https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 19 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 32 . அம்மாவின் பிராத்தனை .

ஶ்ரீ:அம்மாவின் பிராத்தனை பதிவு :  420 / தேதி :- 18 பிப்ரவரி   2018


நீண்ட தூரப்பயணம் என்பதும், பலர் சம்பந்தப்படும் போது சிறு சிறு விஷயங்கள் கூட நிகழ்சி ஏற்ப்பாட்டாளருக்கு எங்காவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி விடுவது தவிற்க இயலாதது  . நாங்கள் தனியாக கிளம்பிவந்து குழுவுடன் இணைய முயற்சித்ததால் , சிறு சிறு  முரண்நிகழ்வுகளே மறக்கமுடியாத பதட்டமான நேரங்களை கொண்டுவந்து கொடுத்து விடுகின்றன . அவர்கள் சென்ற பேருந்தின் டயர் பஞ்சராகி , பலமணிநேரமாக காத்துக்கிடந்ததால் எங்களுடன் தொடர்புறுத்தும் மன நிலையில் அவர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை  . அழகானந்தத்தால் தான்  இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறோம்  என்பதை துல்லியமாக சொல்ல இயலவில்லை . ஆனால் யூகமாக அலகாபாத் தாண்டவில்லை என்பதை மட்டும் உறுதியாக சொன்னார்

அது சரியாகக்கூட இருக்கலாம் ஆனால் புறவழியாக அவர்கள் பயணிக்க துவங்கியிருந்தால் அலகாபாதிலிருந்து விலகியிருக்க ஒரு வாய்ப்புள்ளது . எனக்கு இது ஒரு கடைசீ சந்தர்ப்பமாக தோன்றியது .  இது பகவான் கொடுத்த கொடை . இம்முறை மிகத்தெளிவாக திட்டமிட்டு அவர்களுடன் சென்று இணைந்து விட வேண்டும் . நான்  அழகானந்தத்திடம் அவர்களை இருக்கும் இடத்திலேயே எவ்வளவு நேரமானாலும் எனக்காக காத்திருக்கச்சொல்லி விட்டு , நாங்கள் அலகாபாத் நோக்கி வேகமாக பயணமானோம் . அலகாபாத் சென்று நங்கள் தங்கி இருந்த விடுதியின் மேலாளர் மூலமாக யாத்திரை குழுவினரை தொடர்பு கொண்டால் அவர்கள் இப்போதிருக்கும் இடத்தை சரியாக அடையாளம் கண்டுகொள்ள இயலும் என நினைத்தேன்.

இப்போதுள்ளதைபோல இணையதள வசதிகளோ நவீன தொடு அலைபேசிகள் இல்லாத காலம் . கூகுள் மேப் அப்போது இருந்தாலும் , மொபைல் நெட் வசதிகள் இல்லாததால் துல்லியமாக எங்கிருக்கின்றோம் என அறிய முடியாது . இப்போது அவர்கள் எங்கிருகிறார்கள் என தேடிச்செல்லவது சிக்கல். அவர்கள் அலகாபாத் ஊருக்குள் செல்லாமல் வெளியிலேயே பிரிந்து விடும் புறவழிச்சாலையை தாண்டியருந்தால் அவர்களை நாங்கள் அலகாபாத் செல்லும் வழியில் சந்திக்க இயலாது . நாங்கள் தங்கியிருந்து விடுதிக்கு சென்று அதை காலி செய்து விட்டு அவர்களுடன் சென்று இணைந்து கொள்வதுதான் சரியாக இருக்க முடியும், இப்போது அவர்களை சென்றடைய சிறு தாமதமேற்பட்டாலும் , அது பெரிதாக தெரியாது . எனக்கு போன உயிர் திருப்பியது போல இருந்தது . ராமருக்கு மனதால் ஆயிரம் முறை நன்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.

அவர்கள் அயோத்தி சென்று சேரவில்லை என்கிற செய்தி நிம்மதி அளிப்பதாக இருந்தது . ராமஜென்ம பூமியை பார்க்கும் பாக்கியத்தை இழக்கவில்லை என்பது எதனாலும் ஈடு செய்ய முடியாத கொடையாக தோன்றியது. அவர்கள்  சுமார் 4:00 மணி நேரத்திற்குமேலாக ஒரே இடத்தில நின்று கொண்டிருப்பதால் அலகாபாத்தை தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்கிற அழகானந்தத்தின் கணிப்பு சரிகவே இருக்கம் என நம்பிக்கையை அடைந்தேன் . அவர்கள் அலகாபாத்தை பிரிந்து செல்லும்  பாதைக்கு முன்பின் எங்கோ இருக்கவேண்டும் . எப்படி பார்த்தாலும் எனக்குத் தேவை ஒரு மூன்றுமணி நேரம் ,அவர்களை பிடிக்க. என்பது உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது .

மனம் லகுவான பிறகு உள்ளே சிரிப்பொலி திகழ்ந்து கொண்டிருப்பதை என்னவென்று அறிய செவிகூர்ந்த போது, அம்மாநான் ராமரிடம் வேண்டிக்கொண்டேன் அவர் விட்ட அம்பால்தான் முன்னே சென்று கொண்டிருந்து யாத்திரை பேரூந்தை பஞ்சராகியது என சொல்ல, நானும் அவர்களின் சிரிப்பில் இணைந்து கொண்டேன்.  இது அவரது பிரார்த்தனையின் பலமாக இருக்கலாம் . காரணம் இந்த யாத்திரையே அம்மாவை கங்கைக்கும் அயோத்திக்கும் அழைச்செல்லும் ஒரு இந்து மகனின்தன்னறத்தை ஒட்டி எழுந்தது . அவர் சொன்னபடி இது அவருக்காகவே கூட நிகழ்ந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.ஆனால் அதன் பிறிதொரு பரிமாணம் அந்த யாத்திரை குழுவை நாங்கள் அடைந்த போது அது பேருரு கொண்டிருந்தது ஆச்சரயமளிப்பதாக இருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக