ஶ்ரீ:
அரிய நிகழ்வும் வெறுமையும் -1
பதிவு : 387 / தேதி :- 15 ஜனவரி 2018
வாழ்வின் சில நிகழ்வுகளை நாம் திட்டமிடுவதில்லை அந்த தருணங்கள் நம் மீது வலிந்து வந்தமர்கின்றன , வேளுக்குடி ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணன் ஸ்வாமிகளின் மார்கழி மகோற்சவம் அப்படிப்பட்ட ஒன்று .சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்வாமிகளிடம் நான் திருப்பாவை உபன்யாசத்திகிற்கு புதுவைக்கு வர வேண்டும் என்கிற விண்ணப்பம் வைக்கும்போது , அவர் சிரித்தபடி புதுவைக்கா? என கேட்டு தன்னால் வரமுடியாத காரணத்தைக் கூட அவர் சொல்லவில்லை .
அந்த சந்தர்பத்தில் அது மிகை விண்ணப்பம் என்பதை அறிந்தே நான் முன்வைத்தால் அவர் வர இயலாமைக்கு காரணம் அவர் சொல்லாமலேயே எனக்கு தெரிந்தது . இருந்தும் நான் கேட்டேன் என இருக்கட்டும் , ஒருநாள் புதுவைக்கு வரும் சந்தர்ப்பம் வாய்க்கும், என அவரிடம் சொன்னேன் . அவர் புன்னகையுடன் அதை கடந்து சென்றார் . சில மாதங்களுக்கு முன்பாக எனது நண்பர் பார்த்தசாரதி என்னிடம் வேளுக்குடி ஸ்வாமி மார்கழி திருப்பாவை உபன்யாசத்திற்காக புதுவைக்கு வரும் வாய்ப்பு அதிகம் என சொன்னபோதே, நான் அதற்கான தருணம் வந்துவிட்டதாக நினைத்தேன் . ஆனால் கடந்து சென்ற சில வருடங்களில் நடந்தவைகள் , எனது உற்சாகத்தை மழுங்கடித்திருந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக