https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 15 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 29 விடுதலை

ஶ்ரீ:




விடுதலை 





பதிவு :  417 / தேதி :- 15 பிப்ரவரி   2018





குழந்தை சிருஷ்டா ஒரு அற்புத பிறவி . சிறிய சட்டையும் ஸ்கேர்ட் போல ஒன்றை போட்டுக்கொண்டு , குட்டி வாத்து நடையும் , யாரிடமும் தாவிவிடும் பழக்கமும் , நான் பார்த்த குழந்தையில் மிக வித்தியாசமானவள் .எதற்கும் அழுகை கிடையாது . ஏழே மாதக்குழந்தைக்கு இவ்வளவு புரிதல் ஆச்சர்யமானது . யாத்திரை முழுவதும் அவள் எந்த சிக்கலும் கொடுக்கவில்லை . அவளுக்கு வெறும் பால் மட்டுமே உணவு . அதை சூடுபண்ணவேண்டும் என்கிற குறைந்தபட்ச எதிர்பார்பில்லாதவள் . நினைத்த இடத்தில் கொடுத்த  தண்ணீர் கரைச்சல் பாலை  முகம் சுனுக்காமல் அருந்துவாள்  . அவளுக்கு பால் பவுடரை கலக்க தண்ணி வாங்க பர்ஸை திறந்த போதுதான் எனது கட்சி விசிட்டிங் கார்டு  பார்த்தேன் . அப்போது நான் காங்கிரஸ் கட்சியின் மாநில செயளாலராக பொறுப்பு  வகித்திருந்தேன்

கடைசீ முயற்சியாக அந்த விசிட்டிங் கார்டை பயன்படுத்திப் பார்த்துவிட நினைத்தேன்காவல் நிலையம் சாலையிலிருந்து ஒதுக்குபுறமாக , சுமார் ஐம்பது அடி தள்ளி உள்ளே திறந்த வெளிக்கு மத்தியில் இருந்தது . அங்கு செல்வதற்கான பிரத்யேக வழியெல்லாம் ஒன்றுமில்லை . ஒரு ஒற்றையடி பாதையை காவல் நிலையம் நோக்கி சென்றதுஅதன் இருபுறமும் முழங்கால் உயர புற்கள் காய்ந்து கிடந்தது. செங்கற்களும் காலி குடிதண்ணீர் பாட்டில்களும் குப்பையுமாக அந்த இடம் ஏன்அப்படி பராமறிப்பில்லாமல் கிடக்கிறது என நினைத்படியே காவல் நிலையத்தை அடைந்தேன் 

காவல் நிலையம் முழுவதமாக இருளில் இருந்தது . எனக்கு எதிரே நின்று கொண்டிருந்தவரின் முகம் கூட சரியாக தெரிநவில்லை . வெளியில, நின்று ஒரு முறை மூச்சு வங்கிக் விட்டு , பின் வேகமாக உள்ளே நுழைந்து ஆங்கிலத்தில் அவரிடம்நான் யார்தெரியுமா? எந்த காரணமும் சொல்லாமல்  எதற்கு *ங்களை நிற்கவைத்திருக்கிறீர்கள் . வேண்டுமானால் விபத்தை பற்றி முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து அடுத்து நடக்கவேண்டியது பாருங்கள் . வண்டியில் பெண்களும் குழந்தையம் இருக்கிறார்கள் எங்களை இதற்குமேல் காக்க வைத்தால் நான் தில்லியில் உள்ள எங்கள் மாநில ரெஸிடன் கமிஷனர் மூலமாக உங்கள்  உயரதிகாரிகளை தொடர்பு கொள்வேன்என கத்திவிட்டு வந்துவிட்டேன்

வெளியே வந்த எனக்கே நான் கத்தியது அபத்தமாக இருந்தது . அவர்கள் எந்தவித அலட்டலுக்கும் இடங்கொடுக்காமல் என்னை அமைதியாக பார்த்தபடி இருந்ததை நினைத்துப்பார்த்தேன். நான் பேசிய மொழி அவர்களுக்கு புரிந்திருக்காது . ஆனால் எனது கட்சி விசிட்டிங் கார்டு நான் சொல்லாததையும் சொல்லக்கூடியது . காவல் நிலையத்தில் கூட விளக்கில்லை என்பதை அப்போதுதான் நினைவுகூர்ந்தேன். என்ன ஊர் இது? யாரிடம் கேட்பது? . ஒன்றும் புரியவில்லை .போகும் போது ஒரு வேகத்தில் சென்றாதால் எதையும் பொருட்படுத்தவில்லை. ஆனால்  திரும்பி வரும்போது நடப்பது தடுமாற்றமாக இருந்தது . அப்போது இருளில் நல்ல நிலவு ஒளி தோன்றியிருந்தது. கண்கள் அதற்கு பழகியதும் அதன் வெளிச்சத்தைக் கொண்டே பாதையை தேறி காரை அடைந்து அதன் பக்கத்தில் நின்று கொண்டேன் .

என்மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது . முழு சக்தியும் வடிந்துவிட்டது மிகவும்சோர்ந்துபோனேன் . என்ன நடந்தது என தெரியவில்லை சிறிது நேரத்தில் ஓட்டுநர் வேகமாக வெளிவந்து நம்மை  போக சொல்லிவிட்டார்கள் என்றார் . அப்பாடி !!! விட்டார்களே அதுவரையில் லாபம் என நினைத்து அங்கிருந்து வேக வேகமாக கிளப்பினோம். பெரும் விடுதலை உணர்வு எழுந்து நிம்மதியாய் சூழ்ந்தது. மனதில்  ராமருக்கு நன்றி சொன்னேன் . உள்ளும் புறமுமாக புழுங்கிப்போய் இருந்ததற்கு காரின் ஜன்னல் வழியாக வந்த காற்று இதமான குளிரை தந்தது .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்