https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 20 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -5 கனவிலொன்று

ஶ்ரீ:


அரிய நிகழ்வும்  வெறுமையும் -5

கனவிலொன்று 

பதிவு :  390 / தேதி :- 19 ஜனவரி  2018 


எனது கனவுகளில் ஒன்று நைமிசாரன்யம் மற்றும் புஷ்கரம் பார்ப்பது  . அதை கணக்கில் கொண்டு லக்னோவில் எனக்கு முன்பாக கிளம்பிய குழுவுடன் இணைவதாக திட்டம். நாங்கள் சென்னையிலிருந்து  கிளம்பி அவர்களுடன் இணைந்து கொள்வது என திட்டமிட்ட போதுதான்  சென்னை லக்னோவிற்கு நேரடியான விமான சேவை கிடையாது என அறிந்து கொள்ள நேர்ந்தது , அதனால் கல்கட்டா இறங்கி அங்கிருந்து பிறிதொரு விமானத்தில் லக்னோ சென்றடைவது என முடிவானது . அங்கிருந்து நைமிசாரனயம் 91 கி.மீ தூரத்தில் இருந்தது சுமார் மூன்று மணிநேரப்பயணம்

குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்லும் பயணத்தின் போது அனைத்து ஏற்பாடுகளும் சரிவர செய்திருக்க வேண்டும் ஒரு இடத்தில் சொதப்பினால் பெண்களையும் குழந்தையையும் வைத்துக்கவகொண்டு  அல்லாட முடியாது .ஆகவே ஒவ்வொன்றும் ஒருமுறைக்கு பல முறை ஒப்பு நோக்கி திட்டமிடப்பட்டது . கலகட்டாவிலிருந்து லக்னோ செல்லும் விமானம் நாங்கள் சென்னை கல்கத்தா பயணநேத்தின் மூன்று மணிநேர இடைவெளியில் புக் செய்தேன் . சென்னை கல்கத்தா  விமானம் புறப்பட ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் , கல்கத்தா லக்னோ விமானத்தை தவற விடும் வாய்ப்பு அதிகம் எனவே அதை கவனத்தில் எடுத்து மூன்று மணி நேர இடைவெளியில் கல்கத்தா லக்னோ விமானம் புக் செய்யப்பட்டிருந்தது . எங்களுக்கு கலகத்தா லக்னோ இணைப்பு விமானம் சரியானபடி தொடர்பில் இருக்க , அதிகாலை விமானம்தான் கிடைத்தது . எனவே முதல்நாள் இரவு சென்னை கிளப்பி விஜியின் சென்னை வீட்டில் தங்கி காலை அங்கிருந்த புறப்பட்டோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக