https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 31 ஜனவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 14 காட்டுப்பாதை

ஶ்ரீ:


அரிய நிகழ்வும்  வெறுமையும் - 14

காட்டுப்பாதை 

பதிவு :  402 / தேதி :- 30 ஜனவரி  2018

நேற்று இரவு முதல் கடுகடுத்தபடி இருந்த அம்மா நிம்மதியாக ஒரு அறையில் உறங்கிக்கொண்டிருந்தார்கள் . மதியம் 1:00 மணிக்கு மதிய உணவு சொல்லிவிட்டு அந்த நாங்கள் ரெஸ்டாரெண்டில் அமைதியாக பேசிக்கொண்டிருந்தோம் . மாலை என்ன செய்வது என்பது இன்னும் முடிவாகவில்லை . அந்த விடுதிக்கு வந்தது முதல் பயணத்திலிருந்த யாத்திரை குழுவை தொடர்பு கொண்டே இருந்தேன் . எங்கோ காட்டுப்பகுதிக்கு இருப்பதால் தொடர்பு கிடைக்கவில்லை என்பது எனக்கு தொடர்  நிலையிழிதலைக் கொடுத்தது . அதிலிருந்து மனதை திருப்ப அந்த விடுதியின் வனப்பு , உணவின் சுவை , முற்றிலும் புதிய முகங்கள் மற்றும்  ரெஸ்டாரெண்டில் நிர்வாகம் வடிவமைத்த விதம் போன்றவற்றில் எனது  கவனத்தை குவிக்க முயன்றேன்

மதிய உணவிற்கு பிறகே யாத்திரை குழுவுடன் தொடர்பு கொள்ள முடிந்ததுஎங்களுக்கு முன்பு கிளம்பிய குழு எங்கிருக்கிறது எனபதை அறிந்து கொண்டோம் . அவர்களை நாங்கள் தொடர்புகொண்ட போது , புஷ்காரத்தில் இருந்தார்கள் , அன்று இரவு சித்ரகூடம் சென்று சேர்வதாக செய்தி கிடைத்தது . புஷ்கரத்தில் திட்டமிட்டபடி சில ஏற்பாடுகளை அவர்களால் செய்ய இயலாமல் போனதாலும் பயண திட்டம் மாறிப்போனது. நைமிசாரனயத்திலிருந்து புஷ்கரத்திற்கும் பின் அங்கிருந்து சித்திரகூடம் நோக்கி பயணபடவிருப்பதை அறிந்தும்,  ஒரு  திடுக்கிடலை கொடுத்தது . அது யாத்திரை பாதையை முற்றாக மாற்றி அமைப்பது .

நாங்கள் லக்னோவிற்கு  திட்டமிட்டு வந்தது அங்கிருந்து நைமிசாரண்யத்தில் இருக்கும் யாத்திரை குழுவுடன் சென்று இணைந்து கொள்வதற்காக . காரணம் நைமிசாரண்யம் லக்னோவிலிருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் இருந்தது . 2:30 மணி நேரப்பயணம் என்பதால்தான் . அவர்கள் அங்கு இரவுதங்குவதாக திட்டமிட்டிருந்தார்கள் . நாங்கள் லக்னோவில் தங்கி இரவு பயணத்தி தவிர்த்து மறுநாள் அதிகாலை நைமிசாரண்யம் சென்று அவர்களுடன் இணைந்துகொள்வதாக இருந்தது  அது   நாங்களிருக்கும்  இடத்திலருந்து வடமேற்காக பயணிப்பது. அந்த  பாதை முழுவதுமாக அடைந்த காட்டுப்பகுதி என்பதால் இரவு  பயணம் ஆபத்தானது . என்ன செய்வது என முடிவு செய்ய இயலாது மூளை முடிச்சிட்டுக் கொண்டது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக