https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 18 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -3 வெற்றிடம்

ஶ்ரீ:

அரிய நிகழ்வும்  வெறுமையும் -3

வெற்றிடம் 


பதிவு :  389 / தேதி :- 17 ஜனவரி  2018 
திருக்கோவலூர் ஜீயர் ஸ்வாமியின் மனவருத்தத்தின் பின்னனியை நான் யாத்திரை முடிந்து திரும்பிய பிறகே அறிய முடிந்தது பிள்ளைத் தோட்டத்திலுள்ள கண்ணன் கோவிலில் நடந்த கூடுகை ஜீயர் ஸ்வாமிகளுக்கு திருப்பதி அளிக்காதது மட்டுமின்றி அவரது சொல்லுக்கு உரிய மரியாதையை தரப்படவில்லை என்கிற செய்தி வருத்தம் தருவதாக இருந்தது என கோசகன் பட்டர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார் . முக்கியமான சில ஶ்ரீவைஷ்ணவர்களின் போக்கு நல்ல அறிகுறியில்லை என்பதுடன் அங்கு நிகழ்ந்ததை விரிவாக பேசியது என்னை மிகுந்த வருத்தமடையச்செய்தது . இதை சரி செய்ய ஏதாவது செய்யவேண்டும் என்கிற எண்ணம் எழுந்த போது உருவானதுதான் ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழு பற்றிய திட்டம்.

அதுவரை அரசியலை தவிர வேறெதிலும் பெரிதாய் ஈடுபடாததால் . சம்ப்ரதாயம் சார்ந்து செய்ய ரகுராமன் , கோடீஸ்வரன் போன்ற சிலர் இருந்தனர் . நான் நேரடியாக எதிலும் ஈடுபடாமல் அவர்களை முன்னிறுத்தி பல விஷயங்களை செய்து வந்தேன்இதற்கும் அவர்களை முன்னிறுத்தி செய்வதாகத்தான் எனது திட்டம் . ஆனால் ஊழின் கணக்கு வேறாக இருந்தது . சில தனிப்பட்ட மனக்கசப்பின் காரணமாக இருவரும் பிறிந்து போனதால் அங்கு வெற்றிடம் உருவாகி இருந்ததுஇந்த திட்டத்தை  செய்வதாக இருந்தால் பிரம்மாண்டமாக செய்யவேண்டும் . என்கிற எண்ணம்மட்டும் உறுதியாக இருந்தது.

சிறிய அளவில் செய்வது துவங்குவது எளிது ஆனால் தொடர்ந்து செய்வது இயலாது என்கிற கணக்கில் இருந்தபோது ஜீயர் , அயோத்தி யாத்திரை போக திட்டமிட்டிருந்தார் . அது நான் வியாபார நிமித்தமாக ஓய்வில்லாத காலம் . ஆனால் இந்தமுறை அவருடன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன்நிவாஸ் அப்போது சிங்கப்பூரில் இருந்தான் . அவனுடன் இதுபற்றி பேசிய போது தானும் வருவாக சொன்னதும் . யாத்திரைக்கு செல்வது ஏறக்குறைய உறுதியானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...