https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 13 ஜனவரி, 2018

ஜெ கடிதம் 04-01-2018

ஶ்ரீ:

பதிவு :  384 / தேதி :- 12 ஜனவரி  2018



தேதி:- 04-01-2018
புதுவை .

அன்பிற்கினிய ஜெ ,
வணக்கம் . நலம் , தங்களிடம் விழைவதும் அதுவே .

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த கடிதம் . உங்களுக்கு  கடிதம் எழுதவேண்டும் என்கிற உந்துதல் எனக்கு ஏற்படாமைக்கு முக்கிய காரணம் இரண்டு .ஒன்று ;நான் உங்களுடன் தினம் உரையாடியபடியே இருப்பதால் , ஒரு நிமிடம்கூட விலகி இருந்ததாக நான் உணராததால்  , “வெண்முரசும்உங்களின் பிற கடிதம் மற்றும் ஆக்கங்கள் எனக்கு உங்களுடன் உரையாடக்கூடிய ஊடகமாக என்னிடம் எப்பொதும் இருந்து கொண்டிருப்பதால்அவை எப்போதும் எனது சந்தேகம் புரியாமை புதிய திறப்புகள் என கொடுத்துக்கொண்டே  இருப்பதால் . நீங்கள் சொல்லும் அந்த கருத்துவெளி என்கிற ஒன்றில் உங்களுடன் நானும் பின்தொடர்ந்து அந்த அனுபவத்தை நானும் அடைவதால் என நினைக்கிறேன் . இரண்டு ; மாதம் ஒருமுறை நிகழும்புதுவை கூடுகைமற்றும் அதன் வழியாக நான் கண்டடைந்த உங்களின் அற்புதமான வாசகர்கள் எனக்கு புதிய நண்பர்களானபடியால்  . ஜெ யின்  இலக்கியம் தவிர்த்து பிறிதொன்று பேசி அறியாத அந்த நட்பு . ஒரு கொண்டாட்டம்போல , பேசி தீராத தருணங்கள் , அதைத்தவிர திடீர் திடீர் ரென நிகழும் , நாங்கள் நிகழ்திக்கொள்ளும் சந்திப்புக்கள் , அவை எப்போதும் என்னை உங்களை நோக்கியே குவிந்திருக்கச் செய்வது பிறிதொரு காரணமாக இருக்கலாம்.

நண்பர் சிவராமன் நீங்கள் புதுவை கூடுகைக்கு “ok” என்றதை சொல்லி , குதூகலித்தபோது  நானும் அவருடன் இணைந்து கொண்டேன் . ஆனால் இது நிகழும் என எங்கோ என்னுள் நான் முன்னமே உணர்ந்திருந்தேன் . உங்களிடம் சொன்னதுபோல , உங்களின் புதிய வாசகர் கூடுகை போல ஒன்றை  இங்கு புதுவையில் நடத்த வேண்டும்  என்கிற எண்ணமிருந்தது , ஆனால் நாங்கள் நிகழ்ததும் சிறியபுதுவை கூடுகைகேநீங்கள் வருவதாக சொன்னது , என் வாழ்நாள் மகிழ்வான தருணங்கள் . அதற்கு என் நன்றிகள் .

2015ல் ஒரு பெருமழை ஓய்ந்த காலம் , உங்களை கோவையில் கீதை உரையின் போது சந்தித்ததையும்பின்னர் 2016 பிப்ரவரி மாதம் நாகர்கோயிலில் சந்தித்ததை பற்றியும் இப்போது நினைத்து பார்க்கிறேன் . உங்களுடன் நீண்ட பயணத்தில் இருந்து கொண்டு நான் அடைந்த அமைதியை உணர்ந்தபடி இருக்கிறேன் .உங்களை நாகர்கோயிலில் சந்திக்க என் மனைவியுடன் காரில் வந்து கொண்டிருக்கிற போது சட்டென என்னிடம் கேட்டாள், “உங்களுக்கே இது பைத்தியக்காரத்தனம் என்று தோன்றவில்லையா , எந்த நம்பிக்கையில் ஒரு மாற்று திட்டமும் இல்லாமல் அவரை சந்திக்க கிளப்பி விடீர்கள் , என்ன தைரியத்தில் அவரிடம் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில்  அவரின் உதவியை எப்படி எதிர்பார்த்தீர்கள்அவர் நாகர்கோயிலில் இல்லை ஈரோடு ஏங்கேயோ இருப்பதாக சொல்கிறீர்கள் , அவரை சந்திக்க முடியாது போனால் என்ன  மாற்று திட்டம் என்று கேட்டவுடன்”. “என் விருப்பமான ஆழ்வார் திருநகரி இருக்கிறது பார்க்கலாம்என்றேன் . ஆனால் அது மேலொட்டமான சமாதானம் . உள்ளூர அவள் சொன்னது சரியோ  என தோன்றியது. ஆனால் நான் உங்களை மிக அணுக்கமாக உணர்ந்திருந்ததாக பட்டது , “அது நடக்கும்என்றது . அந்த சந்திப்பும் மறக்க முடியாத அனுபவங்களாக தங்கிவிட்டன

இந்த இரண்டு வருடம் எனக்குள் நிகழ்ந்ததை நினைத்துப்பார்க்கிறேன்நான் மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்த காலம் . வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் விற்று முதல் நடந்த நிறுவனம் . எனது பொது மேலாளர் செய்த ஒரு பொறுக்க இயலாத தப்பு என்னை திகைக்க வைத்தது , அனால் ஏன் என்னை அது கொந்தளிக்க வைத்து அவரை திட்டித்தீர்த்து கண்டிக்க முடியவில்லை ? , ஏன் கோபம் வருவதற்கு பதிலாக ஆழந்த மனவருத்த அடைந்தேன் ?. அவரிடம் ஒன்றும் சொல்லாமல் எனது அறையை விட்டு வெளியேறிய அந்த நிமிடம் முடிவெடிப்புதேன் , ஆக்ரகமாக அவரது தவறை கண்டித்து திருத்த வேண்டிய மனோநிலை எனக்கு இல்லை என புரிந்த போது இனி நான் வியாபாரம் செய்யும் தகுதியை இழந்துவிட்டேன் என்பதை புரிந்து கொண்டேன்.

பத்தொன்பது வயதில் தொடங்கிய நிறுவனத்தை மூட முடிவெடுத்தது அப்போதுதான் . எனது மனைவியிடம் சொன்னபோது , அதை அவள் ஆமோதித்தது தான் எனக்கு இன்று வரையிலான ஆச்சர்யம் . பலவருட நிறைவின்மையை , எனக்கு என்ன வேண்டும் எனபதை பற்றிய புரியாமை , என் தேடல் எதுஅது எனக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை , நான் கண்டடைந்தது உங்கள் ஆக்கங்களை வாசிக்க துவங்கிய பிறகு . இதை பற்றி உங்களுக்கு நான் முன்பே எழுதிகியிருக்கிறேன் . உங்கள் வாசிப்பின் போதெல்லாம் நான் அடையும் எழுச்சி நான் அவற்றை வசிப்பதற்கு தடையாக இருப்பதாய் ஒரு தருணத்தில் உணர துவங்கினேன் , ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஏற்படும் திறப்புகளுக்கு நான் என் அனுபவத்தில் கண்டடைந்தவற்றுக்கு நெருக்கமான தொடர்பையும் அவை இன்னும் பன்மத்துக்கு விரிவடைவதையும் எண்ணப்பெருக்காக பெருகியபோது. எழுதி பார்ப்பது என முடிவெடுத்தேன்.

 உங்கள் வார்த்தைகளிலிருந்து எனது எண்ணங்களை அடைந்தபோது . கொந்தளிப்பு இன்னும் அதிகமானது . பிறகு ஒரு வலைபூ தளத்தில் அவற்றை எழுதி குவிக்க துவங்கினேன் . அது உங்களுக்கு அர்ப்பணிக்க பட்ட தளமாக அதை துவங்கினேன் . அதில் உள்ள அனைத்தும் நீங்கள் சொன்னதை மேற்கோள்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. இதுவரை நான் வாசித்த உங்கள் ஆக்கங்களை பற்றிய எனது விமர்சனமாகவே அவை என்னால் எழுதப்படுகின்றன. அதனூடாக என் கொந்தளிப்பை அவற்றில் எழுதி கடக்க முடியும்  என நான்  நினைக்கவே இல்லை. எழுவதனூடாக மனதில் உள்ள கசப்பை , கொந்தளிப்பை அந்த எழுத்து பிழிந்து வெளியேற்றிவிடும் என்பதை , நான் அதுவரை அறிந்திருக்கவில்லை

மனம் இன்று இவ்வளவு தெளிவாக இருப்பதாக நான் வாழ்நாளில் உணர்ந்ததில்லை . “வெண்முரசு கூடுகைஅத்துனை மகிழ்வை , திணறடிக்கும் அளவில் என்னுள்  புகுத்தக்கூடும் என்கிற எண்ணம்  எழுந்த போது என்னடம் அதற்கு எதிர்சொல்லிருக்கவில்லை . நான் எழுத துவங்கியது என்னை அறிந்து கொள்ளும் முகமாக . ஆனால் இந்தனை நாள் என்னுடன் இருந்த மனது இத்தைகையதானதா? இதனுடனா நான் இவ்வளவு நாள் வாழ்ந்தேன்?. என்கிற திகைப்பை அடைந்தேன் . மனம  இத்தனை ஆழமானதா?. இதை புரிந்துகொள்ளவே முடியாதா?. என்கிற எண்ணம் எழுந்ததும் நான் உங்கள்வெணமுரசால்ஆற்றுபடத்துவங்கினேன் . பல துறையில் இருந்து பலரை பாதித்த எனக்கு , பிறிதொருவர் என்னை பித்தாக்கும் அளவிற்கு பாதிக்க முடியும் என்பதை இதுவரை  என்னால்  நம்பமுடியவில்லை . நீங்கள் என்னை பாதித்ததுபோல , ஒன்றை செய்யும் பிறிதொருவரை நிச்சயமாக நான் சந்திக்கப்போவதில்லை என நினைக்கிறேன் . எனக்கு இது போதுமானது 

அந்த வலைப்பூ துவங்கப்பட்டது விதிமுகூர்த்தம் என்பேன் , நான் என் எண்ணத்தை என் சிந்தனையை என் மொழியை உங்களிடமிருந்தே பெற்றுக்கொண்டேன் . என்னை எப்போதும் நெகிழச்செய்வதுநம்மாழ்வரின் திருவாய்மொழி” . அதை எனக்கு சொன்னவர் அதை மூன்றாக பிரித்தார். மொழி ,வாய்மொழி , திருவாய்மொழி என்று . முதலில் மொழியை கண்டடை , பிறிதெல்லாம் தானாக கிடைக்கும் என்றார் , நான் என் மொழியை தேடுகிற போதுதான் உங்களை கண்டடைந்தேன் . பின் அதை எனது வலைப்பூவில் அதை எழுதிக்குவித்தேன் . அதை தொடங்கிய நாள் முதல் அதில் புதிய பதிவு இல்லாத ஒருநாள் கூட கடந்ததில்லை . அவை இன்னும் இன்னும் என என்னை என்னுள் ஆழ்ந்து போகவைத்தது , அந்த நாளில் எதையோ செய்தோம் என்கிற மனநிறைவை , எனது நித்தியபடி பூஜைக்கு அடுத்தபடியாக அது கொடுத்தது . அதனூடாக நான் என் மொழியை அடைந்தேனா ?.அது திருந்தியதா?.  என்ற எல்லாம் எனக்குத் தெரியாது , ஆனால் நெஞ்சில் நான் பிறந்த நாளாக தத்தளித்துக் கொண்டிருந்ததை வெளியேற்றி விட்டேன் . ஒரு நாள் என் மொழியும்  திருந்தலாம்.

மனத்தில் அலை என கொந்தளிக்கும் மேல் பரப்பை கடந்து அதன் ஆழம் நோக்கிய பயணத்தில் இருக்கிறேன் . பக்கத்தில் எப்போதும் நீங்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறீர்கள் . இதைப்போல ஒரு பித்துநிலையை நான் ஒருபோதும் இதற்கு முன்பாக அடைந்ததில்லை . உங்களை புதுவையில் சந்திப்பதற்கு முன்பாக இதை சொல்லியாக வேண்டும் என்கிற உந்தலின் வேகம் தாளாது இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் . எனக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில் உங்களை தூய அத்வைதவாதி என சொன்னபோது திகைத்தேன் இது சாத்தியமா என நினைத்ததுண்டு . ஆம் அது சாத்தியமே இன்றும் மனதில் நான் அடையும் நிறைவை நான் அங்கிருந்துதான் பெறுகிறேன் . அவற்றைசொல்லப்படாத கருத்துவெளி , ஆழ்மனப்படிமம், ஒற்றை மனப்பரப்புஎன்கிற   மூன்று ஆபத்த வாக்கியம் போல தொகுத்துக் கொண்டதும்இன்றைய காந்தி வசித்தபோதுதான் நான் எனது அரசியல் அனுபாவங்களை அது மலரச்செய்து என்னை எழுத தூண்டியது . பனிமனிதன் , என்னை பரவசமடைய செய்தது , வெள்ளையானை நெஞ்சை குழையவைத்தது அறம் விம்மி கண்ணீர்பெருக்க வைத்தது இது எல்லாமாகி என்னை எழுத வைத்தது . என் எழுத்து என்னை என்னிடம் மீட்டுக்கொடுத்தது , அது எனது சந்தோஷத்தை அமைதியை நிறைவை அடையும் முயற்சியை துவக்கிக் கொடுத்தது. அனைத்தும் உங்களை சந்தித்த பிறகே நிகழ்ந்து . அதை நிகழ்த்திக்கொடுத்த என் நல்லூழின் ஊழின் பாதங்களை பணிகிறேன் . அதை எப்போதும் என் பக்கத்திலிருந்தபடி என்னை ஆற்றுப்படுத்தும் உங்கள் நினைவுகளை , எழுத்தை பணிகிறேன் . நன்றியறிதலை மீளவும் சொல்ல எனக்குள்ள ஒரே சொல்தலையல்லால் கைமாறிலேன்” 


நன்றியுடன் 

கிருபாநிதி அரிகிருஷ்ணன் 


குறிப்பு.

தங்களும் , தங்களின் ஆக்கங்களின் வாசிப்பும் எனக்குள் நிகழ்தியதை , என் பாதிப்புகளாக அவற்றை எனதுவலைப்பூவில்தொகுத்துள்ளதை உங்கள் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளேன் . இவை அனைத்தும் நான் உங்களுக்கு அனுப்ப எழுதி அனுப்பாத கடிதங்கள் .











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக