https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 24 மந்தாகினி

ஶ்ரீ:



அரிய நிகழ்வும்  வெறுமையும் - 24

மந்தாகினி 


பதிவு :  412 / தேதி :- 10 பிப்ரவரி   2018






சீதை தனக்கு பறவையால் தொல்லை ஏற்பட்டது என அவர் சொன்னதாகம் , அதன் பின்னர் லட்சுமணன் அந்த துவாரத்தை கல் கொண்டு அடைத்தார் என அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அது “காகாசுர விருத்தாந்தமாக” இருக்கலாம் என்கிற புரிதலை அடைந்தேன் . அது ராமாணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிகழ்வு .இந்திர புத்திரன் ஜெயந்தன் காகையின் ரூபம் எடுத்துக்கொண்டு 
சீதையின் மடியில் தலைவைத்து ராமன் உறங்கிக்கொண்டிருந்தபோது , சீதையை அலகினால் கொத்தியும் நகங்களால் பிராண்டியும் , தொல்லை கொடுத்தபோது அவரின்  உடலிலிருந்து ரத்தம் துளிர்தது , ராமன்மீது துளிபட்டதும் .ராமன் கோபம்கொண்டு ஒரு புல்லில் பிரம்மஸ்திரத்தை அபிமந்திரித்து அவன் மீது எறிந்ததாகவும் , சீதை புருஷகாரத்தினால் அவனை சரணாகதி செய்யவைத்து காப்பாற்றியதாகவும் வரும் முக்கிய கட்டம் . பல நுட்பமான அடுக்குகளை கொண்டதாக இதை உரையாசிரியர்கள் விரித்தெடுத்து பேசுவார்கள் . அப்போது காகத்திற்கு ஒரு கண் போனதால் இன்றுவரை அதற்கு ஒரு கண் மட்டுமே .அதேயே இரண்டு பக்கமுமாக உருட்டி பார்த்துக்கொள்கிறது என ஒரு நாட்டார் கதையும் உண்டு 

பல்லாயிரம் ஆண்டு கால தொன்மம் , அதற்கு சாட்சியாக  அந்த இடம் சொல்லப்பட்ட போது அது எனக்கு இன்னும் அனுக்கமானதாக மாறிப்போனது. என் மனைவி நிவாஸ் விஜி மூவரும் என் மற்றைய குடும்ப உறுப்பினர்களை தேடிச்செல்ல நான் அமைதியாக அந்த இடத்தில அமர்ந்துகொண்டேன் . அந்த கல்லை பார்த்தபடி இருத்தபோது , எனக்கு தோன்றியது அங்கு பேசப்பட்ட அந்த சிறிய விஷயம் ,அது ஒரு பொறிப்போல , பல காலம் அப்படி அங்கு அதன் தொடர்ச்சி  பேசப்பட்டிருந்தால் அன்றி , அந்த கல்லுக்கு அப்படியொரு கதை வந்திருக்காது

அந்த நிகழ்வு அங்குள்ள அனைவருக்கும் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். காரணம் காகாசுர விருத்தாந்தம் , ராமர் மற்றும் சீதைக்கு மட்டுமே தெரிந்த ஒரு நிகழ்வு . அதனை ஒரு அடையாளமாக அசோகவனத்தில் சீதை தன்னை சீதைதான் என அடையாளப்படுத்திக் கொள்ள அனுமனுக்கு இந்த கதையை சாட்சியாக சொல்கிறார் . நடந்த கதைக்கு இது திரிபாக இருந்தாலும் அதன் சாரம் அதில் எஞ்சி இருக்கிறதை ஆச்சர்யமுடன் நினைத்துக்கொண்டேன் . நமக்கு சொல்லப்பட்ட பல கதைகளை இப்படி சுற்றி எழுப்பப்பட்டவைகளை கலைந்தால் , அதனுள் ஒரு உண்மையை கண்டடைய முடியலாம் 

அன்று மதியம் வரை அனைவரும் சித்திரகூட குகையை பார்த்த பின்னர் , அருகில் ஒருங்கியிருந்த மதிய உணவு கூடத்திற்கு சென்று அனைவரும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். எங்களைத் தவிற பிற அனைவரும் மந்தாகினியில் குளித்து விட்டிருந்தபடியால் மத்திய உணவிற்கு பிறகு அவர்கள் சித்ரக்கூடத்திலிருந்து அலகாபாத் போகும் பாதையில் உள்ள பிற இடங்களை பார்க்க திட்டமிட்டிருந்தனர் . நாங்கள் அவர்களுடன் மத்திய உணவை முடித்துக்கொண்டு அவர்கள் அலகாபாத் புறப்படுவதற்குள்ளாக , மந்தாகினியில் குளித்து விட்டு பின் அவர்களுடன் சென்று இணைந்து கொள்ளலாம் என மத்திய உணவிற்கு பிறகு மந்தாகினியில் குளிக்க சென்றோம்

மந்தாகினி நதி ஆழமற்று ஒரு சிற்றோடைப் போல ஓடிக்கொண்டிருந்ததால் அதில் குளிக்க முடியாது .பக்கத்தில் உள்ள தடுப்பு அணைப்போல இருந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று குளிக்கும் அளவிற்கு தண்ணி ஓடிக்கொண்டிருந்தது , அது தேங்கவிடப்பட்ட தண்ணீர் என்பதால் தடுப்பணையை சுற்றிலும் பாசி படர்ந்து கால்வைத்தால் வழுக்கினால் கபால மோட்சம் தரக்கூடிய பெரிய அளவிலான கரடு முரடான பாறைகள் எங்கும் செறிந்திருந்தன , ஜாக்ரதையாக குளிக்க வேண்டும் , நாங்கள் அனைவரும் குளித்து முடித்த பிறகு அங்கிருந்து கிளம்பி எங்களுக்கு முன்பாக சென்றுகொண்டிருக்கும் யாத்திரை குழுவுடன் சென்று இணைந்து கொள்ள வேண்டும் என்கிற திட்டத்திலிருந்தோம்

அவர்கள் இரண்டு பேருந்து மற்றும் ஒரு டவேரா காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர் . மந்தாகினியிலிருந்து நாங்கள் கிளம்புபோது , எனக்கு ஒரு செய்தி வந்தது. அவர்கள் அன்று இரவு அலகாபாத்தில் தங்குவதற்கு போட்டிருந்த இடத்தில் ஏதோ சிக்கல் , எனவே அலகாபாத்தில் இரவு தாங்காமல் அயோத்தியை நோக்கி செல்வதாகவும் , எங்களை வழியில் வந்து இணைந்துகொள்ள சொன்னார்கள் . எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்