https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 5 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 18 சித்திரகூடக்குகை

ஶ்ரீ:


அரிய நிகழ்வும்  வெறுமையும் - 18

சித்திரகூடக்குகை  


பதிவு :  406 / தேதி :- 04 பிப்ரவரி   2018






அன்று இரவு அலகபாத் விடுதியில் நல்ல உறக்கத்திற்கு பிறகு, அதிகாலை சித்திரகூடம் நோக்கி கிளம்பினோம் .அலகாபாத்திலிருந்து சித்திரகூடம் 4:00 மணி நேரப்பயண தூரம்தான் என்றாலும் ,நெருங்களான நகர் பகுதி ,சந்தை கடைகள் போன்றவை சூழந்திருந்ததால் . 5:30 மணி நேரமாகிவிட்டது . பயணத்தினூடாக யாத்திரை குழுவுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டபடியே இருந்தேன். சித்ரகூடம் அருகில் ராமாயண சம்பவங்கள் அதிகம்  நடைபெற்ற பகுதிகளாக இருப்பதால் ,யாத்திரை குழு ஒன்றன் பின் ஒன்றாக இடங்களை பார்த்தபடி நகர்ந்து கொண்டே இருந்தார்கள் .

காலை உணவிற்கு முன்னர் மந்தாகினியில் குளித்து பின் உணவு என அவர்களின்  இடம் பற்றிய செய்திகள் மாறியபடியே இருந்தது . மந்தாகினி நதியில் குளித்தார்கள் என்கிற சொல்லே மனதில் ஒரு கனவை விதைத்தது . எங்கோ எப்போதோ படித்த அல்லது சொல்லப்பட்ட சொற்கள் அவற்றின் பருவடிவை பார்க்கப்போகிறோம் என்கிற பரபரப்பு தொற்றிக்கொண்டது . பதட்டமான பயணத்தின் இறுதியில் ,இறுதியாக அவர்களை சித்திரகூடத்தில் பிடித்தோம் . ஜீயர் ஸ்வாமிகளைத்தான் முதலில் பார்த்தேன். சித்திரகூடம் பார்த்து முடித்துவிட்டு வெளிவரும் அவரை விழுந்து சேவித்தேன் அனைவருக்கும் மகிழ்ச்சி , ஒருவழியாக பிடித்துவிட்டோம் என , எனது குடுமபத்திலிருந்து ஏறக்குறைய அனைவரும் வந்திருந்தனர் நாங்கள்  அவர்களை தேடி அந்த சித்திரக்கூட குகையை நோக்கி நடந்தோம்.

நாங்கள் சென்று சேர காலை 10:30 மணியாகியிருந்தது. சித்திரகூடம் காட்டுப்பகுதியில் இருந்தாலும், எங்கும்  நல்ல கூட்டம் செறிந்திருந்தது . ,நிறைய கார்களும் பஸ்களுமாக எங்கும்  ஜன நெருக்கடி. எல்லா பக்கங்களிலிருந்தும் மக்கள் வந்து கொண்டே இருந்தார்கள்  . நாங்கள் வந்த வண்டியை , அங்கு நின்று்கொண்டிருந்த நீண்ட வரிசைக்கு பின்னால் நிறுத்தி ஓட்டுனரை வண்டிக்கு அருகிலேயே இருக்க சொன்னேன் . அலைபேசியில் அவர்கள் சொன்ன இடம் இதுதானா என தெரியாததால் , முடிவாகும் வரையில் அவர் வண்டிக்கு அருகில் இருப்பது நல்லது என தோன்றியது . இதுவல்ல வேறு இடமென்றால் இந்தக்கூட்டத்தில் அவரை எங்கு தேடுவது. அலைபேசி வேறு அடிக்கடி பிறந்திறந்தபடி இருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்