https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 3 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 287 * கருத்தின் மறுபுறம் *

ஶ்ரீ:



பதிவு : 287 / 374 / தேதி :- 03 ஜனவரி  2018



* கருத்தின் மறுபுறம்  *




ஆளுமையின் நிழல்   ” - 33
கருதுகோளின் கோட்டோவியம் -03










காந்தி , பிரிட்டிஷார் தன் எதிரிகள் என அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களை அசுரர்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிக்கவில்லை. அவர்களுக்காகவும் சேர்த்தே தான் போராடுவதாக அவர் சொன்னார். அதனால்தான் பிரிட்டிஷாரை இந்திய அதிகாரத்திலிருந்து அகற்ற அவரால் முடிந்தபோதும் பிரிட்டிஷ் ஜனநாயகத்தையும் பிரிட்டிஷ் நீதிநிர்வாகத்தையும் பிரிட்டிஷ் இதழியலையும் அவரால் வைத்துக்கொள்ள முடிந்தது. இன்றும் இந்திய நாகரீகத்தின் செல்வங்களாக அவை நீடிக்கின்றன. யாருக்கு எதிராக அவர் போராடினாரோ அவர்களுக்கும் அவர் தலைவராக இருந்தார்என்கிறார் ஜெயமோகன் தனது இன்றைய காந்தி கட்டுரைத் தொகுப்பில் .

தலைவருக்கு அரசியல் ரீதியாக எதிராக நின்றவர்களும், தங்களுக்கு ஒரு உதவி தேவைபடுகிற போது நம்பிகையுடன் அவரை அனுகுவதை பார்த்திருக்கிறேன் . கசப்பான நிகழ் அரசியலைத்யும் தாண்டி ஒரு நட்பு அங்கு நிலைப்பதையும் அதற்கான பாதையை அவர் எப்போதும் திறந்து வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். அரசியலையும் சேர்த்து ,எதுவும் மானுட நாகரீகத்திற்கு உட்பட்டு விளையாடும் ஒரு கலையே . மாறி வருகிற சூழலில் காலம் அவருக்கு ஒவ்வாத பாணி அரசியலை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது . கற்பதற்கும் கற்றுக்கொள்வதற்குமான இடைவெளி அது

தலைவருடைய  பிரதிநிதியாக நாராயணசாமி தில்லியிலிருந்து கொண்டு அவரது காரியங்களை ஆற்றிக்கொண்டிருந்தார். அனைத்து நிகழ் அரசியலைத் தாண்டி தலைவர் தில்லியில் பெரிதும் மதிக்கபப்ட்டுகிற ஒரு ஆளுமை . அவரைப் போன்ற அரசியல் தலைவர்கள் அங்கு இன்னும் மிச்சமிருக்கிறார்கள் . அவர்கள் அனைவரும் நாராயணசாமியை தலைவரின் மாற்றுருவாக அவரை பார்த்ததால் அவர் சொல்வது அனைத்தும் தலைவரின் சொல் என பார்க்கப்பட்டிருக்கலாம் . வேட்பாளர் பெயர் அறிவிக்கும் சூழல்வரை நிலைமை சென்றதற்கு அதுதான் காரணமாக இருந்திருக்க வேண்டும் 

கண்டிராஜிக்கு எங்கோ தவறு என்கிற அவரது வக்கீல் மூளை எச்சரித்திருக்க வேண்டும் . அவர்  சட்டென தனக்கு இருந்த தொடர்பை பயன்படுத்தி பார்த்துவிட முடிவெடுத்தார் . காந்திராஜ் புதுவையின் கல்வி  அமைச்சராக இருந்த போது  சீதாராம் கேசரி மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் கல்வி அமைச்சர் பொரறுப்பிலிருந்தார் . அப்போது நிர்வாகரீதியாக நல்ல தொடர்பிருந்தது . அவர்களில் சிலர் இப்போதும் சீத்ராம் கேசரியின் உதவியாளர்களாக  அவருடன் இருப்பதை அறிந்ததும் , அந்த தொடர்பை  இப்போது பயன் படுத்தி பார்க்க முடிவு செய்தார்  . சீதாராம் கேசரியின்  தனி உதவியாளரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் அவரை இன்னாரனென அடையாளம் கண்டுகொண்டனர்  , மாநில தலைவர் தில்லியில் காத்திருக்கையில் அவரை சந்திக்காது எப்படி வேட்பாளர் பட்டியிலில் தெறிவு செய்யப்பட்டது  என்கிற கேள்விக்கு அவரிடம் திகைப்பை தவிர பதில்லை . அவரும் இதன் பின்னணியில் உள்ள சதியை உணர்ந்திருக்கலாம் . தான் அகில இந்திய தலைமையை உடனே சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் ,  தலைவரை அழைத்து வர சொன்னார்

தலைவர் வெஸ்டர்ன் கோர்ட்டில் தங்கி இருக்கிறார் . காந்திராஜ் ஊட்டமும் நடையுமாக தலைவரை அழைத்து வர . வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பனி அதற்குள்  நிறைவடைந்துவிட்டிருந்தது . சீதாராம் கேசரியை அவரது  தனியறையில் சந்திக்க ஏற்பாடாகி இருந்தது . அதற்குள் சீதாராம் கேசரி நிகழ்ந்ததை யூகித்து விட்டிருக்க வேண்டும் . தலைவர் தில்லியில் இருக்கும் செய்தி அவருக்கு சொல்லப்படவில்லை . காந்திராஜ் அதிர்ந்து போனார் . மேற்கொண்டு  சிக்கலை வளர்க்காமல் அடித்தல் திருத்தல் நிகழ்ந்து தலைவரின் பெயர் கட்டக்கடைசியாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது

அனைத்தையும் காந்திராஜ் தில்லியில் நிகழ்ந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, நான் கனத்த சிந்தனையுடன் அவரை நோக்கியபடி இருந்தேன் . அரசியலில் குப்புற தள்ளுவது அடிப்படை விளையாட்டில்  ஒன்று , அது குறித்து ஆதங்கப்படுவது தேவையற்றது . அடுத்து என்ன எனபதே இப்போதைக்கு என் முன் உள்ள கேள்வி . எதிர்வரும் காலம் நல்ல பொழுதாய் விடியப்போவதிகில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது . இரு முரண்பட்ட அரசியல் வழிமுறைகளை கொண்ட ஆளுமைகளின் மத்தியில் புதுவை அரசியல் சிக்குண்டு இருப்பது கவலை அளிப்பதாக இருந்தது

புதுவை வந்த தலைவரிடம் இது பற்றி பேச முயற்சித்தபோது என்னிடம் எதையும் சொல்ல மறுத்துமுதலில் தேர்தல் வேலைகளை சென்று கவனி பின்னர் விபரமாக சொல்கிறேன்"எனச் சொல்லிவிட்டார் . தில்லியில் நிகழ்ந்து விளையாட்டு என்னை ஆழமாக பாதித்திருந்தது . அதுவரை நான் முன்னெடுத்த அணைத்து முயற்சிகளுக்கும் இப்போது எந்த பயனும் இருப்பதாக நினைக்கவில்லை . ஒவ்வொரு தலைவரின் அரசியல் பாணி தனித்தவை . தலைவரின் பொருட்டு நான் எடுத்த முயற்சிகளை பிறிதொருவருக்கு பயன்படுத்த முடியாது

அரசியல் ஒற்றைப்படையான புரிதல்களினால் ஆனதல்ல. எதிர்நிற்ப்பவர்கள், நமது மாற்று கருத்தின் தரப்பு அவ்வளவே. அல்லது நம் கருத்தின் பிறிதொரு பகுதி , அவருடைய கருத்தும் நம்முடன் இணையுமென்றால் அது முழுமை பெறலாம். அவை உரையாடல்களின் வழியாக நிகழும் பரிவர்தனைகள். இருபுறமுள்ள இடைவெளிகளை அவை நிரப்பக்கூடியவை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்