https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 3 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 286 * கற்றலை கடப்பது *

ஶ்ரீ:பதிவு : 286 / 373 / தேதி :- 02 ஜனவரி  2018* கற்றலை கடப்பது *
ஆளுமையின் நிழல்   ” - 32
கருதுகோளின் கோட்டோவியம் -03நான் பிறவியில் இருந்து பேசுவதில் தடையுள்ளவன் , அதற்கு  உளவியல் அல்லது மரபணு சிக்கலாக இருக்கலாம். எனது தாய் வழி பாட்டனார் , எனது தாய்மாமன்களில் இருவருக்கு இதே பிரச்சனையுண்டு . என் தங்கைகளில இருவர்கூட வேகமாக பேச முற்படும்போது திக்குவதை கவனித்திருகிறேன் . ஆனால் எவரும் என்னளவிற்கு பாதிப்பிற்கு உள்ளானார்கள் இல்லை . நான் உளவியல் ரீதியாக  அச்சமும் கூச்சமும் தயக்கமுமாக என்னுள் எப்போதும் தளும்பியபடி இருந்ததால் , என்னை எங்கும் நான் முன்னிறுத்திக் கொண்டதில்லை

பள்ளி வகுப்பறையின் கடைசி இருட்டின் மூலை பென்ச், எப்போதும் எனது இடமாக எல்லா வகுப்பிலும் இருந்திருக்கிறது . பாடம் எடுக்கும் வாத்தியார் எதையாவது கேள்வியாக கேட்டுத் தொலைத்தால், நான் பதில் சொல்வதற்குபடும் அவஸ்தை அனைவருக்கும் நகைச்சுவைக் காட்சிகளாக விரியத்துவங்கி விடும் . சில ஆசியர்கள் பரிதாபப்பட்டு என்னை உட்காரச் சொல்லிவிடுவர்கள் , சிலருக்கு நான் படும் அவஸ்தையை முழுமையாக பார்ப்பதில் ஒரு ஆனந்தம். ஒவ்வொருமுறை நான் அவமானப்பபட்டு சகஜநிலைக்கு திரும்ப பலமணிநேரமாகி விடும். நாட்கணக்கில் உள்ளம் குமைந்துதிருந்ததும் உண்டு.

யாராவது எதையாவது கேட்டு இழவெடுக்கப் போகிறார்கள் என்கிற எண்ணம் எப்போதும் அச்சமாக மனதிலும் வயிற்றிலும் ஒரு உணரவென எப்போதும் தங்கி இருந்திருக்கின்றன . அதனாலேயே  வாழ்வின் இளமையை தொலைத்து இயற்கையான பயமோ , பரவசமோ , அவசரமோ என ஏதோ ஒரு உணர்வு பெருகும்போதெல்லாம் இப்பவும் நான் பேசுவதற்கு திணறத்தான் செய்கிறேன்

என்னை போன்ற குறைபாடு உடையவர்கள்  அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்பது பொது எண்ணம். அரசியல்  பேசுவதையே தொழிலாகக்கொண்ட துறை . நான் என் இயல்பிற்கு பொருந்தா துறைக்கு வந்துவிட்டதாக உணராத தருணங்கள் இல்லை. இயற்கையிலேயே சங்கோஜி சண்முகம் . இவரால் எப்படி தலைமை பெறுப்பை வகிக்க முடிகிறது , என அப்போதெல்லாம் நான் பலமுறை ஆச்சரியப்பட்டதுண்டு . அதே சமயம் என்னை உத்வேகம் கொள்ள வைத்ததும் அதுவே. நான் தலைவரின் சுபாவத்தையும் அவரது வெற்றிகளையும் எண்ணி , என்னை ஆற்றுப்படுத்திக் கொண்டதுண்டு. இன்றும் ஒவ்வொன்றிலிருந்தும் நான் என்னை வென்றெடுத்து வெளிப்படுவது சவால்மிக்கதே.

தில்லியில் வேட்பாளர் தெறிவுசெய்யப்படுவது நிகழ்ந்து கொண்டிருந்ததால் அகில இந்திய தலைமை எங்கு யாரை எப்போது சந்திக்கிறார் என்பது திட்டமிட இயலாது ஒன்றுடன் ஒன்று மோதியபடி இருந்தது . ஒரு சந்திப்பு நிகழ்ந்து முடியும் தருவாயில் பிறிதொரு சந்திப்பு முடிவு செய்ய படுகிறது . முன்திட்டமிடலுக்கு உகந்து சூழல் இல்லாததால்  , யாருக்கு எப்போது அழைப்பு வரும் என்பது  நிர்ணயமாகவில்லை. அதனால் அனைத்து மாநில தலைவர்களையும் ஒருவார காலத்திற்கு தலைநகர் தில்லியிலேயே தங்கி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள் . யார் எந்த முறையில் எப்போது அழைக்கப்படுவார் என் யாராலும் உறுதியாக சொல்லமுடியாததால் தலைவர் தனது வழக்கமான அலுவலக  தொடர்புகளை இதில் பயன்படுத்த முடியவில்லை .

தலைவர் தன்னை வேட்பாளராக முன்னிறுத்த திட்டமிட்டிருப்பதை யாருக்கும்  தெரிந்திருக்கவில்லை . புதுவையின் முக்கிய தலைவர்களுக்கு ஒருவேளை  அது யூகமாக தெரிந்திருக்கலாம். தலைவர் அதை இறுதிகட்டத்தின் போது முன்வைக்க திட்டமிட்டிருந்தார். எடுத்த முதலே தன்னை சொல்லிக்கொள்வதில் அவருக்க இருந்த தயக்கத்தால்  , முடிவு செய்யப்படுகிற நேரம் நெருங்கியபிறகு பலவித ஆலோசனைக்கு பின் கொள்ளகைமுடிவு எடுக்கப்பட்ட பிறகே வேட்பாளர்களின் பெயர் பரிசீலிக்கப்படும். அது ஒரு நீண்ட பயணம் போல அந்தப்பயணத்தின் மத்தியில் தன்னை முன்வைக்கும் வழி திறந்து கொள்ள அவர் காத்திருந்தார்

தேர்தலுக்கான சீட்டு வேண்டி தலைவர் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் ஏற்கனவே மனதளவில் சங்கடத்தில் உழன்று கொண்டிருந்தவருக்கு அந்த தடையையும் கடக்க நாராயணசாமியின் சொன்னதை கேட்கும்படி நேர்ந்தது . நாராயணசாமி அப்போது அகில இந்திய செயலராகப் பொறுப்பில் இருந்தத்தால்தான் சீத்தாராம் கேசரியை சந்திக்க நேரம் வாங்கித்தருவதாக அவர் சொன்னதை யதார்த்தமென அவர் நினைத்திருந்தார்.

நேரம் கடந்து கொண்டிருக்க , கட்சி அலுவலகத்திலிருந்து  தலைவருக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை  , தலைவர் நிலையழிந்து  காணப்பட்டதால் , அடுத்து என்ன செய்யவேண்டும் என்கிற முடிவிற்கு காந்திராஜ் தள்ளப்பட்டார் . தான் சென்று என்ன நிகழ்கிறது என பார்த்து வருவதாக தலைவரிடம் சொல்லிச் சென்றவருக்கு , தலைமையகத்தில் பெரும் அதிர்ச்சி காத்திருந்ததுமாநில தலைவர்களுக்கான பேட்டி முடிந்து முதல் நிலை வேட்பாளருக்கான பட்டியல் வெளியிடப்படும் தயார் நிலையில் இருப்பதைதான் அவரால் அங்கு அறிந்துகொள்ள முடிந்தது . முதல் பட்டியலில்  இடம்பெற்றுள்ள வேட்பாளர்களின் பெயர்களை அறிந்து கொண்டால் அடுத்து நிகழ விருப்பத்தை யூகிக்கலாம் என்கிற அடிப்படையில் பார்க்கும் போதும், அந்த பட்டியலில்  புதுவைக்கும் சேர்த்தே வேட்பாளர்  அறிவிக்கப்பட இருப்பதை அறிய நேர்ந்து, அதிர்ந்து , இப்படியும் நிகழுமா என நம்பமுடியாது செயலிழந்தார்

அரசியல் களத்தில் நாகரீகத்திற்கு உட்பட்டு விளையாடுவதே ஒரு கலை என சொல்லிக்கொடுக்கப்பட்டு கற்று வளர்ந்து அதை ஆற்றி ஓய்ந்து வயது முதிர்ந்த ஒருவருக்கு , காலம் தனது தாட்சண்யமில்லாத புதுப்பாடத்தை துவங்கியிருந்தது. ஒரு வயதிற்கு மேல் கற்பது என்பது நடவாது . கற்பதற்கும் கற்றுக்கொள்வதற்குமான ஊடுபாவுகளினாலானது இந்த இடைவெளி . இனி இந்த குருவி தடையற பறக்க இயலாது. நிற்பதும்அமர்வதும்கடப்பதும்கூட பறத்தல் பயணத்தின் ஒரு பகுதியேஎன இதையும் தன் வாழ்முறை கற்றலாக தலைவரும் அணுகும்  காலம் என, ஒன்று வந்ததுதான் , ஊழ்யெனப்படுவது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக