https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 8 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 292 * எதிர்பார்ப்பு *

ஶ்ரீ:பதிவு : 292 / 379 / தேதி :- 08 ஜனவரி  2018

* எதிர்பார்ப்பு  *


ஆளுமையின் நிழல்   ” - 38
கருதுகோளின் கோட்டோவியம் -03இது ஜனநாயகம். ஜனநாயகம் நிதானமானது. ஒவ்வொருவரின் நலனும் பிறர் நலனுடன் மோதுவது என்பதனால் ஒரு சிறு விஷயம்கூட ஒரு முரணியக்கத்தின் இறுதியில் ஒரு சமரசப்புள்ளியில் மட்டுமே இங்கே நிகழ முடியும். எதுவும் எளிதில் நிகழாதென்பதனால் எதுவுமே நிகழவில்லை என்ற பிரமையை அளிப்பது ஜனநாயகம். ஆனால் ஜனநாயகம் என்ற செயல்பாடு உள்ளவரை மக்களின் எண்ணங்கள் சமூகத்தையும் அரசையும் மாற்றியே தீரும் என்பதற்கான சான்றும் இந்தியாவே என்கிறார ஜெயமோகன் தனது இன்றைய காந்தி கட்டுரைத் தொகுப்பில் 

இன்றைய காந்தி வாசிக்க துவங்கியபோது எனக்குள் எழுந்த அலைமோதியபடி இருந்த எண்ணங்களும் , மனதில் கடந்த கால நிகழ்வுகள் நிழலாடுகையில் , இதுதான் இதுதான் அது  என குதூகலித்தது. அவை நிகழ்ந்தபோது என்னை சுற்றி நடந்தது இதுவாகத்தான் இருக்க முடியும் என அன்று கிடைக்காத புரிதல்களையும் அதனிலும் நுட்பாமான ஒன்று அங்கே நின்று கொண்டிருந்ததை , இப்போது உணரும் போது ஒரு திடுக்கிடல் நிகழ்கிறது . எப்படி அதை அன்று என்னால் கவனியாது விடபட்டது என்கிற ஆச்சர்யத்தை அடைகிறேன் .

நான் என் சமகால பல அரசியல் நிகழ்வுகளுக்கு பார்வையாளனாக இருந்ததையும்  , சில நானே முன்னின்று ஆற்றியவைகளையும் , அவற்றை பற்றிய நினைவுகள்  தனித்தனியான தத்தளிப்பாக ,கொந்தளிப்பான தருணங்களை ஏற்படுத்திய போது நான் அடைந்த மன மாற்றங்கள்  குமுறல்கள், எதிர்த்தவைகள் அல்லது வெறுப்புற்று முற்றாக அதிலிருந்து வெளியேறிய தருணங்கள் என பல கேள்விகளாக அவற்றை இப்போது என்னை நோக்கி எழுப்பிக் கொள்ளகிறேன் . அவை என் வாழ்வில் பிறராலும்  கேள்விகளாக சீண்டலகளாக எப்போதும் சிலர் என்னை நோக்கி எழுப்பியவை . அதில் நான் தோற்றேன் என்கிற சொல்லை என் வாயிலிருந்து கழற்ற முயற்சித்தார்கள் 

அதனால் அவர்கள் அடையும் நலம் என்ன என்பது இன்றுவரை புரிந்ததில்லை . நான் எடுத்த முயற்சிகள் அனைவரின் பொருட்டே . அதில் அவர்கள் நிலைநிறுத்த விழைவது அவர்களுக்கும் எதிரானதென அவர்கள் ஏன் அறிந்திருக்கவில்லை . நான் செய்தது சரியே என்பதை உள்ளத்தால் அறிந்திருந்தும் , அன்று வார்த்தைகளில் அவற்றை நிறுவ முடியாமையால் நான் ஆணவம் மிக்கவனாக , திறமையற்றவனாக பார்க்கப்படும் இழிவை எப்போதும் அடைந்திருக்கிறேன். ஆனால் அவை என் மனத்தில்  சலனங்களை ஏற்படுத்தினாலும் , அத என்னை கலங்க வைத்ததில்லை . இந்த அசையாமையை நான் எங்கிருந்து அடைந்தேன் ,என ஒவ்வொரு முறையும் எனக்குளே கூர்கிறேன் .

பல முரண்பட்ட எண்ணங்களை நாங்கள் விவாதித்து பகிர்ந்து கொண்டாலும் அரசியல் என வரும்போது இறுதியில் என் சொல் நிற்கும் . கடினப்பட்டோ அல்லது காரணத்திற்காகவோ அவன் நான்  சொல்வதை ஏற்றுக்கொள்வான் . ஆனால் தலைவர் புதுவையின் முதல்வரான பிறகு , ஒரு கடும் விவாதத்தில் நான் அவனிடம் தோல்வியுற்றேன்

அன்று அவன் சொன்ன கோட்பாடு ஒரு தேர்ந்த அரசியலாளனுடையது . அவன் மெல்ல அந்த ஞானத்தை தனது அரசியலிலிருந்து பெற்றான் என சொல்ல முடியாது , நேற்றுவரை எங்களுக்கான இணைப்பு அப்படியேதான் இருந்தது . இன்று தீடீரென அவன் பேசும் அந்த நுட்பத்தை எங்கிருந்து அடைந்தான் என வியக்கிறேன் . பதவியை பெறுபவரும் அவர் பக்கத்திலீடுப்பவர்களும் , அந்த பதவியின் பொறுப்பிற்குரியவராக ஒரு மாற்றம் விண்ணகத்து தெய்வங்கள் நிகழ்த்தினாலல்லது இதற்கு வாய்ப்பில்லை . எனக்குள் நிகழந்ததும் அதுவாகவே இருக்க முடியும் . ஜெயமோகனின் இன்றைய காந்திவாசிப்பு எனக்கு அதைத்தான் புரியவைத்தது

அன்று மாறன்  சொன்ன சில கோட்பாடுகள் எனக்குள் புதிய திருப்புகளை கொடுத்தது நிஜம். அரசியலலின் பிரிதொதொரு கோணத்தை பற்றிய சிந்தனையில் நான் மூழ்கிப்போனேன் . சில முக்கிய நிகழுவுகளின் பின்னணியில் நான் இருந்த நேரமது . யதார்த்த அரசியல் சரிநிலைகளை நான் புரிந்து கொண்டாலும் , அதன்படி நிற்க நான் விழையவில்லை . அடிப்படைகளை விட்டுக்கொடுத்து இருத்தியால் காரணங்களுக்கு நான் உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தை விட்டு உள்ளம் விம்மி வெளியேறினேன் . சில காலத்திற்குள்ளாக நான் கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருக்கையில்  அது நொறுங்கிப்போனது . கண்களுக்கு தெரியும் பக்கத்தில் நிற்கும் ஒன்று கைகளுக்கு கிடைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை .

தலைவர் புறப்பட்டவுடன் நான் எனது காரில் கிளம்ப  மாறன் என்னைத்தடுத்து பிறிதொரு வண்டியை காட்டி அதில் போகலாம் என்றான். அது விலை உயர்ந்த ஆடி கார் அனேகமாக அந்த ஆஜானுபாகு மனிதரின் காராக இருக்கலாம் . அதில் எதற்கு என்னை ஏறச்சொல்கிறான்? என காரைவிட்டு இறங்கி அந்த காரை நெருங்கியதும், கார் பின் இருக்கையில் அந்த ஆஜானுபாகுமான மனிதர் உட்கார்ந்தருந்தார் . என்னை பார்த்தும் நட்பாக சிரித்தபடிவாங்க தம்பிஎன்று அழைத்தபடி  தனது பக்கத்து இருக்கையை தொட்டு என்னை உட்காரசொன்னார்

அவர் என்னை தம்பி என அழைத்து ஒரு சிறிய ஒவ்வாமையை கொடுத்த போதும் , அதை முகத்தில் காட்டிக்கொள்ளாது, காரின் பின்கதவை அவரது ஓட்டுநர் பவ்யமாக திறந்ததும், நான் தயக்கத்துடன் ஏறி அதில் அமர்ந்தேன் . மாறன் எனது நண்பன் என்பதால் , நான் அவன் கூப்பிட்டதும் ஏதாவது காரணமிருக்கும் என்கிற எண்ணத்தில் அதில் இயல்பாக ஏறிக்கொண்டேன்


மாறன் அவரை கரூர் பாஸ்கர் , தலைவரின் அண்ணன் மாப்பிள்ளை என்றான் . அவர் என்னிடம் , என்னை கடந்த இரண்டு நாளாக கவனித்து வருவதாகவும் , பிரசார ஒருங்கமைப்பை நான் செறிவாக செய்வதாகவும் சொன்னார் . தான் இதை தலைவரிடம் முதல்நாள் பிரசாரத்திற்கு  கிளம்பும் முன்பாக , ஒருங்கிணைப்பு பற்றி பேசியதையும் அது இங்கு சரிவராது என முதல் நிலையிலேயே மறுத்துவிட்டார் . ஆனால் எந்த அறிவிப்புமின்றி நீங்கள் அதை இயல்பாக செய்தது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது , உங்களுக்கு நன்றி சொல்லவும் வேறு சில விஷயம் பேசவும் அழைத்தேன் . என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக