ஶ்ரீ:
அரிய நிகழ்வும் வெறுமையும் - 20
பாதுகை
பதிவு : 408 / தேதி :- 06 பிப்ரவரி 2018
சித்திரகூடம் ராமாயணத்தில் “பாதுகா பட்டாபிஷேகம் , காகாசுரன் சரணாகதி” என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற இடம் . ராமர் தனது வனவாசத்தில் நீண்ட நாள் இங்கு தங்கியிருந்தார். இங்கிருந்து அருகில் பரஜ்வாசர் ஆசிரமம் , நத்திக்கிரமம் , குகசக்கியம் போன்ற இடங்கள் மிக அருகருகே அமைந்துள்ளன. ராமர் அயோத்தியிலிருந்து வனவாசத்திற்கு கிளம்பி பயணித்த பாதையில் நாங்கள் எதிர்முகமாக அயோத்தியை நோக்கி சென்று கொண்டிருந்தோம் .
இயற்கை எழில் சூழ மிக ரம்யமான இடமாக சித்ரகூடம் ராமாயணத்தில் வர்ணனிக்கப்படுகிறது. இன்றும் அதன் ரம்யத்திற்கு குறைவில்லை என்பது ஒரு ஆச்சர்யம் . சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு, நடு நாயகமாய் உள்ள இரு மலைப்பகுதிகளுக்கு மத்தியில் இருந்தது சித்திரக்கூடத்தில் ராமர் தங்கிய குகை பகுதி . எங்கும் நிழல்கள் அடர்ந்திருக்க , வெய்யிலின் கடுமையை உணரமுடியாதபடி நல்ல குளிர்பகுதியாக அது இருந்தது . புதிய ஊர்களுக்கு சென்ற எனது முந்தய அனுபவங்களுக்கும் மனநிலைக்கும், அந்த இடத்தின் உணர்வு புதுமையாகவும் தர்க்கத்துக்கு இடம் கொடுக்காமலும் இருப்பதை எங்கோ உணர்ந்தேன் .
ஏதோ ஒரு புரியாமை நான் இயக்காத ஒரு புள்ளியில் தன்னுடன் தான் என விவாதிப்பதை , சற்று கூர்ந்து அவதானித்த போதுதான் உணர்ந்தேன் . குளிர் என்கிற உணர்வு நாம் எங்கும் அடைகிறோம் . குளிரூட்டப்பட்ட அறை , மார்கழி மாத அதிகாலை குளிர், சமதளத்தில் உள்ள பெங்களூர் குளிர் நாட்கள் . கோடைகாலத்தில் திருவண்ணமலை போன்ற வறன்ட பூமியிலகூட நல்லிரவில் உணரப்படும் குளிர் . ஆனால் ஆழ்மனம் அவற்றை இடம் காலம் பொறுத்து அவற்றின் வகைகளை பிரித்தே நமக்கு கொடுக்கின்றன போலும்.
அது வருடம் முழுவதும் பார்வையாளர்கள் வருவதில்லை அல்லது அவை முழுவதுமாக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், நிரந்தர கட்டுமானத்திற்கு அவை அனுமதியளிப்பதல்லை என்பதும் காரணமாக இருக்கலாம் . நான் அதுவரை பார்த்திருந்த இடத்தை இத்துடன் இணைத்து பார்க்க முயன்றேன். அது ஏறக்குறைய கொடைக்கானல் தற்கொலை பாறை நெருங்கும் போது பார்க்கும் கட்சிக்கு ஓத்திருந்தாலும் . அதற்கும் இதற்கும் ஒரு பிரம்மாணட வேறுபாடு இருந்தது . சமவெளியிலும் மலை பள்ளத்தாக்குகளும் கற்பனைக்கு எட்டாத அளவில் பெருகி எங்கும் சூழ்ந்து அகன்றும் இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக