https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 26 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 11 அம்மாவின் பயம்

ஶ்ரீ:


அரிய நிகழ்வும்  வெறுமையும் - 11

அம்மாவின் பயம் 




பதிவு :  398 / தேதி :- 26 ஜனவரி  2018 




காலை உணவிற்கு கண்ணுக்கு தெரிந்த நவீன விடுதிக்கு செல்லும் முன்பாக விஜியை அம்மாவிற்கு காவலுக்கு வைத்து போனேன் . விஜி என் அக்கா பெண் . அவளுக்கு இப்போது என்னுடனான இந்த யாத்திரையை தவறவிட்டால்பிறிதொன்றுக்கு வாய்ப்பில்லை என்பதால் சிறு குழந்தையான சிரிஷ்ட்டவை உடன் அழைத்துவந்திருந்தாள் . லக்னோ விமானம் தயாரானதும் , விமான நிலைய சிப்பந்தியின் அறிவுறுத்தலின் படி அவர்கள் அம்மாவை சக்கர நாற்காலியில் அழைத்துச்செல்ல , ரன்வே க்கு அருகில் அவளை அனுமதிக்க மறுத்து மேல் தளம் வழியாக செல்ல சொல்லி அம்மாவை கொண்டு போனார்கள் . அதற்கு பிறகுதான் இந்த கலாட்டா

அம்மா மிகவும் பயந்திருந்தார் . விமான நிலைய சிப்பந்தி எவ்வளவு சொல்லியும் தனது மகன் வராது விமானத்தில் ஏற மறுத்து ஏறக்குறைய தர்ணா போல ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தார் . அவருக்கு விமானநிலைய செயல்முறைகளை விவரிப்பது நடவாது . விமான நிலைய சப்பந்திகளுக்கும் எளிதில் மறக்காத ஒரு நிகழ்வாக இது இருக்கலாம் . நாங்கள் அவரை உதாசீன படுத்தி விட்டு சென்றதாக நான் அவரை அருகில்  இருந்து விமானம் ஏற்றிவிட்டதிலிருந்துலக்னோ இறங்கும் வரையில் எங்கள் அனைவரையும் திட்டி தீர்த்திருப்பார் . நல்லவேளையாக அவருக்கு தனி இருக்கையாக முன்னே கொடுத்திருந்த்தால் சற்று நேரத்தில் அடங்கி போனார்

நாங்கள் லக்னோ விமான நிலையத்தை அடைந்த போது மதியம் 1:00 மணி . எங்களை தங்கும் விடுதிக்கு அழைத்து செல்ல வண்டி முன்னமே ஏற்பாடு செய்யப்பட்டு, ஓட்டுநர் பெயர் மற்றும் வண்டி எண் எனக்கு முன்பே குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டிடுத்ததால் . அவரை அடையாளம் காண சிரமம் இருக்கவில்லை . நாங்கள் தாங்கும் விடுதி நகரின் மையப்பகுதியில் இருப்பதால் 20 நிமிடத்தில் சென்று விடலாம் என்றார்மொழி சிக்கல் காரணமாக பலவித அபிநயங்கள் மூலம் தகவல் பரிமாறப்பட்டது . லக்னோ விமான நிலையத்தில் இறங்கியதும் , நான் ஒருகணம் திகைத்துப்போனேன் . அது அரசாங்க பொது மருத்துவமனை போல கேட்பாரற்று கிடந்தது . பன்னிகள் உள்ளே நுழைந்து குப்பைகளை கிளறிக்கொண்டிருக்க , அதைப்போல ஒரு விமான நிலையத்தை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்