https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 26 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 37 . சிறு படகு

ஶ்ரீ:



சிறு படகு 



பதிவு :  427 / தேதி :- 25 பிப்ரவரி   2018





தற்செயலாக எதையோ எடுக்க வந்தவர் எங்களை படகுத்துறையில் காத்திருந்தவர்களுடன் கொண்டு சேர்த்தார். அவர் அந்த யாத்திரையை வழிநடுத்துபவர் . ஸ்ரீரங்கம் அவரது வசிப்பிடம் என பின்னர் அறிந்துகொள்ள நேர்ந்தது . சினிமா  நடிகர் பாக்கியராஜுக்கு நெருகிய  உறவு என ஒருவர் சொன்னார் . எல்லாவற்றிக்கும் சினிமா பின்புலம் அறிமுகத்திற்கு தேவைப்படுகிறது என நினைத்துக்கொண்டேன் . அவருக்கு பூர்வீகம் கோயம்புத்தூருக்கு அருகில் என்றனர் . கால் வைக்கும் இடமெல்லாம் மிக மென்மையான சந்தன நிற மணல் மாவு போல கால்களில் ஒட்டிக்கொள்கின்றன .சிறிது தண்ணீர் பட்டாலே சேறாக மாறக்கூடிய நல்ல வளப்பமான ஆற்றின் வண்டல்மண் அவை

ஓயாது ஒடிக்கொண்டிருக்கும்  நதி கொண்டுவந்த சேர்த்தவைகள் . கொடிபோல சில அந்த பகுதி மணல் மீது படர்ந்திருந்தது . நம்பி கால்வைக்க சில இடங்களில் முள் நிறைந்ததாக , தன்னை கடப்பவர் பாதங்களை பதம்பார்த்தபடி இருந்தது . ஏற்கனவே நீரால் ஊறி இருந்த பாதங்களை சாதாரன அந்த முட்கள் ஆழமாக இறங்கி , அவற்றை எடுத்து விட்டபின் அந்த இடத்தில் ஒரு சிறு கடுப்புடன் அரிப்பு தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய மணல் மேட்டுப்பகுதியை அடைந்ததும் சிறு மூங்கிலால் வளைத்து கட்டப்பட்ட நுழைவாயில் போல ஒன்று , அதை கடந்ததும் படகுத்துறைக்கு செல்லும் மூங்கில் பாலத்தின் முனை ஆற்றுமண்ணில் ஆழமாக நடப்பட்ட முறையில் இழுத்துக்கொண்டு கட்டப்பட்டிருந்தது  தெரிந்தது . வெள்ளம் பெருக்கெடுத்தால் , அவழ்த்து எடுத்து பத்திரபடுத்துவற்காக இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

அந்த பாலம் முழுவதும் கனமான மூங்கில் கால்களை ஆழமாக நட்டு அதன்மேல் மறப்பட்டைகளை கொண்டு நெருக்கமான நடைபாதை அமைத்திருந்தனர் . மேல் உள்ளது மட்டும் சிறு சிறு படல்களினால் செய்யப்பட்டிருந்தது . படல்கள் சிறு அளவினால் ஆனவை எனவே எவ்வளவும் ஜனம் ஏறினாலும் தாக்கும்படியா இருந்தது .துறைமுகத்தை நெருங்கியதும் மீன் வாடையுடன் பல விதப் பொருட்களின் அழுகால் நாற்றமும் மிகுந்து குமட்டலை கொடுத்தது . பக்கத்திலுள்ளவர்கள் அதைப்பற்றிய பிரக்ஞை இல்லாதிருப்பது ஆச்சரியமளித்தது . நமக்கு மட்டும்தான் நாறுகிறதோ, என்கிற சந்தேகத்தை உறுதி செய்வதற்குள்ளாக , முன்னர் சென்ற யாத்திரைக்குழுவின் ஒரு பகுதி , படகோட்டியுடனான பேரம் படிந்து உற்சாகமாக படகுகளில்  ஏறத்துவங்கினர்

இரண்டு , மூன்று படகுகளை பேசி முடித்து , எங்களுக்கு முன்னால் சென்ற படகில் ஏறிக்கொண்டவர்கள் பின்னல் வந்துகொண்டிடுந்த எங்களை நோக்கி விரைந்து வந்து படகில் ஏறசொல்லி குரல் கொடுத்தார் .   அருகில் சென்று பார்க்க  படகு சிறிய  அளவில் இப்போது தெரிந்தது . கடலில் படகில் சென்ற அனுபவம் அங்குள்ள சூழலை முற்றாக மாற்றிக்காட்டியது . பாலத்தில் நுழைந்தபோது உணர்ந்த அந்த நாற்றத்தின் கடுமை வெகுவாக குறைந்திருந்தது . வெப்பம் அவ்வப்போது வீசும் நதியின் கற்றால் குளிந்தபடி இருந்தது

ஒரு படகில் சுமார் இருபத்தி இந்து  பேர் அளவிற்கு ஏறும் அளவிற்கு  இருந்தது . அது சுமார் பதினைந்து  அடிக்கு மேல் நீளம் கொண்டதாக இருந்தது . படகின் ஒரு முனையில் விரைவு படகுகளில் பொருத்தும்எமஹாமோட்டார் அமைக்கப்பட்டு அதிலேயே அதை திருப்பும் சுக்கானும் இயக்கும் ஆக்ஸிலேட்டரும் இருந்தது . ஆனால் நீண்ட தூரத்திற்கு அல்லது நல்ல ஆழத்திற்கு சென்ற பிறகே அதை இயக்குகிறார்கள்படகின் இரு விலா உட்பகுதிகளின் நீண்ட பலகை அடிக்கப்பட்டு பயணிகள் வரிசையில் அமரும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது . படகின் இரண்டு விளாபகுதியை இணைத்து மழைகாலத்தில் மூடுகிற அமைப்பு வெறும கூடுயாக இருந்தன . ஒருவர் எழுந்து நின்றாலே படகு நிலைகொள்ளாமல் இருபுறமும்தர்புர்ரெனஆடி இரு பக்கமும் தண்ணீர் முகர்ந்து கொள்ளும் அளவிற்கு தாழும் போது , வயிற்றில் கிலி படர்வதை தவிர்க்க இயலாது . மனிதனுக்குத்தான் உயிரமேல எவ்வளவு ஆசை


முதல் சென்ற  படகிகளில் சிலர் ஏறிக்கொள்ள எங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒரு படகில் ஏறிக்கொண்டோம் . வெயிலின் உஷ்ணம் சூழலில் எழுந்த மனம் அனைத்தும் படகு புறப்பட்ட சில நொடிகளில் காணாமலாகியது. எங்கும் நல்ல குளுமை சூழ்ந்து மனதிற்கு ரம்யமானதாக மாறத்துவங்கியிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...