https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 15 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 28 நிலவின் ஒளி

ஶ்ரீ:


அரிய நிகழ்வும்  வெறுமையும் - 28

நிலவின் ஒளி 



பதிவு :  416 / தேதி :- 14 பிப்ரவரி   2018







மத்திய பிரதேச எல்லையில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிடுந்த காவல்துறை வண்டியின் பக்கவாட்டிலிருந்து அந்த கான்ஸ்டபிள் வெளிப்பட்டபோது நிகழவிருப்பதை நான் அறியவில்லை. எங்களை கைகட்டி வண்டியை நிறுத்த சொன்னதும்தான் நாங்கள் மறிக்கப்பட்டது தெரிந்தது   , எல்லா யூகங்களும் ஒரு முடிவிற்கு வந்தது விட்டது . இதை அஞ்சியே ஓட்டுனர் வண்டியை விரட்டியிருக்கிறார் என்று  புரிந்தது . விபத்து நடந்து இடமோ வந்தபயணப்பாதையோ மிகவும் பின்தங்கிய கிராமப்பகுதி , ஆனால் அங்கிருந்த கிராமத்து மக்கள் எங்களை தொலைத்தொடர்பு சாதனத்தின் மூலம் எங்களை மிகத்துல்லியமா அடையாளம் சொல்லியிருக்கிறார்கள்  என்பது  மிகுந்த ஆச்சர்யத்தை அளித்ததுஇந்திய நாட்டின் இந்த வளர்ச்சி சந்தோஷத்தை ஒரு பக்கம் கொடுத்தது . நாங்கள் மறிக்கப்பட்டது ஒரு காவல்நிலையத்திற்கு அருகில்எங்கள் ஓட்டுநர் சொன்ன எதையும் கானஸ்டபிள் செவிகொள்ளவே இல்லை வெறும் கைஜாடையால் ஏதும் பேசாமல் வண்டியை ஓரம்கட்ட சொல்லி அவர் காவல்நிலையம் நோக்கி நடந்தார். அனைத்து பரபரப்பும் ஒரு முடிவிற்கு வந்தது . இப்போது அடுத்து என்ன என்பதுதான் ஆகப்பெரிய கேள்வியாக என் முன்னே நின்றுகொண்டிருந்தது.

வழக்கமான காட்சிகள் அரகேறத்துவங்கியது . காவல்துறை அதிகாரியிடம் எங்கள் ஓட்டுநர் ஏதோ பேசியபடி சென்று சாலையோர மரங்களுக்கு பின்னால் மறைந்துபோனார் . காலம் ஓடிக்கொண்டிருந்தது பின் மதிய மொட்டை வெய்யில் கண்கள்  கூசியபடி  புழுக்கத்தை கொடுத்தது .பாஷை புரியாத மாநிலத்தில் எந்த ஆதரவும் இல்லது நிர்கதியாக குடும்பத்தை கொண்டுவந்த நிறுத்திவிட்ட என்மேலேயே எனக்கு கோபம் வந்தது . எப்பேர்ப்பட்ட அறிவீனம் , பெண்கள் குழந்தை வைத்துக்கொண்டு இந்த கிராமப்பகுதியில் என்ன நிகழ்கிறது என யாருக்கும் சொல்லுவதற்கில்லாமல் அனாதை போல நிற்பது மிகுந்த வருத்தத்தை தந்தது . ஒருவேளை அடிபட்ட ஆள் இறந்துபோய் இருந்தால் . இப்போதைக்கு வண்டி கிடைக்காது . அடுத்தநாள் கோர்ட் கேஸ் என கற்பனை தேவையில்லாமல் விரிந்து நிலையழித்தலை கூட்டியபடி இருந்து .

தலைக்குள் ஓயாது சட்டம் பற்றியும் அதை கடப்பது பற்றியும் மாற்று ஏற்பாடு செயவது எப்படி என மனம் பல கூறுகளாக பிரிந்து தர்கித்து கொண்டே இருந்தது . அதுவரை தூங்கிக் கொண்டிருந்த அம்மா எழுந்து வண்டி நின்று போன காரணம் தெரியாது எதையோ சொல்லி அரட்ட துவங்கியதும் விஜி எதிர் குரல் எடுத்தாள் . அவர்கள் இருவரும் பலமாக பேசத் துவங்க, நான் காரிலிருந்து இறங்கி சிறுது தூரம் தள்ளி போய்  நின்று கொண்டேன் . சற்று நேரத்திற்கெல்லாம் நிவாஸ் என்னுடன் வந்து  சேர்ந்து  கொண்டான்.

போலீஸுடன் சென்ற எங்கள் ஓட்டுனர் சிறிது நேரத்தில் திருப்பி வந்து போது ஒரு நம்பிக்கை கீற்று வெளிச்சம் பாய்ச்சியது . இதோ முடிந்துவிட்டது என மனசு பரபரத்தது . ஆச்சி இனி காரில் அமர்ந்து வண்டியை கிளப்பிவிடுவார் என்கிற நப்பாசை நிராசையாகி ,அவர் தனது வண்டி டேஷ்போர்டை திறந்து  rc இன்சூரன்ஸ் driving லைசென்ஸ் என எல்லா பேப்பர்களை எடுத்துக்கொண்டு திரும்ப சென்றார்

மனதில் ஓடிக்கொண்டிருந்த நேரக் கணக்கீடுகள் ஒரு எல்லைக்கு அப்பால் வேலை செய்யவில்லை . எந்தவித செய்தியும் இல்லது காலம் நகர்ந்து கொண்டிருந்தது . மெல்ல  இருட்டிக் கொண்டு   வந்தது  பிறகுதான் ஒன்றை கவனித்தேன் அந்த இடத்தில் எங்குமே விளக்குகள் இல்லை என்பதை  . மின்சாரமில்லையா அல்லது கரண்ட் கட்டா என்ன வென்று தெரியவில்லை . அந்த பகுதிமுழுவதுமாக இருள் மெல்ல சூழ எங்கும் காடா விளக்குகள் உயிர் பெற்று எழுந்தது  , தன்னை சுற்றி சிறு நிழலுலகை ஏற்படுத்திக்கொண்டு பிற இடத்தில் மங்கலான வெளிச்ப் பந்துகளை உருவாக்கின இருள் சூழத்துவங்கியதும் அதுவரை நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்த ஒன்று  முழுவதுமாக விலக நான் முற்றாக நம்பிக்கை இழந்து போனேன்இரவு 7:00  மணியை நெருங்கிக்கொண்டிருந்தது

குழந்தைக்கு பால் பவுடர் கலக்க தண்ணி வாங்க பர்ஸை திறந்த போது எனது கட்சி விசிட்டிங் கார்டு , இருப்பதை பார்த்தேன் . ஒரு குருட்டு நம்பிக்கை . வேகவேகமாக காவல் நிலையத்திற்கு சென்று அந்த விசிட்டிங் கார்டை கொடுத்து ஆங்கிலத்தில் அவனிடம் நான் யார்தெரியுமா? ...... வென கத்திவிட்டு வந்துவிட்டேன் . அப்போதுதான் கவனித்தேன் , காவல் நிலையத்தில் கூட விளக்கில்லை . நல்ல நிலவு ஒளி தோன்றியிருந்தது அதன் வெளிச்சத்தில் பாதை தேறி கார் பக்கத்தில் வந்து நின்று கொண்டேன் .என்மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது . சிறிது நேரத்தில் ஓட்டுநர் வேகமாக வெளிவந்து போக சொல்லிவிட்டார்கள் என்றார் . உண்மையில் என்ன நடந்தது என தெரியாமல் . விட்டவரையில் லாபம் என நினைத்துக்கொண்டு அங்கிருந்து வேக வேகமாக கிளப்பினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...