https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 19 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -4 யாத்திரை திட்டம்

ஶ்ரீ:


அரிய நிகழ்வும்  வெறுமையும் -4

யாத்திரை திட்டம் 


பதிவு :  389 / தேதி :- 18 ஜனவரி  2018 நிவாஸ் வருவாதாக சொன்னான் அவனது ஈடுபாடும் முன்பே தெரிந்ததுதான் ஆனாலும் அவன் இதன் பொருட்டு  வருவதக சொன்னது  ஆச்சர்யமாக இருந்தது . அவன் வரும்வரை காத்திருந்தேன் . ஜீயர் அதற்குள் தனது யாத்திரையை துவங்கி இருந்தார் . நான் அவருடன் சென்று இணைந்து கொள்ளும் நினைத்திருந்தேன்  . இந்த முறை வாய்ப்பை இழக்க விரும்பவில்லை .

நிவாஸ் இந்திய வந்ததும் நன் அம்மா ,மனைவி , நிவாஸ் விஜி இரண்டு வயது குழைந்தையாக சிரிஷ்டாவும் வந்தாள் . அது ஒரு சாகச பயணம்போல இருந்தது . அனைவருக்கும் பாட்னாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் டிக்கெட் போட்டிருந்தேன் . சென்னை திரும்ப ஜீயர் புக் செய்திருந்த அதே ரயிலில் சீட் போட்டேன் . திரும்பி வருகையில் நான் நினைத்ததை பேச எனக்கொரு வாய்ப்பு கிடைக்கலாம் என நினைத்தேன் .

எனது வேலை காரணமாக சென்னையிலிருந்து கிளம்பும் தேதி உறுதியாகவில்லை . நாங்கள் கிளம்பும் தேதி முடிவான பிறகுதான் , அவர்களுடன் சென்று இணையும் இடம் பற்றிய முடிவெடுக்க முடியும் . நான் நிவாஸிறகாக காத்திருந்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை . நிவாஸ் வந்த பிறகு , யாத்திரை சென்ற குழுவுடன் தொடர்பு கொண்டு இப்போதுள்ள இடம் நாங்கள் அலகாபாத் சென்றடைய உத்தேசித்துள்ள தேதி இரண்டையும் பொருத்தி பயண தேதி முடிவு செய்யப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக