமனநிலை என்கிற உள்ளுணர்வு எங்கு சென்று ஒளிந்து கொண்டது எனத்தெரியவில்லை . தனக்கான அடுத்த வாய்ப்பிற்கு காத்திருக்கலாம் . அது ஒரு இணைப்பு விமானம் என்பதால் முன்கூட்டியே போர்டிங் பாஸ் கொடுத்திருந்தார்கள் . எனவே கடைசிவரை ஏற்றிவிட முயற்சிப்பார்கள் என்பது நிம்மதியை கொடுத்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்