https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 30 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 296 * உள்ளுரையும் புரிதலின் விசை *

ஶ்ரீ:

பதிவு : 296 / 401 / தேதி :- 29 பிப்ரவரி   2018.


* உள்ளுரையும் புரிதலின் விசை *ஆளுமையின் நிழல்   ” - 42
கருதுகோளின் கோட்டோவியம் -03
அரசியலை வெளியே தெரியும் கோஷங்களை வைத்து புரிந்துகொள்ளாமலிருப்பதற்கான பயிற்சி எனக்கிருக்கிறது. முக்கியமான கேரள இதழாளர்களுடனான சந்திப்புகள் மூலம் என்னுடைய அரசியல் நோக்கு உருவாகி வந்தது. மிக ஆழமான மனக்குழப்பத்தில் இருந்த நாட்கள் அவை. பல இதழாளர்கள் மோசமான அவநம்பிக்கையாளர்கள். கேலியே அவர்களின் ஒரே வெளிப்பாட்டுமுறை. மறுபக்கம் நான் கேரள சிந்தனையாளர்களான ஆனந்த், .வி.விஜயன் இருவரையும் வாசித்துக்கொண்டிருந்தேன். அவர்களும் டெல்லியை மையமாக்கியவர்கள். அவர்களும் உள்ளதிகார ஓட்டத்தை அடுத்து அறிந்தவர்கள். ஆனால் ஆழமான நம்பிக்கையுடன் அவர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள். இருவருமே முன்னாள் இடதுசாரிகள். பின்னர் காந்தியவாதிகளானார்கள். ‘நவகாந்தியர்என்று சொல்லலாம். சமரசமே இல்லாத அரசியல் விமரிசகர்களாக, கோட்பாட்டாளர்களாக எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களை இயக்கும் நம்பிக்கை என்ன?”  என கேட்கிறார் ஜெயமோகன் தனது சாட்சி மொழி கட்டுரைத் தொகுப்பில்

எனக்கான அடையாளமாக , எனது தனித்திறமைகளாக பேசப்பட்ட பல விஷயங்களுக்கு காரணியாக இருந்த சம்பவங்கள் என்னிடம் அனைத்தும் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது . பல , நான் தொட்டதினால் என்னிடம் ஒட்டிக்கொண்டவை . அரசியலில்  மட்டும் என்றல்ல, வாழ்வியலில் கூட வாய்ப்புகள் அனைவருக்கும் இந்தப்புள்ளியிலிருந்தான் துவங்குகிறது என நினைக்கிறேன் . ஆனால் அவை அவரவர் விதிமுகூர்த்தத்தின் படி. மனம் உற்சாகமாக இருக்கையில் அது பறந்து ஒன்றை ஒன்று தொட்டு , ஒவ்வொன்றுக்கும் என அடுத்தடுத்த வாசலை திறந்து வைப்பது . அதையே இப்போதும் பல வருட கழித்து பிறிதொன்றிற்காக நினைக்கிறேன் . எதற்கோ இவ்வாறெல்லாம் தயாரிக்கப்படுருகிறேன் என்றுஅரசியலில் தீவிரமாக இருந்த போது முன்னெடுத்தவைகள் , அவற்றிலிருந்து பலன் விளைவதற்குள்ளாக பிறிதொன்றில் பின் அங்கிருந்து வேறொன்றில் என பயணப்பட்டபடி இருந்தபோது , அது வளர்ச்சியை நோக்கியது என்கிற அடைப்பிற்குள் வைத்துக்கொள்வதுண்டு . ஆனால் அனைத்தின் இறுதியிலும் , மிஞ்சிய வெறுமையும் அர்த்தமற்ற தன்மையை தாண்டி , இங்கிருந்து பார்க்கையில் அவை மீளவும் உயிர் பெறுகின்ற விந்தையை பார்க்கிறேன்  . இப்போது அவை அனுபவங்கள் . அவை பிறிதொரு விஷயத்திற்க்காக தயார் செய்யப்பட்டவை என. அனைத்தயும் நாம் எண்ணாதொரு  தருணத்தில் அவை புரிதலை அடைகிறது , அதற்கான விசையை மாபெரும் மானுட அறத்தின் பொருட்டு விண்ணகத்து தெய்வங்கள் நம்முள்ளே பொதிந்து அனுப்புகின்றன போலும் 

நெல்லை கண்ணன் பிரச்சார ஒருங்கிணைப்பு. அதை கையிலெடுத்துக்கொண்டதும்  , என்னால் தலைவரின் பிரச்சாரத்திட்டத்தை  செறிவாக நடத்த முடிந்ததுடன் , புதிதாக கண்டடையப்பட்ட இளம் தலைவர்களை தொடர்புறுத்தலில் இணைக்கும்  பணியைச் செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது . முழு திட்டமும் அவர்கள் தலைமையில் அல்லது மேறபார்வையில் ஒருங்கியதால் , நான் நினைத்தபடி அவர்களை சிதையாத முழு ஆளுமைகளாக வென்றெடுக்க முடிந்தது.

நெல்லை கண்ணனின் திருநெல்வேலி தமிழ் மற்றும் கிராமத்து பாணி பேசுமொழி , பிரச்சாரத்தை குடிமை சமூகத்தினுள்ளே  மிக நுண்மையாக செலுத்தியது . பிற கட்சிகளின் தேர்த்தல் பிரச்சாரத்தை விட அவை வெகுவாக மாறுபட்டிருப்தை அனைவரும் சொல்லத்துவங்கினர் . புதிய உற்சாகம் பாய்ச்சப்பட்டு அந்ததந்த ஊர் புதிய தலைவர்கள் முன்னெடுக்க புதிதாக தேர்ந்த்டுக்கப்பட்ட தலைவர்கள் அனைவரும் தலைமை மற்றும் முன்னிலை வகித்தார்கள் . உள்ளூரில் அதை செய்து கொடுக்கையில் இளைஞர் அமைப்பிற்கும் அவர்களுக்குமான நெருக்கம் வலுவானது . முழு பயண திட்டமும் பதினான்கு கிராம பகுதிகளை மையப்படுத்தி எந்த சிறு கிராமமும் விடுபட்டு விடாது பார்த்துக்கொள்ளப்பட்டது

பிறிதொரு குழு  ஆட்டோ பிரச்சாரத்தை மையப்படுத்தியது . அதன் கீழ் நூறு ஆட்டோக்கள் இருந்தன நான்கு பிரிவாக காலைமுதல் மாலை 5:00 மணிவரை ஒவ்வொரு தெரு முனையிலும் 15 நிமிடம் ஒலிக்க கூடிய நெல்லைக்கண்ணனின் செறிவான பேச்சு ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்ப பட்டது . அது முறையாக நிகழ்கிறது எனபதை எப்போதும் ஒப்புநோக்கும் குழு அதை கண்காணித்தபடியாக இருந்தது . அத்துடன் தலைவர் பிரச்சார பயணமும் எங்களால் ஒருங்கிணைக்கப்பட்டதால் . கடந்த சில வருடங்களாக சிறு சிறு கூடுகையின் வழியாக நான் கண்டடைந்த புதிய இளம் தலைவர்கள் அனைவருக்கும் முழு பக்களிப்பை செய்யும் படியான வாய்ப்பு கிடைத்தது

அவர்களுடனான எனது இருபதுநாள் பயணம் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொடுத்தது .நெல்லை கண்ணனுடைய செறிவான தமிழ் பேச்சு பதியப்பட்டு எனது பேச்சுக் குறிப்பில் எப்போதும் இருந்துகொண்டிருந்தது . கரூர் பாஸ்கருக்கு நான் தேர்தல் பணியாற்றிய விதம் மிகவும் ரசிக்கப்பட்டதால் , அவருடனான எனது நட்பு ஆழ்ந்து பலப்பட்டது.

தேர்தல் வேலைகள் முடிவிற்கு வந்து ஓட்டு எண்ணிக்கை வாய்ப்பு எனக்கு நடத்துனர் மேஜை இது என்ன லாஜிக் என்றே எனக்கு இதுவரை புரியவில்லை . வோட்டு எண்ணிக்கை துவங்கிய போதே முடிவு என்ன என தெரிந்து போனது  நாங்கள் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்று  . தொகுதி ரீதியில் பலர் உள்ளே வந்து அந்தஅந்த தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான போது , அவர்கள் அந்த இடத்திலிருந்து வெளியாயினர்

ஒட்டு மொத்த  பாராளுமன்ற தொகுதி பார்வையாளர்கள் சுமார் என்பத்தைந்து பேர் இரவு நெடுநேரமாகியும் முடிவு தெரியாததால் வாக்கு என்னுமிடத்திலேயே இருக்க வேண்டியதாகியது . நாராயணசாமி திடீரென வாக்கு எண்ணும்  இடத்திற்கு வந்தார் . நான் அவருடன் அனைத்து பூத்துகளுக்கும் சென்றுவந்தேன் . உள்ளே இருப்பவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்படவில்லை . இவ்வளவு நேரமாகும் கணக்கிடாததால் என்ன செய்வது என நான் நாராநணசாமியிடம் கேட்டபோதுதலைவரிடம் கேளுங்கள்என சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக