https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 15 சில விடுபடல்கள்

ஶ்ரீ:



அரிய நிகழ்வும்  வெறுமையும் - 15

சில விடுபடல்கள் 



பதிவு :  403 / தேதி :- 01 பிப்ரவரி   2018








எங்களுக்குமுன் சென்ற யாத்திரை குழு சில நடைமுறை இடர்களை தவிற்க,  தனது பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ள கொண்டது. தில்லி.இருந்து நைமிசாரன்யம் சென்று இரவு தங்கி , பின்னர் புஷ்கரம் நோக்கி செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. தில்லியிலிருந்து புஷ்காரம் , நைமிசாரண்யம் இரண்டும் ஏறக்குறைய 6:30 மணிநேரப் பயணம் , ஆனால் இரண்டும் வெவ்வேறு திசையில் இருந்ததாலும், வேறு ஏதோ சிக்கல் அவர்கள் நைமிசான்யம் அடைந்து பார்க்க வேண்டியதை முடித்துக்கொண்டு அங்கு தங்காது புஷ்காரம்  செல்வதாக திட்டமிட்டு விட்டார்கள்

புஷ்கரம்  நாங்கள் இருக்கும் லக்னோவிலிருந்து  சுமார் 700 கி.மீ தூரம் ஆக்ரா சென்று பின் அங்கிருந்து புஷ்காரம் செல்லவேண்டும் . 12:00 மணி நேரப்பயணம் . இப்போதே மணி பின் மதியம் 2:00 மணி  ஆகியிருந்தது இப்போது கிளம்பினாலும் ,நடு நிசி கடந்து 2:00 மணிக்கு மேல்தான் சென்றடைய முடியும் , பெண்களையும் குழந்தையும் வைத்துக்கொண்டு அதைப்போல ஒன்றை முயற்சிப்பது பைத்தியக்காரத்தனமாக பட்டது .

திட்டம் மாறுபட்டு போனதால் அனைத்தும் குழப்பமாகி, இப்போது நாங்கள் எங்களுக்கான அடுத்த சத்தியம் பற்றிய திட்டமிட்டாக வேண்டும் . யாத்திரை குழு இரவு புஷ்காரத்தில் தங்கி பின்னர் அங்கிருந்து சித்ரகூடம் செல்கிறார்கள் . அது வடக்கிலிருந்து தெற்கை நோக்கிய பயணம்.  புஷ்காரத்திலிருந்து  800 கி.மீ தூரத்தில் இருந்தது . திரும்ப ஆக்ரா, கான்பூர் வந்து சித்திரகூடம் செல்வதாக இருந்தால் நாங்கள் கான்பூரில் சென்று அவர்களுடன் இணைந்து கொள்ளலாம், ஆனால் அவர்கள் மாற்று வழியாக தொடர்ந்து பல்வேறு இடங்களை பார்த்தப்படி செல்வதால் , கோட்டா ஜான்சி வழியாக மாற்றுப்பாதையில் பயணப்பட்டு நடு நிசி சித்ரகூடம் சென்று அடைகிறார்கள் . இப்போது எங்களுக்கான ஒரே வாய்ப்பு அவர்களை சித்ரகூடத்தில்  சென்று பிடிப்பதுதான் . அலகாபாத் லக்னோவிலிருந்து 200 கி.மீ உள்ளது முழுவதும் நகர் சார்ந்த பகுதி என்பதால் பயணம் 6:00 மணி நேரம் மேலும் நீடிக்கும். என்ன முடிவெடுப்பது என புரியாமல் திகைத்திருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...