https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

புதுவை வெண்முரசு 11 ஆவது கூடுகை அழைப்பிதழ்


ஶ்ரீ:


பதிவு :  385 / தேதி :- 13 ஜனவரி  2018


அழைப்பிதழ்

புதுவை  வெண்முரசு 11 ஆவது  கூடுகை 




அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.

திரு. ஜெயமோகன் அவர்களின் நிகழ்காவியம் வெண்முரசின் முதற்நூல் முதற்கனலில்வேள்விமுகம்  துவங்கி ஒவ்வோர் அத்தியாயமாக முன்வைத்து மாதந்தோறும் நடைபெற்று வந்த புதுவை வெண்முரசுக்கூடுகை , அம்முதற்நூலின் இறுதி அத்தியாயமான வாழிருள் பகுதியை அடைந்ததன் பொருட்டும், கூடுகையின் ஓராண்டு நிறைவையொட்டியும் நிகழவிருக்கும் 11 ஆவது கூடுகை ஒரு சிறப்பமர்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அதில் பங்கேற்று சிறப்பிக்க வெண்முரசின் வியாசர் திரு.ஜெயமோகன் அவர்கள் வரமருளியுள்ளார்கள்.  

மேலும் இதில் கலந்துகொண்டு சிறப்பளிக்க திரு.ராஜகோபால் உள்ளிட்ட சென்னை வெண்முரசு நண்பர்கள் பலரும் விஜயம் செய்யவிருக்கிறார்கள்

கூடுதல் விசேஷமாக ஆர்வமிக்க ஓர் வெண்முரசு வாசகராக சட்டமன்ற உறுப்பினரும்,புதுச்சேரி முதலமைச்சரின் பாராளுமன்றச் செயலருமான திரு.லக்ஷ்மிநாராயணன் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார்.

அவ்வரிய தருணத்தில் முழுமுதற்கனலின் மீதான தத்தமது பார்வைகளை புதுவை நண்பர்கள் பலரும் முன்வைக்கவிருக்கிறார்கள். இவ்வுயர்சிறந்த நிகழ்வில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும் வெண்முரசு குறித்த ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

இந்த மாதத்திற்கான கூடுகையில்      
( ஜனவரி    2018 )
"வெண்முரசு  முதற்கனல் - வாழிருள்    "
( பகுதிகள் 49 & 50 ) 

கூடுகை - 11


நாள்:-  சனிக்கிழமை  (20-01-2018) மாலை 4:30 மணி முதல் 8:30 மணிவரை நடைபெறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்