https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 14 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 27 குற்றவுணர்வு

ஶ்ரீ:


அரிய நிகழ்வும்  வெறுமையும் - 27

குற்றவுணர்வு 




பதிவு :  415 / தேதி :- 13 பிப்ரவரி   2018







ஓட்டுநர் செய்ததுதான்  மிக சரியானது . வண்டியிலருந்து நான் கீழே இறங்க நினைத்தது எப்பேரபட்டப் பைத்தியக்காரத்தனம் என நினைத்து நினைத்து மாய்ந்து போனேன் . அந்தக்  கூட்டம் எதையும் செய்யக்கூடியதுவண்டியையை மறிப்பதற்கு ஆவேசமாக ஓடிவந்த  காட்சி நிழற்படம் போல என்  முன்பாக அசையாது நின்றிருந்தது. ஓட்டுனரின் சமயோஜித செயலுக்கான என் பாராட்டை ஏற்கும் மனநிலையில் இல்லாமல் ஏன் அவர் எதற்கோ அஞ்சியது போல பரபரப்பாக இயங்குகிறார் என புரியாது அவரைப்பார்த்தேன்.

எனக்கு உள்ளுக்குளே ஒரு விபத்தை நிகழ்த்திவிட்டு தப்பி அங்கிருந்து ஓடி வந்ததின் குற்ற உணர்வு பெரிதாக எழ , சிறுவனுக்கு ஒன்றும் நேரவில்லை , என்பதை மனப்பதிவு தெளிவாக சொன்னாலும் ஒரு உறுத்தல் போல அது நின்று கொண்டிருந்தது . விபத்து நடந்த இடத்திலிருந்து வெகு தூரத்திற்கு வந்த பின்னரும், எதற்கு இன்னும் வேகம் குறைக்காது ஆக்சிலேட்டரை இந்த அழுத்து அழுத்துகிறார் என புரியாமல்நான் அவரிடம் மெல்லமாக செல்லலாமே என்றதற்கு , அவர் உரத்த குரலில் நமக்கு காலமில்லை இந்த ஊரை தாண்டி உத்திர பிரதேச எல்லையை தொடும்வரை நமக்கு பாதுகாப்பில்லை என்று சொன்னது , எனக்கு மிகவும் கவலையளிப்பதாக இருந்தது . ஏதோ ஒரு வகையில் இன்னமும் நாங்கள் சிக்கலிலிருந்து வெளிவரவில்லை என்கிற புரிதலால் மனவழுத்தம் எகிறியது
மார்பன் ஒலியை காதில் கேட்க துவங்கினேன் . யாரோ காரில் எங்களை துரத்திக்கொண்டு வருதாகவெல்லாம் கற்பனை எழத் துவங்கிவிட்டது .

நான் மத்திய பிரதேசத்தை பற்றி நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் , அவை எல்லாம் முற்றாக இப்போது எழுந்து பின்னால் ஓடிவருவதாக கற்பனையில் தெரிய , வயிற்றில் பந்தாக ஏதோ  உருண்டு  கலவரமாக உணர்ந்தேன்தெளிவாக சிந்திக்கும் திறனை முற்றிலும் இழந்து , அமைதியற்றுப்போனேன் . ஓட்டுநர் சொன்ன உதிர்ப்பிரதேசத்தை பற்றியும் எனக்கு நல்ல எண்ணமில்லை . பொதுவாக வடஇந்திய மாநிலங்கள் சட்ட ஒழுங்கு எப்போதும் கவலையளிப்பது . இதற்கு மத்தியில் எப்படியும் பிடித்துவிட முடியும் என நினைத்த யாத்திரைக்குழுவை பிடிக்க முடியாது என்கிற கவலை இப்போது பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.

ஓட்டுநர் ஏதோ விபரீதமாக அவதானிக்கிறார் என்பதை என்னால் உணரமுடிந்தாலும் , அது என்னவாக இருக்கும் என்கிற என் கற்பனைதான் என்னை மிகவும் கவலைகொள்ள செய்தது . மனதிற்குள் எந்த சிக்கல் மேற்கொண்டு நிகழாது இருக்க வேண்டும் என பிராத்திக்க துவங்கினேன் .

ஓட்டுநர் நினைத்த அந்த விபரிதம் அப்போது  நிகழ்ந்தது . சரியாக மத்திய பிரதேச எல்லையில் காவல்துறை வண்டியால் நாங்கள் மறிக்கப்பட்டவுடன் , எல்லா யூகங்களும் ஒரு முடிவிற்கு வந்தது . உடல் முழுவதுமாக சூடாக உணர்ந்தேன் . இதை அஞ்சியே ஓட்டுனர் வண்டியை விரட்டியிருக்கிறார் என்கிற உண்மை புரிந்தது . விபத்து நடந்து இடமோ வந்த பயணப்பதையோ மிகவும் பின்தங்கிய கிராமப்பகுதி , ஆனால் தொலைத்தொடர்பு சாதனதால் நாங்கள் மிகத்துல்லியமா அடையாளம் சொல்லப்பட்டிருக்கிறோம்  என்பது  மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது . அடுத்து என்ன என நினைப்பதற்குள் எல்லாம் முடிந்துபோனது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக