https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 30 தன்னறம்.

ஶ்ரீ:




தன்னறம்




பதிவு :  418 / தேதி :- 16 பிப்ரவரி   2018






காரணமின்றி என்மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது . ஒரு விபத்து அது . யாரும் எதிரநோக்காத நேரத்தில் நடந்து முடிவது . நான் அதை பக்கத்திலிருந்து பார்த்தவன் . என்ன உன் தன்னறம் என்றது மனம் . அதில் நான் மேற்கொண்டு செய்ய ஒன்றுமில்லை. அது ஒரு சமாதானம்  . என்னால் அங்கு இறங்கி பார்க்கக்கூட முடியவில்லை . அது ஆபத்தான சூழல் . அதற்கான காரணங்கள் சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது இங்கு காவல் நிலைய இருட்டில் என்ன நிகழ்கிறது என்றே தெரியாத , வெறுமே இங்கு காத்து நிற்பது என் தன்னம்பிக்கையை குலைத்து ,எனது  முழு சக்தியும் வடித்துவிட்டது போலாக்கியிருந்தது

சிறிது நேரத்திற்கெல்லாம் ஓட்டுநர் காவல் நிலையத்திலிருந்து  வேகமாக வெளிவந்து, நம்மை போக சொல்லிவிட்டார்கள் என்றார்அந்த விபத்து குறித்து என்ன நிகழ்ந்தது என கேட்டதற்கு , பையனுக்கு ஒன்றுமாகவில்லை . சைகிளின் வீல்தான்  முற்றாக நசுங்கிவிட்டது என்றார் . நான் காவல்நிலைய அதிகாரியிடம் ஆயிரம் ரூபாய் நஷ்டயீடு தந்து பாதிக்கப்பட்டவரகளை அழைத்து கொடுக்க சொல்லிவிட்டு அங்கிருந்து கிளப்பினோம். பெரும் விடுதலை உணர்வு எழுந்து நிம்மதியாய் சூழ்ந்தது

காவல் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்தவரை , அதிலிருந்து எப்படி மீண்டு வெளிவருவது என்கிற எண்ணம் மட்டுமே ,வேறெதையும் சிந்திக்க விடாது செய்திருந்தது . அப்போதைய எண்ணம் முழுவதும் வண்டி எடுக்கமுடியாதபடி சிக்கிக்கொண்டால் , மாற்று ஏற்பாடு எப்படி செய்து கொள்வது என்பதைச் சுற்றியே உழன்று கொண்டிருந்தது . இப்போது முற்றாக அதிலிருந்து வெளிவந்த சூழலில் யாத்திரை குழுவின் நிலை என்ன? . அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட பிறகே அடுத்தது  என்ன ? என்பதைப் பற்றி சிந்திக்க முடியும்

காவல் நிலைய சிக்கலிலிருந்து வெளிவந்ததும் அதற்கான நிவாரணம் பாதிக்கப்பட்டவர்களை  அடைகிறதோ  இல்லையோநான் ஆற்ற வேண்டியதை செய்தாகிவிட்டது மனதிற்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருந்தது . சிந்தனை தெளிந்த பிறகு அது வேகமெடுக்க துவங்கியது .இப்போது முதலில்  செய்யவேண்டியது , எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் யாத்திரை குழுவுடன் தொடர்பு  கொண்டு  நங்கள்  அவர்களை பின்தொடர இயலாத காரணத்தை சொல்லியாக வேண்டும் . அவர்கள்  எங்களை எதிர்நோக்கிக்கொண்டு எங்காவது காத்திருக்கக்கூடும் ,அது சரியல்ல என தோன்றியது . 

அவர்கள் பின் மதியம் கிளம்பியிருப்பார்கள் . அங்கிருந்து அயோத்தி 6:30 மணி நேரப் பயணம். எப்படியும் இன்னும் 1:00 மணி நேரத்திற்குள்ளாக அவர்கள் அயோத்தியை அடைந்து விடும் தூரத்தில் இருக்கவேண்டும்  . அலகாபாத், அயோத்தி பாதை பிரமாண்டமான நான்குவழி புறவழிச் சாலை . இந்நேரம் அவர்கள் அயோத்தியை அடைந்துவிட்டருந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை . இப்போது இரவு 8:00 மணியை தாண்டியிருந்தது . இங்கிருந்து அலகாபாத் 2:00 மணிநேரம் பயணம் . இனி இங்கிருந்து கொண்டு அடுத்து என்ன என்று திட்டமிடுவது சரியாக வராது . நங்கள் தங்கியிருந்த இடத்தை அடைந்த பிறகே எதைப்பற்றியும் முடிவு செய்ய இயலும் என நினைத்துக்கொண்டேன்

ஆனால் அதே சமயம் எங்களுக்கு அவர்களுடன் கடந்த ஐந்து மணி நேரம் எந்த தொடர்பும் இல்லை என்கிற நினைவு எழுந்து அது ஏன் ? என்கிற ஆச்சர்யம் கொடுத்தது . யாத்திரையின் முக்கிய ஏற்பாட்டாளர்களுக்கு பல சிக்கல்கள், அதில் அவர்கள் எங்களை மறந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் . ஆனால் எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் நான்கு பேர் அதில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் .அவர்களுக்கு ஏன் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என தோன்றவில்லைஎன்கிற சிந்தனை வந்தது , உடன் கோபமும் எழுந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக