https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 19 ஆழ்மனம்

ஶ்ரீ:அரிய நிகழ்வும்  வெறுமையும் - 19

ஆழ்மனம்  

பதிவு :  407 / தேதி :- 05 பிப்ரவரி   2018


சித்திரகூடம் உத்ரபிரதேசத்தில் இருந்தாலும் , அது மத்திய பிரதேஷ் மற்றும் ஜார்கண்ட்  மாநிலங்களுக்கு எல்லையில்  அமைந்துள்ள பகுதி , அலைபேசியில்  சிக்னல் டவர்கள்   தோன்றுவதும் மறைவதுமாக பௌத்தமத க்ஷணிக தத்துவம் கொள்கைப் போல க்ஷணம் தோறும்  தோன்றி மறைத்தபடி இருந்தது . அது முற்றாக ஒரு காட்டுப்பகுதி , இங்கு இவ்வளவு கூட்டமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை . கண்களை அனைத்து பகுதிகளிலும் செலுத்தி ஏதாவதொரு தெரிந்த முகத்தை பார்க்க முடியுமா?என்கிற தவிப்பு , பரபரப்பாக மூளையை இயக்கிக் கொண்டிருந்தது . மனதில் பதிந்துள்ள முகங்களை திரளில் தேடுவது , முதலில் ஆயாசமளிப்பதாக தோன்றினலும் , அதை என்னுடைய திறனைத் தாண்டி பிறிதொன்று எடுத்துக்கொண்டதை உணரமுடிந்தது

ஆழ்மனம் முகத்தை மட்டுமல்ல . நமது கலாச்சார உடை, வண்ணம் , நடைமுறை என பல அலகுகளில் நம்மையும் அறியாமல் அவர்களைப் பற்றிய தகவல்களை குறியீடாக  தனக்குள் எங்கேயோ பதிந்து வைத்திருக்கிறது . அங்கிருந்துதான் அது தேடுகிறது என்கிற விசித்திர எண்ணத்தை அடைந்தேன் . நமக்குள் இயற்கையில் அமைத்துள்ள தேடு பொறியின் வல்லமையை , அதன் ஒழுக்கில் விடுவதன் வழியாகவே அதன் , சிறப்பை புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்

அங்கிருந்த திரள்களின் மத்தியில் நான் தேடி வந்திருக்கும் யாத்திரை குழுவின் தொன்னூறு பேரில் , தெரிந்த ஒரு முகத்தையாவது பார்க்க விழைந்த போது ஆழ்மனம் வேறு அடையாளங்களை குறியீடுகளை கொண்டு தன் இலக்கை தேடுகிறது போலும் . எதிரே வந்து கொண்டிருந்தவர்களில் முதலில் அம்மங்காரைதான் பார்த்தேன், பின் ஜீயர் தரிசனமானார் . பெரும் மகிழ்ச்சி. ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து பலவித குழப்பத்திற்கும் பதட்டத்திற்கும் பிறகு தேடி வந்து குழுவிடம் ஐக்கியமானோம் .

சித்திரகூடம் ராமாயணத்தின்  பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றதாக சொல்லப்பட்ட இடம் . ராமனின் திருவடியை பரதன் இங்குதான் பெற்றுக்கொண்டான் . அதைபாதுகா பட்டாபிஷேகம்என சொல்லுவார்கள் . காகாசுரன் சரணாகதி அடைந்த இடம். ராமர் தனது பதினான்கு வருட வனவாசத்தில் நீண்ட நாள் இங்கு தங்கியிருந்ததாக சொல்லுகிறது . அங்கிருந்து பரஜ்வாஜர் ஆசிரமம் , நத்திக்கிரமம் , குகசக்கியம் என ராமாண முக்கிய கட்டங்கள் நடைபெற்ற இடங்கள் மிக அருகருகே அமைந்துள்ளன. நாங்கள் பயணிப்பது ராமர் அயோத்தியிலிருந்து வனவாசத்திற்கு கிளம்பி பயணித்த பாதையில் நாங்கள் எதிர்முகமாக அயோத்தியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...