https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 12 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 25 மாறிய திட்டம்

ஶ்ரீ:



அரிய நிகழ்வும்  வெறுமையும் - 25

மாறிய திட்டம் 


பதிவு :  413 / தேதி :- 11 பிப்ரவரி   2018








மந்தாகினியிலிருந்து நாங்கள் கிளம்பும் போது , வந்த  செய்தி  எனக்கு அதிர்ச்சியை தந்தது . அவர்கள் அலகாபாத்தில் இரவு தாங்காமல் அயோத்தியை நோக்கி செல்வதாகவும் , எங்களை வழியில் வந்து இணைந்துகொள்ள சொன்னார்கள் .அவர்கள் தொன்னூறு பேர் . இரண்டு பேருந்து மற்றும் ஒரு டவேரா காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர் . அவர்கள் அன்று இரவு அலகாபாத்தில் தங்குவதற்கு போட்டிருந்த இடத்தில் ஏதோ சிக்கல் எனவே தங்குவதை தவிர்த்து நேராக அயோத்தி சென்று அங்கு பார்க்க வேண்டியதை பார்த்து பின் திருவேணிசங்கமம் திரும்பி , இங்கிருந்து வாரணாசி , கயா என முடித்து பாட்னாவிலிருந்து சென்னை திரும்புவதாக , முழு திட்டமும் மாற்றியமைக்கப்பட்டிருந்தது என்னை நொந்து போகச் செய்தது

எனக்கு இந்த தொடர் அதிர்ச்சி யாத்திரையில் பங்கு பெற்றதையே கேள்விக்குரியதாக மாற்றியிருந்தது . அவர்கள் அலகாபாத் வந்து இரவு தங்கி செல்வதாக சொன்னதால்தான், எங்களுடைய எல்லா உடைமைகளும் நாங்கள் முதல் நாள் இரவு தாக்கிய விடுதியிலேயே வைத்து விட்டு வந்திருந்தோம் . இப்போது யாத்திரை குழுவுடன் இணைவதாக இருந்தால் , அலகாபாத் விடுதிக்கு சென்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு திரும்ப வேண்டும். இதில் எனக்குள்ள நடைமுறை சிக்கலை ஜீயர் ஸ்வாமிகளிடம் சொல்லி அவர்களின் புது திட்டத்தை மாற்றலாம் என முதலில் நினைத்தேன் . ஆனால் அது முறையல்ல எனப்பட்டது . நான் அவர்களின் யாத்திரையில் இடையில் வந்தவன். இரண்டாவது அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த இடத்தில் ஏதோ சிக்கல் என்பதால்தான் இப்போது மாற்று திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


நாங்கள் இரண்டு நாள் அங்கு தங்குவதாக   சொல்லியிருந்ததால் இப்போது  அறையை காலி செய்வதில் ஏதாகிலும் சிக்கல் எழலாம் . ஆனால் இதை காலி செய்து கொண்டு  அவர்களுடன் சென்று இணைந்துகொள்ளவதை தவிர எங்களுக்கும் வேறு வழியில்லை . மந்தாகினியிலிருந்து அலகாபாத் குறைந்தது 5:00 மணி நேரப் பயணம். இப்போது சிக்கல் அவர்கள் அலகாபாத் ஊருக்குள் நுழையாமல் சித்ரகூடத்திலிருந்து , அயோத்திக்கு செல்லும் ஷோரன் என்னும் ஊர்  வழியாக செல்வதாக சொன்னார்கள் . அது சித்திரகூடத்திலிருந்து அலகாபாத்திற்கு செல்லும் சாலையில் 30 கி.மீ முன்பாக பிரிவது

ஒரு நிமிடம் என்ன செய்வது என புரியாத  திகைப்பு . சுதாரித்துக் கொண்டு உடனடியாக மந்தாகினி நதிக்கரையிலிருந்து அலகாபாத் நோக்கி புறப்பட்டோம் .மதியம் 3:00 மணி என்பதால் வழியெங்கும் நல்ல கூட்டம் நினைத்த வேகத்தில் வண்டியை செலுத்தி முடியவில்லை . எப்படியும் அலகாபாத் சென்று பின் அங்கிருந்து அயோத்தி செல்ல இரவு 9:00 மணியாகிவிடும் , அங்கிருந்து அயோத்தி 170 கி.மீ தூரத்தில் இருக்கிறது எப்படியும் ஐந்து அல்லது ஆறுமணி நேரப்பயணம்

திரும்பவும் இரவு பயணம் செய்யவேண்டி வரும் என்கிற நினைப்பே பெரிய அலைக்கழிப்பை தந்தது . இப்போது மாற்று திட்டம்பற்றி ஏதும் யோசிக்க முடியாது . எப்படியாவது முதல் நாள் தங்கி இருந்த விடுதியை காலி செய்து கொண்டு யாத்திரை குழுவுடன் சென்று இணைந்து கொள்வதே . மனப்பரபரப்பிற்கு வண்டி ஈடு கொடுக்க முடியாமை ஒரு தொடர்ச்சியான நிலையழித்தலை கொடுத்துக்கொண்டிருந்த போதுதான் முற்றும் எதிர்நோக்காத அந்த விபத்து நிகழ்ந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...